நேற்றுவரை வானம்
நிலவவளின்
சொந்தம் என
மடந்தையிவள்
பூரித்து நிற்க
பூரித்து நிற்க
இன்றுமுதல் வானம்
மேகத்துக்கு
சொந்தமென்றால்
என்செய்வாள் இம் மதி?
எட்டிப் பிடித்த வானமதை?
நொந்துகொள்வதா? இல்லை
புரிந்து கொண்ட பேதை
இவளின் மடமை என்பதா?
துடித்து நிற்கின்றாள்
முழுமதியிவள்
மூன்றாம் பிறையாய்
வானத்தை எண்ணி
தொடர்கிறது
நிலவவள் பயணம்
பகல் நிலவாய்
தொலைந்து போன
கனவுக்குள்
மீண்டும் மீண்டும்
தொலைந்தவளாய்
0 comments:
Post a Comment