விழியால் கதை பேசி
வித்தைகளால் கை கோர்த்து
சிரிப்பால் உனை சீண்டி
நாம் சென்ற வீதி எல்லாம்
வாடி நிற்கிறதடி கண்ணம்மா
நான் மட்டும் செல்கையிலே
உன்னருகே நிழலாய்
தொடர்ந்து வர விதி இல்லை
நான் வடிக்கும் கண்ணீரெல்லாம்
நீ நடக்கும் வீதியிலே
மழையாய் பெய்கிறதே
நிரந்தரமாய் அழித்துவிட்ட
தடங்களை தேடியே...............
கலங்காதே கண்மணியே
கண்ணுக்குள் கண்மணியாய்
காலமெல்லாம் நான் இருக்க
காலனவன் சொல்வானோ
காதலது பிரிந்ததேன்று
உனக்கு நானும்
எனக்கு நீயும்
மறுபிறப்பில் காதலராய்
பிறக்க எண்ணி இறைவனவன்
செய்த பிரிவின் விதி என்றே
வாழ்ந்திறப்போம் பொன்மானே
0 comments:
Post a Comment