Sunday, January 30, 2011

நம் தமிழனுக்காய்..............ஏழையின் சிரிப்பில் இன்பத்தை காண்பது என்பது போய் இப்போ ஏழையின்  அழுகையில் இன்பம் காண் என்பதே நடந்து கொண்டிருக்கிறது.
ஈழத்தில் தமிழினம்  சாவுண்டது  பத்தாதென்று இப்போ அப்பாவி ஏழை மீனவர்களும் இவ்வாறு துடித்து தம்  உயிர் கொடுப்பது பரிதாபமே. 
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை மாறி தமிழன்   என்று சொல்லடா சுட்டு கொல்லடா" என்ற பரிதாப நிலைக்கு தமிழன் உயிருக்கு மதிப்பு போய்விட்டது. அண்மையில் நடந்த மீனவ படு கொலைகளை கண்டித்து உலகில் தமிழர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்க என் சார்பாக நன் என்ன செய்ய முட்யும் என் பார்த்ததில், வலைப்பூக்களில் பலர் தங்கள் வழிகளை, ஆதங்கங்களை தெரிவித்து இருந்தார்கள். அதில் வைகை சகோ அருமையான ஒரு கடிதத்தை பதிவாக போட்டிருந்தார். அதே போல நாம philosophyprabhakaran  உணர்ச்சி துண்டும் விதத்தில் ஒரு பதிவையும் தோழி ரேவா அருமையான ஒரு கவிதையையும் தந்து பதிவுகளாக தந்திருந்தார்கள். அதில் சகோ வைகையின்வைகை பதிவை இங்கு பதிவாக போடலாம் என்று அதை உங்கள் பார்வைக்கு தந்திருக்குறேன் என் கடமையின் சிறு பகுதியாக........................... அன்புள்ள முதல்வருக்கு(?!),
    ஒரு அப்பாவி மீனவனின் கடிதம், நீங்கள் நலமா என்று கேட்க்கப்போவதில்லை,

 உங்கள் நலம் மற்றும் உங்கள் குடும்ப நலம் ஊரே அறியும்! நாங்கள் நலம் என்றும் சொல்லப்போவதில்லை, எங்கள் நாதியற்ற வாழ்க்கையை நாடே அறியும், உங்களுக்கும் உங்கள் அன்னையையும் தவிர்த்து! நீங்கள் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசில் என்ன மரியாதை கொடுப்பார்களோ அந்த மரியாதையை இந்த கடிதத்திற்கு கொடுக்க வேண்டாம்! அது உங்கள் பதவியை காப்பாற்ற எழுதுவது! இது எங்கள் உயிரை காப்பாற்ற எழுதுகிறோம்! தேர்தல் நேரம் வேறு, உங்களுக்கு கூட்டணி பற்றி பேசவும், தொகுதி பங்கீடு பற்றி பேசவுமே நேரம் சரியாக இருக்கும், எங்கள் உயிரை பற்றி உங்களுக்கு கவலைப்பட நேரமிருக்காது! இருந்தாலும்.....எங்களில் ஒருவன் இறந்தால்  உங்கள் ஓட்டு கணக்கில் ஒன்று குறையும், அதற்க்காகவாது கவலைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்!


  ஐநூறு மீனவர்களை சுட்டதர்க்குகூட டெல்லி செல்லாத நீங்கள் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு டெல்லி செல்லப்போவதாக கேள்விப்பட்டேன்! நல்லது....அப்படியே உங்கள் அன்னையிடம் எங்களைப்பற்றியும் சொல்லுங்கள்! பிரான்சில் சிங்கின் தலைப்பாகைக்கு வரிந்து கட்டி பேசிய மன்மோகனிடம் சொல்லுங்கள், இங்கு தமிழ் மீனவனின் தலையே போய்க்கொண்டிருக்கிறது என்று! இலங்கைத்தமிழன் சாகும்போதுதான் இந்திய இறையாண்மை தடுத்தது! இப்பொழுது இந்திய மீனவனே செத்துக்கொண்டிருக்கும் பொழுது எந்த இறையாண்மை தடுக்கிறது என்று கேட்டுச்சொல்லவும்,

   ஆஸ்திரேலியாவில் ஒரு வட இந்தியன் தாக்கப்பட்டால் கொதித்து எழும் இந்திய பத்திரிக்கைகள் இத்தனை மீனவன் இறந்த பின்னும் மௌனம் காப்பது நாங்கள் இந்தியர் இல்லை என்பதாக அர்த்தமா?! அதுசரி....நாங்கள் தேர்ந்தெடுத்த உங்களுக்கே எங்களைப்பற்றி அக்கறை இல்லை..அவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?! ரெம்ப நாளா உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன்...எங்களுக்கென்று ஒரு அமைச்சரை நியமித்தேர்களே...அவர் யார் என்ன பெயர் என்று சொல்லமுடியுமா? இத்தனை நடந்த பிறகும் ஒரு கண்டன அறிக்கை கூட விடாமல் உங்கள் பின்னால் பதுங்கிக்கொள்ளும் அவரை பார்க்கவேண்டும்!

