Thursday, March 14, 2013

வருவது நீ எக்காலம் ......................????


 


எத்திசை நோக்கினும்
உன்னுருவம் வந்தெந்தன்
சிந்தைதனில் நிக்குதடா
பாதை வழி நோக்கியபடி


காஞ்சி பட்டுடுத்து
தலை மேவி பூச்சுடி
நெற்றியிலே பொட்டிட்டு
நீயிட்ட நகை பூட்டி
கானமயில் காத்திருக்கு
மாமனவன் வரவை எண்ணி


உயிர் துடிப்பின் ஓசை கேட்டு
தொடுத்த வைத்த  சரம் சூட்ட
வஞ்சி இவள் பார்வைக்கு

வருவது நீ எக்காலம் ......................????

Monday, July 30, 2012

கலங்காதே கண்மணியே

விழியால் கதை பேசி
வித்தைகளால் கை கோர்த்து
சிரிப்பால் உனை சீண்டி
நாம் சென்ற வீதி எல்லாம்
வாடி நிற்கிறதடி கண்ணம்மா
நான் மட்டும் செல்கையிலே

உன்னருகே நிழலாய்
தொடர்ந்து வர விதி இல்லை
நான் வடிக்கும் கண்ணீரெல்லாம்
நீ நடக்கும் வீதியிலே
மழையாய் பெய்கிறதே
நிரந்தரமாய் அழித்துவிட்ட
தடங்களை தேடியே...............


கலங்காதே கண்மணியே
கண்ணுக்குள் கண்மணியாய்
காலமெல்லாம் நான் இருக்க
காலனவன் சொல்வானோ
காதலது பிரிந்ததேன்று


உனக்கு நானும்
எனக்கு நீயும்
மறுபிறப்பில் காதலராய்
பிறக்க எண்ணி இறைவனவன்
செய்த பிரிவின் விதி என்றே
வாழ்ந்திறப்போம் பொன்மானேThursday, February 2, 2012

கிறுக்கல்கள்...
 தேவதைகள் வாழ பிறப்பதில்லை
வாழ்த்த பிறந்தவர்கள் 

உன் தேவதையும் நீ வாழ வாழ்த்தும் 
காதல் தேவதையானால் உயிரோடு
நீ எனக்கு அளித்துசென்ற 

 நினைவுச்சின்னமாய் 

உனக்குள் உதிர்ந்து விட்ட 
என் எண்ணங்களை போல் 

உதிர்ந்து கிடக்கின்ற 

ரோஜா இதழ்களாய் நான்
 பிரியங்களின் தோழி நான் 

என் பிரியமே எனை விட்டு சென்ற பின் 
பிரிவின் பிரியமானேன் ..........
 

Friday, November 18, 2011

Why This கொலவெறி ????


மாமா மாமான்னு
ஏங்க வச்ச
ஏன்டா என்ன தவிக்கவிட்ட
அம்மு அம்முன்னு
பேசி பேசியே
எந்தன் நெஞ்ச நீ கவுத்த


வச்ச பாசமெல்லாம்
வேசமாச்சே மாமா
உன் பைங்கிளி
இங்க ஏங்குதே மாமா


ஒத்தையில தவிக்கும்
என் மனுசு புரியலையா
எங்கோ நீ நினைக்க
பாவி மக உறுகுரனே

ஒருமுறை வருவியா
இல்ல கானலாய்தான்
போவியா????
நிஜத்துலதான் நீ போய்ட்ட
கனவுல ஏனோ படுத்துற
ஏன் இந்த
கொலவெறி மாமு

Wednesday, September 21, 2011

கனவே கலையாதே ...!!!!!!!!!!!
விழி மூடா இரவுகளில்
 நிலவோடு நீண்ட பயணமாய்
என் துணைவரும் உன்
எண்ண சிதறல்கள்

விடியலை நோக்கிய
நிஜமான கற்பனைகளில்
நிழலாய் பதிந்திருக்கும்
உன் நினைவு சுவடுகள்


விடியும் வரை
நடக்கும் நினைவு போராட்டத்தில்
கொஞ்சம் நானாய்
நிறைய நீயாய் -எனை
ஆக்கிரமிகிறாய்

இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்   
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்


