Friday, December 31, 2010

சென்று வா 2010 ம் ஆண்டே

.


காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 
மேகங்கள் போலே உறவுகள் வரும் போகும் 
ஒரு வருடம் முடிய புதிய வருடம் பிறக்கும் 

என்  வாழ்வில்   2010 
இதமாய் ஆரம்பித்து 
உறவுகள் பல சந்தித்து 
உயிர் சுமக்கும்   காதலுடன் 
உயிர் பிழிந்த பிரிவையும்  கண்டு 
மனம் நொந்து 
ஊன் வெறுத்து 
என் உருமாற்றி செல்லும்
2010 ம் ஆண்டே 

face book என் வாழ்வின் பகுதியாய் 
ஆனதும்,
டிலீப்,.நிரோ , மேனகா என பல சொந்தங்கள் அறிமுகப்படுத்தி 
இன்பமான நிலை தந்து செல்லும்
இந்த 2010  ம் ஆண்டே

வலிகள் மறக்க 
என் உணர்வுகள் வெளிப்படுத்த 
என் மலைச்சாரலை ஆரம்பித்து 
பதிவுலக நண்பர்கள் பலரையும் 
கருத்துகள்  பரிமாற அறிமுகப்படுத்தி 
அமைதியாய் செல்லும் 
  2010 ம் ஆண்டே

 இறுதியில் 
புது விடியலுக்கான எதிர்பார்ப்பு 
நம்பிக்கைக்கான அடித்தளம்
 விடியலுக்கான தேடல்
ஒரு புதிய உறவின் அறிமுகம் 
அனைத்தையும் விதைத்து விட்டு 
என் வாழ்வில்  மறக்கா
 என் எண்ணங்களில்
 உயிரில், ரத்தத்தில் ஞாபகங்களை 
விதைத்து விட்டு செல்லும்
  2010 ம் ஆண்டே
சென்று வா 

Sunday, December 26, 2010

நீ மழழை.....



                                                                 




நீ மழழை.....
தமிழ் தேன் கவிதை.....
ஒரு தாயாக உனைத் தாலாட்ட,
என் தோளில் தாங்குவேன் கண்மணி,
இது தமிழ் தாலாட்டு !
மடியினில் நீ தூங்கு !

நரகத்தைத் தேடித் தேடி நான் போன பாதை -
மிருகத்தைப் போல அன்று நான் வாழ்ந்த வாழ்க்கை-
கால் போன பாதையெங்கும் நடந்தவன் நானே-
தாலாட்டும் தாயை என்றோ இழந்தவன் நானே-
கண்மணி இன்று தான் -
உன்னாலே மனிதன் ஆனேன் !

கருங்கல்லைப் போன்ற நெஞ்சம் கற்பூரம் ஆனதேன்?
எனக்குள்ளே வாழ்ந்திருந்த பேய் ஓடிப் போனதேன்?
நீ இன்றி சொந்தம் இங்கே எனக்கு யார் கண்ணே ?
நீ வாழ வேண்டும் என்றே வாழ்கின்றேன் அன்பே !
கண்மணி கண்மணி ...............
உனக்காகே வாழ்வேன் நானே !

ஆரிராரி ரோ ஆரோ .....
ஆரிராரி ரோ ஆரோ ...










டிஸ்கி : ஒரு காதலனின் தாலாட்டு 
அன்பின் காதலின் வெளிப்பாடாய்
அருமையான ஒரு பாடல்  



Saturday, December 25, 2010

என்னவனே




என் கவிதை  நீ
பொருளும் நீ
எனக்கு கிட்டும்
ஒவ்வொரு பாராட்டும் நீ
என்னை திட்டும்
ஒவ்வொரு   சொல்லும் நீ


உறவு நீ 
என் பிரிவு   நீ
இன்பம் நீ
என் கலக்கம் நீ

சிரிப்பு  நீ    
என் கண்ணீர் நீ
சிந்தும் வியர்வைத்துளி நீ
எண்ணும்    நீ
எழுதும் நீ
வார்த்தை நீ

ஸ்பரிசம் நீ
இம்சை நீ
தேடல் நீ
காற்று நீ

சோகம் நீ
சந்தோஷம் நீ
சுகமும் நீ
ரணமும் நீ
ப்ரியம்   நீ 
செல்லம் நீ

 கோவம் நீ
ஆறுதல் நீ
நோயும் நீ
மருந்தும் நீ
என் இதயத் துடிப்பு நீ
மொத்தத்தில்
சுவாசிக்கும் முச்சு நீ

இவை அனைத்தும் 
நீயாய் இருக்க 
நான் மட்டும் ஏன் ???????