எங்கள் உயிரின் மதிப்பு உங்களுக்கு ஐந்து லட்ச்சத்தோடு முடிந்துவிடுகிறது! என்ன செய்வது உயிரோடு இருந்தால் உங்கள் ஓட்டு கணக்கு அதைவிட கம்மிதான்! இதை மனதில் வைத்தாவது நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்! தமிழின தலைவர் என்று சொல்லியே ஒரு பக்கம் தமிழினத்தையே ஒழித்தாகிவிட்டது! அந்த வெறி பிடித்த வேட்டை நாய்களுக்கு இன்னும் ரத்த வெறி அடங்காமல் இப்பொழுது நாடு தாண்டி நாட்டாமை செய்கின்றது! இங்கு உள்ள தமிழர்களையும் அழித்து விட்டால் உங்கள் வாரிசுகளை எங்கு கொண்டு போய் முதலமைச்சர் ஆக்குவது?! உங்களுக்கு கவலைப்படவேண்டிய விசயந்தான்....யோசிங்க ஐயா! கனிமொழியின் மகன் தலைவராகும் காலத்திலும் கூட வோட்டு போட நாங்கள் வேண்டும்! இந்த படித்தவர்களை நம்ப்பாதீர்கள்! நீங்கள் செய்த ஊழலும், அடித்த கொள்ளையும் தெரிந்துவிட்டால் வோட்டை மாற்றிப்போடும் அபாயம் உண்டு! ஆனால் நாங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய் அரிசிக்கும் இலவச டிவிக்கும் எப்போதும் மாறாமல் இருப்போம்!

  முடிவாக ஒன்று ஐயா....இது முடியாத தொடர்கதை என்று எங்களுக்கும் தெரியும்! அதானால் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள், யார் சாவது என்று தெரியாமலே கடலுக்கு செல்வதை விட...வாரம் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்து அனுப்பிகிறோம்! அவர்கள் வெறி அடங்கும் வரை சுட்டுக்கொல்லட்டும்! மகாபாரத்தில் வருமே அதுபோல! எங்களுக்கும் ஒரு பீமன் வராமலா போவான்?!! அதுவரை உங்கள் கடிதங்கள் தொடரட்டும்! அதுவரை உங்கள் வசனத்தை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்! "வாழ்வது நானாக இருக்க, சாவது தமிழனாக இருக்கட்டும்!"
      இப்படிக்கு,
     உங்கள் ஓட்டு வங்கியில் ஒரு அப்பாவி மீனவன்


ஏதோ ஒருவகையில் நம் ஆதரவாய் அவர்களுக்கு வழங்குவோம் 
நம் போடும் சத்தம் சென்றடைய www.savetnfisherman.org  தளத்தில்  நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman , http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கிகொடுக்கவும்
  இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.

இதுதொடர்பான கருத்தாக்கங்கள் எழுதத்தொடங்கிவிட்டதால், தொடருங்கள்.டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலை தளத்தில் இணைக்க விரும்பினால் [இப்பக்கத்தின் வலதுபுறம் போல] Dashboard -> design ->page template ->add a gadget -> HTML/Java script என்ற கட்ஜெட்டில் கீழுள்ள கோடுகளைப் போட்டு சேமிக்கலாம். அதுபோக மேற்கண்ட விஷயங்களையும சொல்லலாம்.

கோடிங்குக்கு: http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
                               http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html

                                     http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_29.html
                                     http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
                                      http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html


டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.

Wednesday, January 26, 2011

காதல் பூ


காலமெல்லாம் உன் முற்றத்து
வாசனை ரோஜாவாய்
பூக்க ஆசை கொண்ட எண்ணமதை
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணக்க சொல்லி
கொன்றதென்ன நியாயம்


உன் நினைவது
உரமாய், தண்ணீராய் ,காற்றாய்
உட்புகுந்து வேருன்றிய பந்தமத்தை
மண்ணோடு புதைத்து விட்டு - வெறும்
கொடியாய் வலம் வரச் சொல்லவதென்ன நியாயம்

வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து போகிறாய் அன்பே
தொலைந்த வாசத்துக்கு
செயற்கை மணம் (முகவரி) கொடுத்து

Wednesday, January 19, 2011

தோழா வானம் தூரம் இல்லைதோழனே 
எங்கோ பிறந்த  நாம் 
எப்படியோ சந்தித்து 
நண்பர்களாகி 
நட்பெனும் கொடியில் பூக்களானோம்

 என் வாழ்வில் 
இனிய உறவாய் 
அன்பு தோழனாய் 
ஒரு ஆலோசகனாய் 
நுழைந்தாய் .....