Sunday, August 14, 2011

கருகிய மொட்டுக்கள் துளிர்க்கட்டும்நாம் பொதுவாக பிஞ்சு குழந்தைகளையும் பெண்களையும் பூக்களாககடவுளாக பார்க்கிறோம் ஒப்பிட்டு பேசுகிறோம்.ஏன்  ?அவர்கள் மென்மையானவர்கள்,ரசிக்கபடுபவர்கள் ,வாசனைமிக்கவர்கள் ,வண்ணம்மிகுந்தவர்கள் என்பதனாலேயே .
அத்துணை மென்மையான பூக்கள் கசக்கி நாசமாகி எறியப்படுகின்றனர் உலகின் ஒவ்வொரு  மூலையிலும் :( அவர்களுக்கு  தெரியாமலே வேலியே பயிரை மேய்கின்றது ,உண்மைதானே ??
சிறுவர் துஷ்பிரயோகம் ,பாலியல் பலாத்காரம் ,வன்முறை என இவர்கள் கருகி நாசமாகின்றனர் .இதனால் HIV/AIDS  என்னும் விஷகிரிமி இவர்களுக்குள்     புகுத்தப்படுகின்றது ..,,,,,,,,,,,
இதுவெல்லாம் உங்களுக்கு புதியவை அல்ல என்பது தெரிந்ததே இருப்பினும் ,இத்தனை தகவல்கள் தெரிந்த நாம் இவ்வாறானவர்களை எவ்வாறு அங்கீகரிக்கின்றோம் ??? சமுகத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன ???
நான் பகிர்ந்திருக்கும்  இந்த வீடியோவை பாருங்கள் சுனிதா கிருஷ்ணன் ,

இந்தியாவில் சிறுவர் துஷ்பிரயோகம்  பாலியல் துன்புறுத்தல் , பாலியல் பலாத்காரம் மற்றும் அதில் பாதிக்கபட்டவர்களுக்க தம் வாழ் நாளை அர்ப்பணித்து சேவை ஆற்றி வருபவர் .
அவர்கள் பாதிக்கபட்டவர்களாக அன்றி சமுகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கிகாரத்தை கொடுக்க போராடும் ஒரு பெண் 
இந்த வீடியோதான் என்னை எந்த பதிவை எழுத தூண்டியது.
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை சவால்கள் ?இது உலகமா இல்லை நரகமா என்ற கேள்வி என்னுள் :(
குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்ப சூழ்நிலை இந்த பிஞ்சு குழந்தைகளையும் ,பெண்களையும் சாகடித்து விட்டதே :"(
கருகி போன மொட்டுக்கள் குப்பையில் தூக்கி   எரிந்து விட்டு சமுகம் ,தனி மனித சமத்துவம் ,மனிதாபிமானம், உரிமைகள்  பற்றி சமுகத்தில் நாம் பேசுகிறோம் 
வெட்கம் :(,
சமுகம் என்பது யார் ,நான் நீங்கள் எம் குடும்பம் என் சேர்ந்து வரும் தனி மனித சேர்வை  தானே .அப்படி இருக்கும் போது இவ்வாறான துஷ்பிரயோகங்கள் எம் மத்தியில் நடக்கும் போது நமக்கு தெரிந்தவர்களாய்  இருந்தால் வாய் முடி சமுகத்தின் பேரில் தப்பித்து கொள்கிறோம்  அல்லது மூடி மறைத்து விடுகிறோம் . இவ்வாறான தாக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க தவறுகிறோம். 
இவர்கள் உங்களிடம் உதவியை எதிர்பார்கவில்லை தங்களும் சமுகத்தில் தாமும் ஒருவராக அங்கிகரிக்கப்படுவதையும், அவ்வாறு   தாக்கப்பட தமக்காக குரல் குடுக்கவும் இன்னொருவர் அவ்வாறு நாசமாக்கப்படுவதை தடுப்பதையுமே   எதிர்பார்கிறார்கள்.
நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள் கருகிய இவ் மொட்டுக்கள் மீண்டும் துளிக்ர்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். இவ்வாறானவர்கள் உங்களிடத்தில் இருந்தால் அவர்கள் வாழ் வழி செய்து கொடுங்கள்.சிறு துளி பேரு வெள்ளம் இவ்வாறு ஒவ்வொரு தனி மனிதனும் நினைப்பான்  என்றால் அது சமுக நினைப்பாய் மாறிவிடும் அல்லவா.
இந்த வீடியோவை  பகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் திருந்துவார்   என்றால் அதுவே அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்   

               நன்றி Thursday, August 4, 2011

மாற்றம்
நீ நீயாக
நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்

என்னுள் நான்
ஆறுதல் தேடுகையில்
நினைவெல்லாம் நீயாய்
என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்........

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ......

தினம் சிரித்து
ஆனந்த பறவையாய்
ஓடித்திரிந்த பழைய
நிம்மதி , ஆறுதல்
காதல் , நட்பு
மொத்தத்தில் பழைய
துஷி வேண்டும்
தருவாயா ?