ஏன்டா     என்ன விட்டு போன ????

Saturday, December 18, 2010

விஜயின் Top 10 பாடல்கள்




இன்றைய சினிமா உலக நடிகர்கள் ஒவ்வொருவரும்  தமக்கு என சில தனித்துவமான வழிகளை கொண்டுள்ளனர் 
அன்றைய சிவாஜி -MGR தொடக்கம் ,ரஜனி -கமல் ,விஜய்- அஜித் என் தொடர்ந்து சிம்பு- தனுஷ் என நீண்டு கொண்டு செல்கிறது 
அதிலும் அடுத்த சுப்பர் ஸ்டார் யார் என்ற தேடல் கடுமையாக இருக்கிறது யார்ரும் அறிந்ததே . அதே போல தான் அவர்களது பாடல் தேர்விலும் இருந்து வருகிறது 
         நம் எல்லோருக்கும் பிடித்த நடிகர்கள் இருப்பார்கள் அந்தவகையில் நான் அஜித் ரசிகை .என்னடா இவள் அஜித் பற்றி எழுத போரலோனு யோசிக்காதிங்க இருங்க வாரேன், நேற்று என நண்பன் திலீப் தன்னுடைய தகவல் உலகத்தில் விஜயின் Top 10 பாடல்கள்    என ஒரு பதிப்பு போட்டிருந்தான் .
நான் அஜித் ரசிகை என்பதால் கொஞ்சம் கலாச்சன்    அவனை . அதனால் அவன்டிஸ்கியில் என்னை தொடர் பதுவு எழுதும் படி ஆப்பு வைத்து விட்டான். 
அதனால் நான் விஜயின் பாடல்களில் என் மனத தொட்ட  சில பாடல்களை பகிர்ந்துள்ளேன். வாங்கலே பாக்கலாம் 


1. 




முதலில் எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி முனு முனுக்கும் பாடலான "நினைத்தேன் வந்தாய் " படத்தின் :"என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான் "என்ற பாடல்.கற்பனையில் ,கனவில வரும் தேவதை பெண் தான் முன் காண்கையில் வரும் எண்ண ஓட்டங்கள் வரிகளாக்கப்பட்டிருக்கிறது   

2



என் இரண்டாவது தெரிவு "மின்சாரக் கண்ணா" படத்தின் :"உன் பேர் சொல்ல ஆசைதான் " என்ற பாடல். 
காதலன் அல்லது காதலியின் பெயர் தான் உதடுகளில் உச்சரிக்கப் படுவது ஒரு சுகம் தான் . காதலின் உணர்வுகளை அழகாய் சொல்லும் பாடல் 


3


ஒரு காதலியின் கனவுகளை இதமாய் சொல்லும் ஒரு பாடல் தான் என் முன்றாவது தெரிவு . பத்ரி படத்தின் "காதல் சொல்வது உதடுகள் அல்ல "
இந்த பாடல் என் நண்பன் டிலீப்காக ஜானுவின் ராகமாய் 


4



அடுத்த பாடல் விஜய் MGR  ரேஞ்சுக்கு action  செய்ததால் பிடித்த வித்தியாசமான ஒரு பாடல் வசீகர படத்தின் "நெஞ்சம் ஒருமுறை நீ என்றது "


5

மனதில் நின்ற காதலியே மனைவியாக  வந்தால் யாருக்குத்தான் விருப்பம்  இல்லை. மனதை நெருடிச்செல்லும் பாடல் 
மனதில் நின்ற காதலியே மனைவியாக  வந்தால் யாருக்குத்தான் விருப்பம்  இல்லை. மனதை நெருடிச்செல்லும் பாடல் 
 "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பூவே உனக்கா"க படப் பாடல் 


6
6


என்னை மெய்மறக்கச் செய்யும்  ஒரு பாடல் . காதலன் தான் காதலிக்காய் படும் ஒரு தாலாட்டு.ப்ரியமுட படத்தின் "ஆகாச வாணி நீயே  என் ராணி "


7




அடுத்த பாடல் ஒரு காலத்தில்  எல்லார் வாயிலும் முனு முனுக்கப்பட்ட ஒரு பாடல் "ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் "என் குஷி படுத்திய பாடல்


8

    விஜயின் படங்களில் வந்த ஒரு வித்தியாசமான  மெலடி பாடல் "சக்கரை   நிலவே " என்ற யூத் பட பாடல் . இதில் ஒவ்வொரு  வரியையும்  ரசித்திருக்கிறேன் 

9
என் அடுத்த தெரிவு காதலின் உயிர் வலியை உணர்வுகளுக்குள் கொண்டு சென்ற "நீயா பேசியது " என்ற திருமலை பட பாடல்




