Monday, November 29, 2010

எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாதுஇன்றைய பதிவு ஒரு சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு வருகிறது.
"வெற்றிகரமான எந்த ஒரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்" என
 நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா, அது எந்தளவுக்கு உண்மை என்பதை உண்மையில் ஆண்கள் தான் கூற வேண்டும். 
சரி சரி அதை விடுவோம் கதைக்கு வருவோம்.
                       ஒருநாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவும் அவரது மனைவியும் தங்கள்  இரவு உணவு வேளையை வித்தியாசமாய் களிப்பதற்கு வெளியிலே செல்ல நினைத்து புறப்பட்டார்கள். வெளியே சென்ற அவர்கள் தங்கள் உணவிற்காய் ஒரு சாதரணமான விடுதிக்குள் நுழைந்தார்கள். 
அங்கு இருவரும் மனம் விட்டு கதைத்துக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவ்விடுதியின் உரிமையாளர் ஒபாமாவிடம் சென்று " சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் உணவின் பின் உங்கள் மனைவியுடன் கொஞ்சம் நான் தனியாக கதைக்கலாமா என் கேட்டார் ???
"என்னடா இவன் ஒரு நாட்டின்  ஜனாதிபதி நான் இருக்க நாட்டின் முதல் பெண்மணியுடன் என்ன கதைக்க போகிறான் என யோசித்துவிட்டு    
"சரி உன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீ என் மனைவியுடன் கதைக்கலாம் என் அனுமதி அளித்தார் 
                                                       சிறிது நேரத்தின்  பின் வந்து அமர்ந்த தன் மனைவியை பார்த்து ""என்ன இந்த விடுதி உரிமையாளன் உன்னோடு தனியாய் கதைக்க அப்படி ஒரு ஆர்வமாய் இருந்தான் ? " என ஒபாமா கேட்க , "ஓ அதுவா அவன் என் இளைமைக்காலத்திலே பைத்தியமாய் என் பின்னால் சுத்தியவன் என கூறினாள். ஓ அப்படியா அப்படி என்றால் நீ அவனை திருமணம் செய்திருந்தால் இந்த அழகிய விடுதியின் உரிமையாளியாய் இருந்திருப்பாய் என கூறி முடிக்கும் முன் அவள் "இல்லை இல்லை அவனை நான் திருமணம் செய்திருந்தால் இப்போது அவன் இந்நாட்டு ஜனாதிபதியாய் இருந்திருப்பான்" என்றால் புன்னகையுடன் :)
                 ஹி ஹி என்னங்க சொல்லுறீங்க இப்போ ? அதுதான் எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது :)

Sunday, November 28, 2010

மலைச்சராலின் 50 தாவது சிதறல்என் வலைப்பூ சகாக்களுக்கு !!!
ஏதோ மனத்தில் வரும் எண்ணமதை 
கிறுக்கிக் கொண்டிருந்த இவள் 
இன்று வலைப்பூவில் தனது  50தாவது 
பதிவை தொட்டுவிட்டாள்

ஏதோ ஒரு ஆர்வக்கோளாறினால் 
ஆரம்பித்துவிட்டேன் 
முதல் பதிவே கவிதையாய் 
தவழ்ந்தது என் "மலை சாரலில்"

வலைப்பதிவை பற்றியே 
பெரிதாய் தெரியாத எனக்கு 
முதல் தெரிந்த ஒரே ஒரு 
வலைப்பூ என் நண்பன் டிலீபினது
அவன் தந்த ஊக்கமும் உதவியும் இன்று என்னை 
50 பதிவையும் எழுத வைத்துவிட்டது

இன்னும் எழுத  வேண்டும் 
வித்தியாசமான பதிவுகளை தர வேண்டும் 
என ஆர்வம் என்னுள். 
ஆரம்பத்தில் பெரிதாய் 
கருத்துகள்  வரவில்லை என்றாலும் 
இப்போ உங்கள் போன்றவர்களின் வருகையும் கருத்துக்களும் 
என்னை அங்கீகரித்திருக்கிறது 
  
