தேற்றிக்கொள் நெஞ்சே
விதியின் பாதையில்
உன்னோடு பயணிப்பவன்
அவன் இல்லை என்று
தேற்றிக்கொள் நெஞ்சே
வாழ்க்கை பயணத்தில்
உன் சக பயணி
அவன் இல்லை என்று
தேற்றிக்கொள் நெஞ்சே
உன் சந்தோஷம் , துக்கம்
கஷ்டம் பாரம் அனைத்தினதும்
பங்காளன் அவனில்லை என்று
தேற்றிக்கொள் நெஞ்சே
நீ வரைந்த ஓவியத்தின்
அசல் அவன் இல்லை என்று
தேற்றிக்கொள் நெஞ்சே
உன் பெயரருகில் எழுதப்பட்டது
அவன் பெயர் இல்லை என்று
தேற்றிக்கொள் நெஞ்சே
காதல் சேர்த்த நம் உயிர்
வாழ்கையில் சேர
வரம் இல்லை என்றே
தேற்றிக்கொள் என் நெஞ்சே
தேற்றிக்கொள்
தேற்றிக்கொள்
19 comments:
தேற்றிக்கொள் நெஞ்சே
நம்மாலும் இதுபோல்
கவிதை எழுதமுடியும் என்று...!!!!
காதலின் பிரிவு...
வலியாக நெஞ்சில்....
கவிதையும் வலிக்கிறது...
நன்றி கருன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
superb Harini...
Thank you dear :)
அருமையான கவிதை வாழ்ததுகள்
தேற்றிக்கொள்ள முடிந்ததா ??
தேற்றிக்கொள் நெஞ்சே
வாழ்க்கை பயணத்தில்
உன் சக பயணி
எங்கோ காத்திருக்கிறான் என்று!!
உணர்ச்சிகொள் நெஞ்சமே
உனக்கில்லையெனில் யாருக்கு அவர்
என உணர்ச்சிகொள் நெஞ்சமே.!!!
நேசமுடன் ஹாசிம் said...
அருமையான கவிதை வாழ்ததுகள்
தேற்றிக்கொள்ள முடிந்ததா ??
நன்றி ஹாசிம் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
நன்றி middleclassmadhavi உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
நன்றி தம்பி கூர்மதியன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
காதல் சேர்த்த நம் உயிர்
வாழ்கையில் சேர
வரம் இல்லை என்றே
தேற்றிக்கொள் என் நெஞ்சே
தேற்றிக்கொள்//
வணக்கம் சகோதரி, வார்த்தைகளால் மனதிற்கு ஆறுதல் கூறும் வகையில் கவிதை அமைந்திருக்கிறது. ஒரு இறக்கை மூலம் இரணப்பட்ட இதயத்தை வருடும் கவி வரிகளாகத் இக் கவிதையினைப் புனைந்துள்ளீர்கள்.
காதல் தரும் வலி மிக கொடியது ...
அதை உங்கள் வரிகளில் படிக்கும் போது
மனது கனக்கிறது ...
நல்ல வரிகள்
தேற்றிக்கொல்வது அவ்வளவு எளிதானதா?
கவிதை அட்டகாசம்.
நன்றி நிரூபன்
//அரசன் said...
காதல் தரும் வலி மிக கொடியது ...
அதை உங்கள் வரிகளில் படிக்கும் போது
மனது கனக்கிறது ...
நல்ல வரிகள்//
நன்றி அரசன்
//logu.. said...
தேற்றிக்கொல்வது அவ்வளவு எளிதானதா?
கவிதை அட்டகாசம்.//
நன்றி logu..
அருமை ......
காதலும் பஞ்சு போலத்தான் பறக்க மட்டும் தெரியும்
எங்கு பறக்கிறோமென அதற்க்கு தெரிவதில்லை !!!......
-- .............................................
....இதழ் சுந்தர் .....
நன்றி இதழ் சுந்தர் :)
Post a Comment