Wednesday, August 3, 2011

துடுப்பற்ற ஓடம்...



                                                    
                          
என் அனைத்துச் சுமைகளையும்
சுமந்து எனக்காக தேயும் தாய் சிலந்தி நீ...
உன் சிந்தனைகளில் நான் ஓர்
உயிருள்ள சிற்பம்..
உனை மறக்க நீ எனை நினைப்பவள்...
என் பாசத்தை யாசிக்கும் உன்னை
ஏமாற்றி நான் போடும் வேஷங்கள்
என்னை தலைகுணிய வைக்கிறது
நீ உண்மையில் வைரம்தான்..
அதனால்தான்.. நீ கொண்ட அன்பு
கொஞ்சமும் மாறாமல் உள்ளது..
ஆனால் நானோ உலர்மர பட்டையானேன்..
பச்சையம் இருக்கும் வரை
உன்னோடு ஒட்டியிருந்தேன்..
நான் உதிர்வது என்னையும் உட
உனக்குத்தான் கவலை என்பதை
என்னையும் விட என் ஆன்மாவுக்கு தெரியும்..
நேற்றுக் கண்ட இன்பத்திற்காய்
எனை இன்றுவரை இனிமையூட்டும்
உனை மறந்து போனேன்..
என் கால்கள் கானலை கண்டு
தடம்புறழ்கின்றன..
அன்பே! அலைமோதும்
என் சிந்தனைகளை
சாந்தப்படுத்த எனக்கு முடியவில்லை..
உன் அன்பையும் மீறி
அந்த புயல் என்னை தாக்குவதை
என்னால் தடுக்க முடியவில்லை..
நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்..
                                               

19 comments:

உன் அன்பையும் மீறி
அந்த புயல் என்னை தாக்குவதை
என்னால் தடுக்க முடியவில்லை..
நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்.//என்ன அற்ப்புதமான வரிகள்.. அருமை சகோ..

நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்..


.... very well expressed. super!

நன்றி நன்றி கருண் :)

//ஆனால் நானோ உலர்மர பட்டையானேன்..
பச்சையம் இருக்கும் வரை
உன்னோடு ஒட்டியிருந்தேன்.//

especially this.....

நன்றி சித்ரா அக்கா :)

நன்றி பலே பிரபு :)

உணர்வுகள் அப்படியே வரிகளில் தெரிகிறது .வாழ்த்துகள் :)

நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்..//


வைரமாய் கவிதைக்கு வாழ்த்துக்கள். //

Super kavithai . . .Super kavithai . . .

Hi . . I can t follow your blog . . . If I click follow this blog button it reply error messageHi . . I can t follow your blog . . . If I click follow this blog button it reply error message

நன்றி இராஜராஜேஸ்வரி

Thanks "என் ராஜபாட்டை"- ராஜா.
oh sorry i;ll check on that.
thanks a lot

அருமையான கவிதை ஹரிணி

நன்றி ஆமினா :)

Post a Comment