மலைச்சாரல் சிந்திய துளிகளை ரசித்து  
வாக்களித்த நண்பர்களுக்கும்  
தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தி வரும் நண்பர்களுக்கும் 
என்னையும் மதித்து பின் தொடரும் நண்பர்களுக்கும் 
அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள் 

     மலைச்சாரல் தொடர்ந்து வீசும் 
                                                
                                                                                    அன்புடன் 
                                                                            ஹரிணி நாதன் 

ஆறுதல்

சத்தமின்றி சேற்றில் விளைந்து
நெல்லில் இருந்து உற்பத்திபெற்ற நீ
இன்று நித்தம் செய்தியாய்
வந்து கொண்டிருக்கிறாய்

சாதம் என உண்டு கொண்டிருந்த
என் மனம் இன்று
கஞ்சியாய் ஆவது
காச்சி குடித்திட
கிடைத்தால் போதுமென
ஆறுதல் கொள்கிறது ....................
  
பி. கு :  என் 50 தாவது பதிவு 

Friday, November 26, 2010

சில நிமிடங்கள்
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது
கனவில் மட்டும்  
நனவாகும் காட்சிகளை,
சிறுப்பிள்ளை தனமான  
குறும்புகளை 
இளமை கால சேட்டைகளை 
எல்லாம் செய்யும் 
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது

எனக்கே சொந்தமான
ஒரு உறவின் தோள் சாய்ந்து
கைகோர்த்து நடக்கும் 
முடிவிலியான பாதையில்
பூக்கள் தூவி வரவேற்பதாய்
துவானம், அதில் 
நம்மை மறக்கும் 
சில கணங்கள்        
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது

நட்பின் அரட்டையில் 
நண்பனின் மொக்கை  ஜோக்ஸும் 
நண்பிகளுடன் சினிமா, Shopping 
உணவுச்சாலை,Beach  என தொடரும் 
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது

Thursday, November 25, 2010

மெல்ல தமிழ் இனி சாகும்கல் தோன்றி மண் தோன்றா 
கால முதுமை  மொழி  என 
நாம் பெருமைப்படும்
செம்மொழியாம் தமிழ்
மெல்ல தமிழ் இனி சாகும்

மூத்தோர் கொண்டாடிய 
கொஞ்சு தமிழ் -இன்று 
கொஞ்சும் தமிழாய் மாறி 
"என்கி டமில் கொன்சம் கொன்சம்
தெர்யும் ( நமிதா ஸ்டைல்) என
பேசும் போதும்
மெல்ல தமிழ் இனி சாகும்

ஆத்திச் சூடியின் இனிமை தெரியா
இளசுகள்
"ஆத்திசூ ஆத்திசூ" என
ரீமிக்ஸில் இனிமை காண்கையில்
 மெல்ல தமிழ் இனி சாகும்

தொலைக்காட்சி, வானொலி
நிகழ்ச்சிகள் எல்லாமே
ஆங்கில கலப்பில் தருகையில் 
அதையே பேசுவதை   பெருமையாய் கொள்கையில் 
மெல்ல தமிழ் இனி சாகும்

தமிழ் எழுத்துக்கள் 247 ல்
காணா வித்தை
26  ல் தேடி பெருமையடைகையில் 
பிள்ளைகளின்     ஆங்கில மொழி மூல
கற்கையில்  பெற்றோர் பெருமை பேசுகையில்
மெல்ல தமிழ் இனி சாகும்

கம்பன் வடித்த தமிழ்
வள்ளுவன் வாழ்ந்த தமிழ்
பாரதி பாடிய தமிழ் 
மூவேந்தர் போற்றிய தமிழ்
சங்கம் வைத்து வளர்த்த தமிழ்
கொள்ளை இன்பம் தரும் தமிழை
தங்லிஷாய்  பேசுகின்ற போது
மெல்ல தமிழ் இனி சாகும் 