10


இறுதியாக தெரிவு செய்தது எல்லோரையும் புரட்டிப் போட்ட ஒரு போக்கிரி  பாடல் விஜய் அசினோடு சேர்ந்து அசத்திய :டொலூ  டொலூ " பாடல் 


                               என்ன என் பாடல் தெரிவுகள் எப்படி இருக்கு??? , என் தெரிவுகள் விஜயின் top 10௦ பாடல் என கூறினாலும் எல்லார் மனத்திலும் இடம் பிடித்த பாடல்களாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை 

டிஸ்கி ;1 எண்ண dileep இப்போ O.K  தானே உங்கள் விருப்பப்படி தொடர் பதிவை தந்துவிட்டேன்  

டிஸ்கி : 2 திலீப் உங்களை அடுத்த பதிவில் நம்ம தல அஜித்தின் supper 10 பாடல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன் (என்ன நாங்களும் ஆப்பு வைப்போமில்ல )
                              

Monday, December 13, 2010

மாற்றமே வாழ்க்கையாகும்:!!!!!!!!!1


பாடல்.:சேரன் .

காற்றோடு போனதெல்லாம் கனவோடு மீளக் கண்டேன்

ஆற்றோடு போனதெல்லாம் அலையோடு சேரக் கண்டேன்
வேற்றவர் நாட்டுக்குள்ளே வேறென்ன கிடைக்குமென்று
தீட்டிய பாடலொன்றே தெருவோரம் முழங்கக் கேட்டேன் .


வற்றாத ஊற்றினோரம் ஆடிய மலரைக் கண்டேன்
கிட்டாத காதலுக்காய் கரைகின்ற கோபம் கொண்டேன்
பாட்டோடு பிறந்த நெஞ்சம் பழுதாகிப் போவதுண்டோ
முற்றாத காதலோடு முழுமையை தேடுகின்றேன்.
                                            (காற்றோடு போனதெல்லாம்...)


நேற்றைய நினைவின் கோலம் நிழலாகி மறைந்த போதும்

தோற்றத்தில் மாற்றம் சேர்ந்து துயரங்கள் சூழ்ந்த போதும்

தோற்காது வாழ்க்கை என்பேன் தொடர்ந்து நான் முன்னே செல்வேன்

மாற்றமே வாழ்க்கையாகும் மாறாமல் ஏதும் உண்டோ...

                                               (காற்றோடு போனதெல்லாம்....) 




மாற்றங்களே நிலையாகிப் போன வாழ்வினிலே 
கடந்தவை கடப்பவை எல்லாம் காட்சியாய் மாத்திரம் 
மனம்தனில் பதிந்து போகிறது 
அண்மையில் என் செவிவழி ஒலித்த  ஒரு இசைத்தட்டின் பாடல் .
அந்த பாடலின்  ஒலி வடிவத்தை தர  முடியாவில்லை அதனால் வரிகளை கிர்ந்துள்ளேன்  





Saturday, December 11, 2010

வீணையடி நீ எனக்கு :!!!!!!!!!!!!!!!!!!!!

                                        


பாட்டிற்கு ஒரு புலவன் பாரதி 
பாரதியின் பாட்டினிலே மயங்காத தமிழர்கள் இருக்க முடியாது.
காகவி பாரதியின் அகவை நன்னாளில் நினைவுகளுடன்..ஒரு பாடல் பகிர்வு..
"எண்ணி எண்ணி பார்த்திடிலோ எண்ணமில்லை நின் சுவைக்கே கண்ணின் மணி போன்றவளே .... கண்ணம்மா "
என ஒரு மனையாளின் அருமை பெருமை பற்றி பேசுகின்றது இப்பாடல்.


     நண்பன் ஒருவன் மூலம் கிடைத்த இப்பாடலை உங்களுகன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைதேன்.

                 இப்பாடலுக்கு உயிரோட்டும் விதமாக அமைந்திருக்கிறது நடிகர்களின் நிறைவான நடிப்பு.
மீதி கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்ப்பார்கிறேன் 

Friday, December 10, 2010

தேடல்!!!!!!!!!!!!!!!!!!!!!


