Friday, July 23, 2010

கல்கி வதம்
















அதர்மம் அழிக்க

யுகம் யுகமாய்
அவதரிப்பதாய் கண்ணன்
கீதை சொன்னான்

கண்டதில்லை
கண்ணனவனை
கண்கள் ஒருபோதும் -ஆயினும்
நரகாசுரனை வதம் செய்து
தீப ஒழி ஏற்றினான் அவன் .............
தெய்வம் மனுஷ ரூபேனாம்
என்கிறது சைவம் -அதை
கண்டது உன்னுருவில்
நம் இனம்

கண்ணனுக்கு பின்
அதர்மம் அழிக்க

புறப்பட்டவன் நீயல்லவா
நம் வீராவாய்.......

எடுத்த அவதாரமது
 பாதியிலே ராவணச்சதியால்
சிதைந்தாலும் கலங்கவில்லை
காயப்பட்ட மனது
மீண்டும் நீ வருவாய்
கல்கி அவதாரமெடுத்து
சக்கராயுதம் நீ கொண்டு
கல்கி வதம் நாம் காண

என்று தணியும் எங்கள்
சுதந்திர தாகம் ???????????????

0 comments:

Post a Comment