Wednesday, November 24, 2010

அந்தி மழை
மேக மூட்டம் மந்தமான 
அந்தி பொழுதுதனில் 
சோ என்ற மழை 
சில்லென்ற சாரல் 
இதமான காற்று 
வானலையில் மெல்லிசை 
கண்ணை  சொக்கும் தூக்கம்
இருந்தும் 
மழையுடன் கொஞ்சம் 
பேச்சு, சண்டை, விளையாட்டு 
"உள்ளே  வா,உள்ளே  வா  
என்ற அம்மாவின் சத்தம் 
உள்ளே வந்ததும் 
தலை தோட்டிவிடும் அப்பா 
சூடாய் ஒரு தேநீர் 
மீண்டும் தூக்கம் தழுவ 
போர்வையை இழுத்து போர்த்தியபடி 
குட்டி தூக்கம் - 
எத்தனை ரசனை இந்த மழையில் 

Monday, November 22, 2010

அம்மா

ஈரைந்து திங்கள் 
 கருவில் சுமந்து 
இன்னும் என்னை உன் மனதில் சுமக்கும் 
உன் அன்புக்கு இணை இல்லை அம்மா 
அன்பெனும் சொல்லுக்கு 
அர்த்தம் காண்பித்துக்கொண்டிருக்கும்
இவ்வுலக தெய்வம் நீ 
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
அம்மா 

தழும்புகள்


என் மனதில் பாய்ந்த
ஹிரோஷிமா நாகசாக்கி
அணுகுண்டா நீ
உயிர் அறுத்து
ஊண்  வெறுத்து
உடல் உருக்கி
கண்ணீர் கசிந்து
உருமாற்றி விட்டாய் என்னை ,
கால மாற்றத்தில் 
காயங்கள் மாறினாலும் 
மாறா தழும்புகளாய்  
விட்டு விட்டு ரணப்படுத்தும் 
உன் நினைவுகள்  

நவீன சுயம்வரம்


ஏதோ ஏதோ கலாச்சாரம் 
என்னெனவோ மாயம் 
எத்தனை எத்தனை மாற்றம் 
இக்காலத்தில் உருவாக்கம் 

மன்னர் கால பெண் பார்ப்பு
சுயம்வரம்
எட்டுத் திக்கு அரசர்கள்
அரண்மனை நிறைய
தோழிகள் புடை சூழ
பெண்ணவள் நாண......
இவளை அடைய நான் புண்ணியம் பெற்றவனோ
வீரமானவனோ???? என 
காட்டிய வித்தையில் அவள் மயங்கி
மன்னவன் கழுத்தில் மாலையிட
நடக்கும் சுயம்வரம்

காலம் செல்ல
ஆண்வீட்டார் குடும்பம்
அமர்திருக்க
பெண்ணவள் வெட்கத்துடன்
தேநீர் நீட்ட குடித்து விட்டு
பெண் பிடித்திருக்குது என
சீருடன் அனுப்புங்க
நடந்தது சுயம்வரம்

ஆனால் இன்று matrimony 
இமெயிலில் படம் பரிமாற
அல்லது தொலைகாட்சியில் பெண் ஜாதகம்
காண்பித்து படம் போடப்பட்டு அல்லது
உரிய பெண்ணுடனோ ஆணுடனோ
பெற்றோர் மேடையில் அமர்ந்திருக்க
கலியா மாலை நிகழ்ச்சியோடு
நடக்கும் நவீன சுயம்வரம் 

Sunday, November 21, 2010

என் காதல்எண்ணங்களே எழுத்துக்களாய் 
எழுத்துக்களே வடிவங்களாய்
என் இதயத்தில் கால் பதித்த 
இனியவனே !
உன் நெஞ்சம் என்னை மறந்த போதிலும் 
நான் இறந்து மண்ணோடு மக்கி 
புழுவாய்  போனாலும் 
உன்னை நினைத்து என் மயானம் கண்ணீர் 
வடித்து கவிதை எழுதும் !