விழி  காணா ஓவியம்  நீ.
 காது  கேட்கா  குரல்  நீ 
பாதங்கள்  எட்டா  தூரம் நீ 
மனது  நிறைந்த  நினைவு  நீ 
தேடல்  தொடர்கின்ற  கனவு   நீ .
விளங்கா  கவிதை  நீ - இருந்தும் 
தொடரும் தேடல்கள் என்னுள்
எல்லைகள் தாண்டி

Wednesday, December 8, 2010

தவிர்க்கிறாய் எனை நீ







இரு மன பரிமாற்றம்தனில்
ஒரு மனம் பறிபோனதற்கு
தினம் தினம் வந்து போகும்
 நினைவின் சாட்சியாய் 
கண்ணீர் துளிகள்  

உன்னை எனக்கு தந்த
அந்த நிமிடங்கள்,
உலகையே நான் வென்று விட்டதை 
உணர்த்திய உன் அருகாமை, 
யாருமே திட்டாத அளவு உன்னை
திட்டித் தீர்த்த   நேரங்கள், 
உயிர்   பிழிந்த உன் பிரிவு,
அத்தனையும் மூச்சிருக்கும் 
வரை மறக்காதட. 

மறைத்த   உண்மைகளில்
மறித்த என்   நிஜங்கள்
உணரவில்லை இன்னும் நீ
புரியவில்லை  என் பந்தம்
மனம் விட்டு பேசிய காலங்கள் அன்று
மனதையே விட்டு விட்டு பேசும் தருணங்கள் இன்று
ரணமாய் கொள்ளும் வேதனையில் இன்று
துடிக்கிறேன்   உள்ளம் நொந்து 
தவிர்க்கிறாய் எனை நீ
தவிக்கிறேன் நான் ஏன் என்று ????? 
  

Tuesday, December 7, 2010

ரிஷானாவின் தண்டனை நிறுத்தம்




சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று 
இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
                 ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் சவுதி மன்னருக்குக் கிடையாது என்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் இணங்கும் பட்சத்திலேயே தண்டனைக்கான இரத்தப்பணம் வழங்கப்பட்டு ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் அந்த ரத்தப்பணம் எனப்படுகின்ற, கொலைக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்காக அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைப் பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்த மரணதண்டனை இடைநிறுத்தம் குறித்த செய்தியைக் கேட்டு ரிஷானாவின் தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
                                          தகவல்:BBC tamil      
.

எனக்கு நீ யார் ???







தனிமை தொலைத்தவனே
இவள் தனிமையின்   காரணமே
இன்பத்தின் உச்சமதை  தந்து
இன்னலை என் வாழ்வாக்கிப்  போனவனே
பதில் சொல் என்னிடம்
எனக்கு நீ யார் ?????

அருகில் இருக்கையில் எண்ணற்ற ஆனந்தம் 
இன்று இருந்தும் தொலைவாகிப்போனாய் 
பிரிதலில்   காதலின் புரிதலை
எனக்கு மட்டும் பரிசாகிப் போனாய்
விடை  சொல் என் பிரியமே
எனக்கு நீ யார் ???

புரியாத புதிராய்
என் வாழ்க்கை
நொடிக்கொரு தரம் மறக்க முனைந்து
மீண்டும் மீண்டும் தோற்று  
 உன்னை சுற்றும் பினிக்ஸ் பறவையாய்...
என் வாழ்க்கை தேடல் தீர்ந்து விடும் முன்னே
சொல்லி விட்டு போ
எனக்கு நீ  யார் ???

Sunday, December 5, 2010

நெஞ்சே....!



இமைக்கும்   நொடிப்பொழுதில் 
என் அருகில் இல்லா
உன் உருவம், 
காற்றில் வரும் 
நின் கானம், 
எனை   விட்டு சென்ற 
உன் மனம் .........
தேடல் தொடரும்   
 எண்ண அலை மீறல் 

எட்டா வான் நீ 
தொடரும் மதி நான் 
பட்டமாய் பறக்கும் 
மன எண்ணல்கள்
அடம் பிடிக்கும் குழந்தையாய் 

என்னென்று புரியும்
நொடிக்கொரு முறை 
உன் பெயர் சொல்லும் 
என் மனம்
 நீ மேகத்தின் சொந்தமென 
எல்லாம் மாறிப்போன பின்னும் 
மாறத்தெரியா நிலவாய் நான் ................

Wednesday, December 1, 2010

சிதறல்கள்


  தனியாய் வாழப் பிடிக்கிறது 
இருந்தும் ஏதோ தடுக்கிறது 
      முகவரி தேட முனைகையிலே 
      னோ உன் முகம் சிரிக்கிறது  

தொலைந்த உறவின் முகவரி தேடி 
              மீண்டும் மீண்டும் உள்ளுக்குள்ளே அழுது 
 வெளியே சிரிப்பது போல் 
பாவனை செய்யும் 

இச்சுட்டி குழந்தையும்

      நானும் ஒன்று ..........................

நிஜங்களின் தேடலை

தொலைத்த மனதுடன் 
ஒரு கணம் எதிரில் 

தோன்றுவாய் என்றே 

வாழ்கிறேன்