தினம் தினம் 
மறக்காத 
சுக விசாரிப்பு 
sms கள், 
சில சண்டைகள் 
சமாதானங்கள்.
fb comments  
வலைப்பூ  பகிரல்கள்  என் தொடர்ந்த 
நம் இணைப்பு  
இனியும் தொடரும் எனும் நம்பிக்கையில் 
உன் நண்பி 

நீ இவள் உறவில்  பங்கெடுத்த போது 
அன்பினால் கலங்கிய விழிகள் 
இன்று நீ கொஞ்சம் தூரம் போகிறாய் என்றதும் 
ஈரமாகிறது .

என்ற போதும் 
நீ சாதிக்க வேண்டியவை,
அடைய வேண்டியவை 
வெல்ல வேண்டியவை பல 
அதற்காய் உன் மேல படிப்பு 
என் நண்பன் வென்று வர 
இவள் என்றும்   துணை இருப்பாள் 

உன் பயணம் சிறக்க 
நீ வாழ்வில் மேலும் வளர 
உன் மேல் படிப்பு வெற்றி பெற
வாழ்த்துகள் டிலீப் 

"தோழா வானம் தூரம் இல்லை "

Sunday, January 16, 2011

நினைவுகள் ...


சில நினைவுகள் 
பல உறவுகளை 
நினைவுப்படுத்தும்...
எனக்கு உறவுகளே 
உன் நினைவுகள்தான் 
காதலியே....


Saturday, January 15, 2011

தை பிறந்தால் வழி பிறக்கும்

பொங்கும் பாலைப்போல 
இனித்திடும் கரும்பை போல 
மணக்கும் மஞ்சளைப் போல
தித்திக்கும்  பொங்கலைப் போல  
உங்கள் வாழ்வும் தித்திப்பாக அமைய வாழ்த்துக்கள 
வலைப்பூ   நண்பர்கள் அனைவருக்கும் 
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 

Thursday, January 13, 2011

உதவும் கரங்களே

வெட்டுப்பட்ட புண்ணில் 
மீண்டும் வேல் பாய்ந்ததை போல் 
போரில் பட்ட காயம் ஆறுமுன்
இயற்கையின் சீற்றம்  தான் 
எம்மை தாக்கியதே 

 உரிமை இழந்து 
உறவிழந்து நாடோடி வாழ்க்கை
இப்போ இயற்கையின்   கோரத்தாண்டவம் 
எல்லாம் இழந்து 
அரிசி விளையும் நம்மிடம் 
அன்றாட உணவுக்கே வழியின்றி 
உறங்க இடமின்றி 
உள்நாட்டு அகதிகளாய்
அல்லலுறும் எம் உறவுகள் 

உதவும் கரங்களை 
நம்பி கழியும் நாட்கள் 
பச்சிளம் குழந்தைகள் 
பாலுக்கு தத்தளிக்கும் தருணங்கள் 
 


மனிதம் உள்ள உள்ளங்களுக்கு வேண்டுகோள் 
உங்கள் கரமும் இணையட்டும் இவ் உறவுகளுக்கு உதவ 
பொங்கலுக்கு செலவழிக்கும் பணத்தை
இம்முறை அவர்கள் பசி போக்க பயன்படுத்துங்கள் 

Saturday, January 8, 2011

நீ தனியாக இல்லை ...........

நான்குச்  சுவர்களுக்குள்
சிறைப்படும்  உன் உணர்வுகளின் 
ஏக்கம் 
விழிகளுக்குள்ளே     எட்டிப்பார்த்து 
வெளிவருமுன் வற்றிப்போகும் 
உன் அழுகை 

தாய்மடி  தூக்கம் 
தந்தையின் தோழமை 
உடன்  பிறந்தவர் பாசம் 
ஒரு தொலைபேசி அழைப்பில் 
கேட்க    
கொஞ்சிப்பேசிய காதல்  
நினைவிருந்தும் 
கனவில் மட்டும் தரிசனம்  

Thursday, January 6, 2011

மனதின் பதிவுகள்


மனதின் பதிவுகள்" என்ற ஒரு பகுதி 
இன்று முதல்  ஹரிணியின் 
நாட் குறிப்பின்  பக்கங்களில் இருந்து ...........................