அக்கொடியில் நீ தமிழ் மலராய் 
நான் இக்கொடியில் பாலைவன ரோஜாவாய்
இருந்தும் என் புண்ணியவானே 
உன் புன்னகையால் தான் 
இப்புவியில் நடை பிணமாய் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

 என் இதயம் மட்டும் 
இயங்குவதால் 
உயிர் இருப்பதாக - எனை 
இன்னும் குழியில் இடவில்லை 

அங்கே நீ கண் இமைத்து மூடும் 
ஒவ்வொரு நொடியும் தான் 
இங்கே என் இதயம் துடிக்கிறது 
என் நீலாம்பரி ராகமே 
நீவிடும் முச்சு காற்றைத்தான்  
நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் 

கண்களில் தொடங்கி 
கண்காளால் பேசி 
இதயத்தில் முடியும் காதல்  வேறு
இதயத்தில் தொடங்கி 
கண்களில் முடியும் காதல் வேறு - ஆனால் 
உன் இதயத்தில் ஆரம்பித்து 
என் உயிரில் முடிந்த  காதல் நம்முடையது   


Thursday, November 18, 2010

சமூக சேவகிதினம் தினம் 
இருள்  சூழ்ந்த பொழுதுகளின்
மாமிச கருடன்களுடன்
வேட்டையாடி தோற்கும் 
ஒரு ஜீவனாய்

தினம் தினம் 
இருவுகளில் சேற்றில்
 மலர்ந்த செந்தமரையாய் 
விடிந்தவுடன் குளியலில்
வெந்தாமரையாய்

உடல் பூசிக்கொண்ட 
வாசனை திரவியங்களிலும் 
மல்லிகைப் பூக்களின் வாசனையிலும் 
மறைந்து போகும் அவள் ரத்த வாடை 

அவள் கருப்பைக்குள் 
விதைகள் நடத்தும் 
போராட்டமதை சமாதானபடுத்த
தனக்குத் தானே 
எதிர்ப்பூசி ஏற்றிக்கொள்ளும் 
தாதியவள் 

காம உணர்வுகளின் 
சிற்றின்ப ஆசை உச்சத்தில் 
தன சுயத்துக்கு விலங்கிட்டு 
உணர்வுகளை புதைக்க 
தனக்குத் தானே புதைகுழி 
வெட்டும் வெட்டியால்

காரிருள் சூழினும் 
மாற்றான் வெறி தீர்க்க 
தன்னை தானே உருக்கி 
வெளிச்சம் தரும் 
மெழுகுவர்த்தி 

விடிய விடிய 
வித்தைகள் காணும் 
திருவிழா....... அதில் 
பாவங்கள் செய்து 
காலையில் குளியலுடன் 
புனிதமடையும் இவள் 
வேசியாலா ??? அல்லது 
சமூக சேவகியா ??????

சமர்ப்பணம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!நிஜமில்லா பூமியில் 
உன் காதல் பொய்யானது  
நிஜமே....
போலியான உறவுகள் மத்தியில் 
நீ நடித்த காதல் நாடகம் 
என்னில் அரங்கேறியது 
உண்மையே ....
பொய் கொண்ட உன் விழிகள் 
என் பார்வை பறித்து சென்றது 
மெய்யே.......... - ஆனால்
உண்மையாய்   என் காதல் நீ 
உணர்கையில் ........      
அதை மலர்மாலையாய் 
என் கல்லறை   மீது
 நீ சமர்பிப்பதும் உண்மையாகும் 
என் உயிரானவனே !!!!!!!!!!

Wednesday, November 17, 2010

கிறுக்கல்கள் 2


நிலவு அகதி

நிஜத்தில் தொலைத்த
உறவினை
நிழலில் தேடும் 
குருடியாய்
இவள் மனம்- நீ
ஏற்க மறுத்ததால்
இடமின்றி அகதியாய்
அலைகின்றதுமறு ஜென்மம்

இன்ஜென்மதிலேயே 
மறு ஜென்மம் அனுபவிப்பவள் நான் 
உன் விளையாட்டுக்கு வினையாகிப்போன பின்பும் 
இன்னும் எனக்குள் உன் நினைவுகளால் 
தினம் தினம் செத்து பிழைக்கிறேனே .........

