தேற்றிக்கொள் நெஞ்சே 
விதியின் பாதையில்
உன்னோடு பயணிப்பவன் 
அவன் இல்லை என்று 
தேற்றிக்கொள் நெஞ்சே 
வாழ்க்கை பயணத்தில்
உன் சக பயணி
அவன் இல்லை என்று 
தேற்றிக்கொள் நெஞ்சே 
உன் சந்தோஷம் , துக்கம் 
கஷ்டம் பாரம் அனைத்தினதும் 
பங்காளன் அவனில்லை என்று 
தேற்றிக்கொள் நெஞ்சே 
நீ வரைந்த ஓவியத்தின் 
அசல் அவன் இல்லை என்று
தேற்றிக்கொள் நெஞ்சே 
உன் பெயரருகில் எழுதப்பட்டது 
அவன் பெயர் இல்லை என்று 
தேற்றிக்கொள் நெஞ்சே 
காதல் சேர்த்த நம் உயிர் 
வாழ்கையில் சேர 
வரம் இல்லை என்றே 
தேற்றிக்கொள் என் நெஞ்சே 
தேற்றிக்கொள்
தேற்றிக்கொள்