பருவமெனும் கீர்த்தனையில் 
ஆதார   ஸ்ருதியாய்
இசை மீட்க வந்தவனே !! 
மனதோடு  வளர்த்து வந்த
அன்பை காதலாக 
அங்கிகரித்த 
இந்நாள் ........... 
என்னென்று சொல்வேன் 

வெளிப்படுத்திய கணப்பொழுதில் 
 உன் விம்பம்  காணத்துடித்ததடா
வஞ்சி  இவள் விழிகள்    

காதலிப்பதை விட 
காதலிக்கப்படுவதின்
இன்பமதை உணர்ந்து நெகிழ்ந்தேன் 

இனி இவள் உன் சொந்தம் 

                         ♥♥   ப்ரியமுடன் துஷி ♥♥

Wednesday, January 5, 2011

நீ...ன்னை முதன்முதலாய் பார்த்த போது 
என் கண்ணுக்குள் - நீ
ன்னை முதன்முதலாய் காதலிக்கும் போது 
என் நெஞ்சுக்குள் - நீ
ன்னை விட்டு பிரியும் போது 
என் கண்ணீருக்குள் - நீ
ன்னை விட்டு உயிர் பிரியும் போது 
என் உயிரே – நீ
                                                                                        
                                                                                               ♥♥ ப்ரியமுடன்  டிலீப் ♥♥
                                            

Monday, January 3, 2011

அந்த நிமிடம் ........
வாசல்தனை 
விழிகள்  மேயும் - உனை
காணாததால் உயிர் வற்றிப்போகும் 
கண்டவுடன் கண்கள் 
நாணம் கொள்ளும் 
வார்த்தை இருந்தும் 
மொழிவற்றிப் போகும் 
கணப்பொழுதில் 
இதயமது ஸ்தம்பித்துப்போம் 
அதில் தோன்றும் எண்ணமது 
"காதலாய் " உருமாறும்  
 
 

Sunday, January 2, 2011

ஹரிணியின் புத்தாண்டு சபதங்கள்

                                           
                                                                    

          வருடம் வருடம் புது ஆண்டு பிறக்கின்றது. நாங்களும் கொண்டாடுகின்றோம் ,அந்த கொண்டாட்டத்துடன் எல்லோரும் போல் நான் ஒவ்வரு வருடமும் சபதம் என்று எடுப்பதில்லை.என நண்பர்கள் ஒவ்வொரு    வருடமும் தங்கள் புத்தாண்டு சபதங்கள் பற்றி என்னோடு பகிர்ந்து கொள்வார்கள்.பிறகு அதை கடைபிடிக்கிறார்களா?என்று பார்த்தால் அவர்களே அதை மறந்து விட்டிருப்பார்கள் அல்லது கடை பிடித்திருக்க மாட்டார்கள் 
        சரி மற்றவர்கள் சொந்த கதை சோக கதை எதற்கு ?? நம்ம கதைக்கு வருவோம்.நான் இன்று வலைப்பூ    பதிவுகளுக்கு சென்ற போது  நிறைய பேர் தங்களது புத்தாண்டு சபதம் பற்றி போட்டிருந்தார்கள் 
அதில்நம்ம Philosophy  பிரபாகரனும் ஒருவர்.

சரி அப்போ இந்த வருடமாவது நம்ம சில சபதங்கள் எடுத்துதான் (கண்டிப்பாக 
நிறைவேற்றும் முயற்சியில் ) பார்ப்போமே என 5 சபதங்கள் எடுத்துள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்லாம் என நினைத்தேன் வாங்க பழகலாம் sorry வாங்க பாக்கலாம்


சபதம் 1கோபத்த குறைச்சி அமைதியானவளா மாறனும்
                                                                         
                                                
       ஏனோ ரொம்ப அமைதியா இருந்த நான் ஒரு வருடமா கொஞ்சம் வாய் ,நிறைய கோபம் என மாறிவிட்டேன். வீட்ல அம்மாட்டயும் இதனால் ஏச்சி வாங்கிறதும் கூடி போச்சி. அதோட சில நேரம் நண்பர்கள் மேல எதுக்கெடுத்தாலும் கோபப்படுவது ஒன்னும் இல்லாதவிஷயத்திற்கும்  சண்டை  பிடிப்பது என எல்லாமே அதிகமாய் போச்சி அதனால் 2011 ல் கோபத்த குறைச்சி அமைதியானவளா மாறனும் என்பது முதல் சபதம் 