Tuesday, November 16, 2010

அர்த்தநாரிஸ்வர அழகி"ஒரு புல்லாங்குழல்  ஊமையானது 
 ஒரு பூவின் மனம் காயமானது "


இறைவனின் படைப்பினிலே  எனக்கு சில வியப்பும் உண்டு கோவமும் உண்டு.
இன்று  என்ன  பதிவு  போடலாம்  என்ற  சிந்தனையுடன்  பேருந்தில்  பயணித்துக்கொண்டிருந்தபோது   என்  காதருகில்  ஒரு   குரல்  “ஐயோ  எனக்கு  வெட்கமாய்  இருக்குது  அதுவும்   முன்னுக்கே  உட்கார  முடியாதுடா  வேண்டாம்  நான்  நிக்கிறேன்  “என்று தான் நண்பனிடம் கூற
சற்றே  திரும்பி  பார்க்க,  என் அருகில்  ஒரு ஒரு பெண், நான் யோசிச்சேன் ஏன் அப்படி சொன்னாள்  என்று ?? அந்த சந்தேகத்துடன் இருக்க என் பக்கத்து  ஆசனம் காலி ஆக என் அருகில்உட்கார்ந்தாள்  அவள்.சிறிது நேரம் எல்லாரும் என்னையே பார்ப்பது போல் எனக்கொரு உணர்வு. பிறகு தான் புரிந்து கொண்டேன் என் பக்கத்தில் அமர்ந்திருப்பது ஆணும் இல்ல பெண்ணும் அல்ல இரண்டும் கலந்த ஒரு அரவாணி. 
                       உண்மையில் நான் அவர்களை கேள்விபட்டிருக்கிறேனே தவிர இவ்வாறு  அருகில் கண்டதில்லை. அப்போது எனக்குள் தோன்றியது அனுதாபம் அல்ல கோவம், இறைவன் மேலும் சுற்றி இருந்த மனிதர் மேலும்..
 எல்லோரும் ஏதோ பொருட்காட்சிக்கு வந்து புதினம் பார்ப்பது போல் ஒரு அதிசயமாயும்  கேலியாயும் பார்த்தார்கள்.சீ இவர்களும் மனிதர்களா ???
             நானே இப்படி சங்கடப்படும்  போது அவள் எப்படி இந்த உலகத்தில் வாழ்கிறாள் என்பதே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒருவிதமான பேச்சும்,கூச்சமும் ,அவ்விடத்திலேயே செய்துகொண்ட முக அலங்காரமும் கடைசியில் என்னை பார்த்து செய்த புன்னகை எல்லாவற்றையும் ரசித்துகொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன் 

இறைவனின் படைப்பினிலே எல்லோரும் சமம். அவரவக்கு என சில இயல்புகளுடனும் குணங்களுடனும் தனித்துவம் மிக்கவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இவ்வாறான  மனிதர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டுமே தவிர ஏளனம் பண்ண கூடாது. அவ்வாறு பிறந்தது அவர்கள் குற்றமன்று,யாருமே உருவங்களையோ,மதங்களையோ பிறக்கும் முன் கேட்பதில்லை அல்லவா.
மனித நேயம் கொண்ட ஆறறிவு  ஜீவன்களே சற்று சிந்தித்து அவர்களுக்கான இந்த அர்த்தநாரிஸ்வர அழகிகளுக்கு அங்கிகாரத்தை கொடுங்கள் .

Friday, November 12, 2010

போதை


"போதை என்பது 
ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து  குடிச்சா அது 
சோசலிசம் தான் " 

தத்துவங்கள் பிறப்பது 
தவறுகளில் 
இருந்தும் அது நம்மையே 
அழித்துவிடுமானால்
மதிகெட்ட  உலகமயமாக்களே    
மதிகெட்டு மங்கையர் 
சீரழிய விதயாகியதேன் ???
மேலை நாடு மோகம் 
மேன்மை கேட்டு நாம் திரிய 
இன்றைய  இளைய சமுதாயம் தறிக்கெட்டு 
நிற்கின்றது 

Thursday, November 11, 2010

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:
பொதுவாக பெரும்பாலனவர்கள் மற்றவர்களின் விருப்பங்களில் வழிய போய் தலையிடுவது தமக்கு தாமே பிரச்சனையில் முடியும்.
ஏங்க அப்படி போய் நாங்க உதவி செய்யணும்????? மனம் நொந்துகனும்???
நாங்க என்ன  செய்றம்................

