Friday, November 12, 2010

போதை






"போதை என்பது 
ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து  குடிச்சா அது 
சோசலிசம் தான் " 

தத்துவங்கள் பிறப்பது 
தவறுகளில் 
இருந்தும் அது நம்மையே 
அழித்துவிடுமானால்
மதிகெட்ட  உலகமயமாக்களே    
மதிகெட்டு மங்கையர் 
சீரழிய விதயாகியதேன் ???
மேலை நாடு மோகம் 
மேன்மை கேட்டு நாம் திரிய 
இன்றைய  இளைய சமுதாயம் தறிக்கெட்டு 
நிற்கின்றது 

Thursday, November 11, 2010

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!





1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:
பொதுவாக பெரும்பாலனவர்கள் மற்றவர்களின் விருப்பங்களில் வழிய போய் தலையிடுவது தமக்கு தாமே பிரச்சனையில் முடியும்.
ஏங்க அப்படி போய் நாங்க உதவி செய்யணும்????? மனம் நொந்துகனும்???
நாங்க என்ன  செய்றம்................

நான் நானாக நீ நீயாக.............................



நானும் நீயும் சந்தித்தது 
நிலவில் என்பது 
கனவில் மட்டும் நான் கண்ட 
வாழ்க்கை 

Tuesday, November 9, 2010

யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்!!







எத்தனையோ மாற்றங்கள் இன்றைய யுகத்தில் நடந்து கொண்டிருக்க ஏனோ பெண்களும் அவர்கள் பெற்றோரும் இந்த சீதனம் என்ற சாபத்தில் இருந்து விடுப்படவில்லை 

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

Monday, November 8, 2010

நினைவிருக்கிறதாடா உனக்கு ???




எதற்காய் சந்தித்தித்தோம் 
என்ன செய்தோம் 
எதை கொடுத்தோம் 
எதை எடுத்தோம் 
என்ன பேசினோம் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ????

உன்னை எனக்கு அறிமுகப்படுத்திய 
Facebook
பேசிப்பேசி தீராத உரையாடல்கள் 
நம்மை   சேர்த்த இரவுகள் 
நிஜம் காணா நம் விழிகள் 
எதை ஒதுக்க எதை சேர்க்க ......
நினைவிருக்கிறதாடா   உனக்கு ???

நிஜம் தேடல் மாற்றம் 
ஏன் என் வாழ்க்கை மந்திரமானது 
நிஜத்தில் தொலைத்த  என் உயிரை 
நிழலில் தேடிய குருடியாய்
இவள் ஆனதும் 
தேடித்தேடி கிடைக்கப் பொருளாய் 
நீ போனதும் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ??

தமிழ் இருக்கும் காலம் வரை 
மறக்கா உன் பெயர் .
பாஷை ஒழியும் வரை 
ஒலிக்கும்  உன் குரல் 
நினைவுள்ளவரை இவள் 
நெஞ்சின் ஓவியமாய் 
பதிந்திருக்கும் உன் உருவம் 
எதை எதை சொல்ல நான் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ?

எப்படி நினைவிருக்கும்
கண்ணீராய், கானல் நீராய்
கருவறையில் 
மறைந்து மரணித்து போனது 
என் காதல் அல்லவா

கிறுக்கல்கள்



யார்?


உனக்காய் வாழுமா? 
உறவுகளும் நட்புகளும் 
அதற்காகவாவது 
நம் விழிகளை காயப்படுத்தும் 
துன்பங்கள் வேண்டும் 
நீ தெரிந்து கொள்வாய் உன் கண்ணீர் துடைக்கும் 
கரங்கள் யாருடையதென்பதை.........................





வாழ்க்கை 

இருவரின் தவறினால் 
ஈரைந்து திங்கள் கழித்து 
கருவறையை விட்டு 
இவ்வுலகை நம்பி 
தவழ வரும்  அறியா  ஜீவனின் 
பாவ வரம் 


கனவு 

சிறைஎடுக்கப்பட்ட இதயங்களின் 
சிற்றின்ப வானம் ..................
காதல் காவியங்களின் கானம் 
நினைப்பதெல்லாம் வரையும் ஓவியம் 




Saturday, November 6, 2010

கனவுகள்


உன் ஆசைகள் நிறைவேற 
விதவையாகிபோனது 
பேதையிவள் ஆசைகள்   

உன் கண்களில்   வஞ்சம் தெரியாமல் 
உன்னை இமையாய் யாசித்தது 
குருடியிவள் விழிகள் 

இருந்தும் 

இவளை  மறந்து போன 
உன் மனதின் நினைவுகளை 
மறக்க முடியாது 
தினம் தினம் கனவுகளில் 
உன் தோள் சாய்கிறாள் 
உன் பிரியமானவள்