Thursday, November 18, 2010

சமூக சேவகி



தினம் தினம் 
இருள்  சூழ்ந்த பொழுதுகளின்
மாமிச கருடன்களுடன்
வேட்டையாடி தோற்கும் 
ஒரு ஜீவனாய்

தினம் தினம் 
இருவுகளில் சேற்றில்
 மலர்ந்த செந்தமரையாய் 
விடிந்தவுடன் குளியலில்
வெந்தாமரையாய்

உடல் பூசிக்கொண்ட 
வாசனை திரவியங்களிலும் 
மல்லிகைப் பூக்களின் வாசனையிலும் 
மறைந்து போகும் அவள் ரத்த வாடை 

அவள் கருப்பைக்குள் 
விதைகள் நடத்தும் 
போராட்டமதை சமாதானபடுத்த
தனக்குத் தானே 
எதிர்ப்பூசி ஏற்றிக்கொள்ளும் 
தாதியவள் 

காம உணர்வுகளின் 
சிற்றின்ப ஆசை உச்சத்தில் 
தன சுயத்துக்கு விலங்கிட்டு 
உணர்வுகளை புதைக்க 
தனக்குத் தானே புதைகுழி 
வெட்டும் வெட்டியால்

காரிருள் சூழினும் 
மாற்றான் வெறி தீர்க்க 
தன்னை தானே உருக்கி 
வெளிச்சம் தரும் 
மெழுகுவர்த்தி 

விடிய விடிய 
வித்தைகள் காணும் 
திருவிழா....... அதில் 
பாவங்கள் செய்து 
காலையில் குளியலுடன் 
புனிதமடையும் இவள் 
வேசியாலா ??? அல்லது 
சமூக சேவகியா ??????

17 comments:

கவிதை நன்றாக இருக்கிறது. நிறைய விஷயங்களை தைரியமாக கூறியிருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள் சகோதரி

நன்றி அருண்
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :).

நன்றி நன்றி, மகாதேவன்.

இந்த கேள்வி எனக்குள்ளும் பல நாட்களாக இருக்கிறது..நல்லா எழுதுறீங்க..தொடர்ந்து எழுதுங்க...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..

அப்படியா??
நன்றி ஹரிஸ் :)

நன்றி ம.தி.சுதா.

அப்படியா??
நன்றி டிலீப் :)

இன்றே உங்கள் தளத்திற்கு முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

நன்றி Prabhakaran.
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :)

கவிதை மிக நன்றாக உள்ளது. பலவிடயங்களையும்
தொட்டுச்செல்லும் விதம் சிறப்பு. வாழ்த்துக்கள்.

நன்றி Jana.
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :

நன்றி asiya omar.
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும்

அருமையா சொல்லியிருக்கிறீர்கள்...

நன்றி வெறும்பய :)
உங்கள் கருத்துகளும் தொடர்வருகையும் மேலும் என்னை ஊக்கப்படுத்தும் :)

Post a Comment