நான் நானாக நீ நீயாக.............................நானும் நீயும் சந்தித்தது 
நிலவில் என்பது 
கனவில் மட்டும் நான் கண்ட 
வாழ்க்கை 

Tuesday, November 9, 2010

யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்!!எத்தனையோ மாற்றங்கள் இன்றைய யுகத்தில் நடந்து கொண்டிருக்க ஏனோ பெண்களும் அவர்கள் பெற்றோரும் இந்த சீதனம் என்ற சாபத்தில் இருந்து விடுப்படவில்லை 

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

Monday, November 8, 2010

நினைவிருக்கிறதாடா உனக்கு ???
எதற்காய் சந்தித்தித்தோம் 
என்ன செய்தோம் 
எதை கொடுத்தோம் 
எதை எடுத்தோம் 
என்ன பேசினோம் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ????

உன்னை எனக்கு அறிமுகப்படுத்திய 
Facebook
பேசிப்பேசி தீராத உரையாடல்கள் 
நம்மை   சேர்த்த இரவுகள் 
நிஜம் காணா நம் விழிகள் 
எதை ஒதுக்க எதை சேர்க்க ......
நினைவிருக்கிறதாடா   உனக்கு ???

நிஜம் தேடல் மாற்றம் 
ஏன் என் வாழ்க்கை மந்திரமானது 
நிஜத்தில் தொலைத்த  என் உயிரை 
நிழலில் தேடிய குருடியாய்
இவள் ஆனதும் 
தேடித்தேடி கிடைக்கப் பொருளாய் 
நீ போனதும் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ??

தமிழ் இருக்கும் காலம் வரை 
மறக்கா உன் பெயர் .
பாஷை ஒழியும் வரை 
ஒலிக்கும்  உன் குரல் 
நினைவுள்ளவரை இவள் 
நெஞ்சின் ஓவியமாய் 
பதிந்திருக்கும் உன் உருவம் 
எதை எதை சொல்ல நான் 
நினைவிருக்கிறதாடா   உனக்கு ?

எப்படி நினைவிருக்கும்
கண்ணீராய், கானல் நீராய்
கருவறையில் 
மறைந்து மரணித்து போனது 
என் காதல் அல்லவா

கிறுக்கல்கள்யார்?


உனக்காய் வாழுமா? 
உறவுகளும் நட்புகளும் 
அதற்காகவாவது 
நம் விழிகளை காயப்படுத்தும் 
துன்பங்கள் வேண்டும் 
நீ தெரிந்து கொள்வாய் உன் கண்ணீர் துடைக்கும் 
கரங்கள் யாருடையதென்பதை.........................

வாழ்க்கை 

இருவரின் தவறினால் 
ஈரைந்து திங்கள் கழித்து 
கருவறையை விட்டு 
இவ்வுலகை நம்பி 
தவழ வரும்  அறியா  ஜீவனின் 
பாவ வரம் 


கனவு 

சிறைஎடுக்கப்பட்ட இதயங்களின் 
சிற்றின்ப வானம் ..................
காதல் காவியங்களின் கானம் 
நினைப்பதெல்லாம் வரையும் ஓவியம் 
Saturday, November 6, 2010

கனவுகள்


உன் ஆசைகள் நிறைவேற 
விதவையாகிபோனது 
பேதையிவள் ஆசைகள்   

உன் கண்களில்   வஞ்சம் தெரியாமல் 
உன்னை இமையாய் யாசித்தது 
குருடியிவள் விழிகள் 

இருந்தும் 

இவளை  மறந்து போன 
உன் மனதின் நினைவுகளை 
மறக்க முடியாது 
தினம் தினம் கனவுகளில் 
உன் தோள் சாய்கிறாள் 
உன் பிரியமானவள்