சபதம் 2 :  Facebook  வாரத   குறைக்கணும் 

                                                                 
                      Facebook  காலங்கலானாலும் நான் கணக்கு தொடங்கியது 2009      ஜூன் தான்ஆனாலும் என்னுடைய மற்ற நண்பிகளை விட இதில் என வளர்ச்சி அபரிமிதமானது. ஒருநாள் கூட ஏன் ஒரு மணித்தியாலம் கூட நான் போகாமல் இருந்ததில்ல அப்படி ஒன்றி விட்டது. இப்படி இருப்பதனால் என் தொலைபேசி கட்டணம் எகிறியது மட்டும் இல்லாமல் நிறைய பேர் எனக்கு அறிவுரை கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். என் நண்பிகள் உன் புருஷன் தானே Facebook   என்று கூட கிண்டல் பண்ணுவார்கள்.கடந்த வருடத்தில் என் வாழ்கையில் சில மாற்றங்கள் ஏற்பட கூட இது காரணம் :(
அதனால் இந்த வருடத்தில் இருந்து கொஞ்சம் அதையும் குறைச்சிக்கலாம் என்று இருக்கன். என்ன சொல்லுறீங்க ??   any objections and suggestions  ????   

சபதம் 3 :சேமிப்பு  பழக்கம்

                                                        
                   காசு சேமிப்புனா என்னனு கேகுறவள் நான். வர சம்பளத்துல சேமிக்கிதே இல்லன்னு எல்லாரும் என்ன சொல்லுவாங்க என்னுடைய நண்பன் ஒருவன் எப்போதுமே நீ ரொம்ப செலவழிக்காத காசு ரொம்ப முக்கியம் சேறு சேறு என்றே சொல்லிட்டு இருப்பான் அதனால் இந்த வருஷத்தில இருந்தாவது கொஞ்சம் காசு வங்கில போடலாம்னு நினைச்சிருக்கேன். நல்ல பழக்கம் தானே ???சொல்லுங்க 


சபதம் 4: வலைப்பூ பதிவுகள்

                                      
நான் வலைப்பூ ஆரம்பித்து 6 மாதங்கள் ஆனா போதும் அநேகமாக கவிதைகள் பதிவிட்டேனே தவிர தொடர்ந்து பதிவிடுவதில்லை. என் நண்பன் டிலீப் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பான் "பதிவு போடலையா நீ ? போடு போடு இல்லாட்டி பிளாக்கர் பூட்டிட்டு போக வேண்டியது தான் என திட்டிட்டே இருப்பான் அதனால் இந்த வருடமாவது ஒழுங்கா பதிவுகளை போடலாம் என இருக்கேன் மற்றும் கவிதையா போட்டு அறுக்காம புதிய விஷயங்களையும் தரலாம் என்று இருக்கேன் அதுக்கு உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது .சபதம் 5: iPhone வாங்குறது 
                                                        
                      கடைசி சபதம் எப்படியாவது இந்த வருஷம் நான் iPhone வாங்கியே தீரனும். budget போட்டு செலவழிச்சி வாங்கலாமுன்னு நினைச்சிருக்கேன்.                     அப்பாடியோ  ஒரு மாறி என் புத்தாண்டு சபதங்கள சொல்லிட்டேன் அதை நிறைவேற்றுனனா இல்லையா என்றத இந்த வருஷ கடைசில சொல்லுறேன்.எல்லாருக்கும் பிறந்த புத்தாண்டு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் 

"நல்லா இருப்போம் நல்லா இருப்போம்  எல்லோரும் நல்லா இருப்பம்"


Saturday, January 1, 2011

2011 றே வருக

புதியதாய் பிறப்பெடுக்கும் 
புதிய ஆண்டே 
வையகமதில் கால் பதித்திடும் 
2011 றே வருக வருக 


நம் துயரகற்றும் ஒளியாண்டாக !!! 

இருள் மறைந்து ஒளியுண்டாக்கி 

வாழ்வில் நல்வழி,
மனதில் அமைதி 
மட்டற்ற மகிழ்ச்சி 
என சிறப்பான பாதையை 
செதுக்கிடும் சிற்பியாய் 
நீ வருக 

                                                                    

நேசம் நிறைந்த உள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்கள்அனைவருக்கும்
இனிய 2011 ஆம் ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இப் புத்தாண்டு தங்கள் வாழ்விலும் ,தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்
 ,நண்பர்கள் அனைவரது நல்வாழ்விலும் சிறந்த பயன்களை அள்ளித்தர 

"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் " என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை எண்ணி நல்வாழ்த்துக்கள்
                                                          
                                                                                                                                                                                               ஹரிணி நாதன்