Sunday, January 30, 2011

நம் தமிழனுக்காய்..............



ஏழையின் சிரிப்பில் இன்பத்தை காண்பது என்பது போய் இப்போ ஏழையின்  அழுகையில் இன்பம் காண் என்பதே நடந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் தமிழினம்  சாவுண்டது  பத்தாதென்று இப்போ அப்பாவி ஏழை மீனவர்களும் இவ்வாறு துடித்து தம்  உயிர் கொடுப்பது பரிதாபமே. 
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை மாறி தமிழன்   என்று சொல்லடா சுட்டு கொல்லடா" என்ற பரிதாப நிலைக்கு தமிழன் உயிருக்கு மதிப்பு போய்விட்டது. அண்மையில் நடந்த மீனவ படு கொலைகளை கண்டித்து உலகில் தமிழர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்க என் சார்பாக நன் என்ன செய்ய முட்யும் என் பார்த்ததில், வலைப்பூக்களில் பலர் தங்கள் வழிகளை, ஆதங்கங்களை தெரிவித்து இருந்தார்கள். அதில் வைகை சகோ அருமையான ஒரு கடிதத்தை பதிவாக போட்டிருந்தார். அதே போல நாம philosophyprabhakaran  உணர்ச்சி துண்டும் விதத்தில் ஒரு பதிவையும் தோழி ரேவா அருமையான ஒரு கவிதையையும் தந்து பதிவுகளாக தந்திருந்தார்கள். அதில் சகோ வைகையின்வைகை பதிவை இங்கு பதிவாக போடலாம் என்று அதை உங்கள் பார்வைக்கு தந்திருக்குறேன் என் கடமையின் சிறு பகுதியாக........................... 



அன்புள்ள முதல்வருக்கு(?!),
    ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை,

 உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால்  உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!


  ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,

   ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!

எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?! உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!

  முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்! "வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!"
      இப்படிக்கு,
     உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்


ஏதோ ஒருவகையில் நம் ஆதரவாய் அவர்களுக்கு வழங்குவோம் 
நம் போடும் சத்தம் சென்றடைய www.savetnfisherman.org  தளத்தில்  நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman , http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?



உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:




நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கிகொடுக்கவும்
  இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.

இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும சொல்லலாம்.

கோடிங்குக்கு: http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
                               http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html

                                     http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_29.html
                                     http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
                                      http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html


டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.

28 comments:

நல்ல பணி! மீனவர்கள் வாழ்வில் நிம்மதி கிட்டுவது எப்போது?

அதற்க்கு பதில் விரைவில் கிடைக்கும் என்று நம்பி ஒன்றுபடுவோம் தோழா
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Good work Sista.!!! Keep it up for our Tamil peoples.
Thodarnthum panungal.
#tnfisherman

-pri-

உங்களின் பங்களிப்புக்கு நன்றி சகோ,

நம்மால் முடிந்தவரையும் பங்கெடுத்துகொண்டு தீர்வு கிடைக்கும்வரை போராடுவோம்.....

மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுபவையும் கண்டிக்கப்படவேண்டியவை இதிலே எனக்கு மாற்றுக்கருத்து இல்லை ஆனால் இன்னொரு உண்மையையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட பலஆயிரம் இலங்கை மீனவர்களின் தொழிலுக்கு அவர்களுது வலைகளுக்கு நட்டஈடு கேட்டு போராட யாரும் முன்வராதது கவலையளிக்கின்றது

சிங்கள நாட்டுப் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும். சிங்கள நாட்டுடன் வணிகத் தொடர்பு வைத்திருக்கும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டிய பொருட்கள் / நிறுவணிங்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்க வேண்டும்.

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -ஜன'2011)

நல்ல பணி! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

கரடியாய் கத்திகொண்டிருக்கிறோம் ஆளும் [ம்ஹும்] வர்க்கத்தின் காதில் கேட்டால் சரி....

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

தொடர்ந்து நம் எதிர்ப்புகளை பதிவு செய்வோம்!

இந்த போராட்டம் மீனவ சகோதரர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழ் சமூதாயத்திற்குமானதாக இருக்கட்டும். ஏனேனில் தமிழனின் உயிர் செல்லாக்காசகிவிட்டது ஒரு சில அரசியல்வியாபாரிகளுக்கு. இனியாவது விழித்துக் கொள்வோம்.

வணக்கம் சகோ, உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி

கருத்திட்டுசென்ற அனைவருக்கும் நன்றிகள்

மிக்க நன்றி சகோ என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு.
கண்டிப்பாக :)

மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை...

நன்றி மதுரை சரவணன் நன்றி ம.தி.சுதா

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

நன்றி பிரபா
இத்துடன் வலைச்சரத்தில் மூன்றாவது தடவை என் பெயர் வந்து விட்டது :)

இரு நாடுகளின் கால்களுக்கிடையில் புட்போலாக மீனவர்களின் வாழ்வு ஆகிவிட்டது. அப்பாவிகளை வைத்து ஈனப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்தச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது.

உங்க உணர்வுக்கு என் வணக்கம்.

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

புதிய பதிவுகளை எந்த வலைப்பூவில் எழுதுகிறீர்கள். தயவு செய்து மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த முடியுமா?

நன்றி நிரூபன்,நன்றி சி.கருணாகரசு

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி பாரத்... பாரதி... :)
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நான் பதிவு போடுவதை கொஞ்சம் நிறுத்தி வைதிருக்குறேன் நண்பா
வெகு சீக்கிரம் தொடர்வேன்
நன்றி

Post a Comment