Sunday, August 14, 2011

கருகிய மொட்டுக்கள் துளிர்க்கட்டும்



நாம் பொதுவாக பிஞ்சு குழந்தைகளையும் பெண்களையும் பூக்களாககடவுளாக பார்க்கிறோம் ஒப்பிட்டு பேசுகிறோம்.ஏன்  ?அவர்கள் மென்மையானவர்கள்,ரசிக்கபடுபவர்கள் ,வாசனைமிக்கவர்கள் ,வண்ணம்மிகுந்தவர்கள் என்பதனாலேயே .
அத்துணை மென்மையான பூக்கள் கசக்கி நாசமாகி எறியப்படுகின்றனர் உலகின் ஒவ்வொரு  மூலையிலும் :( அவர்களுக்கு  தெரியாமலே வேலியே பயிரை மேய்கின்றது ,உண்மைதானே ??
சிறுவர் துஷ்பிரயோகம் ,பாலியல் பலாத்காரம் ,வன்முறை என இவர்கள் கருகி நாசமாகின்றனர் .இதனால் HIV/AIDS  என்னும் விஷகிரிமி இவர்களுக்குள்     புகுத்தப்படுகின்றது ..,,,,,,,,,,,
இதுவெல்லாம் உங்களுக்கு புதியவை அல்ல என்பது தெரிந்ததே இருப்பினும் ,இத்தனை தகவல்கள் தெரிந்த நாம் இவ்வாறானவர்களை எவ்வாறு அங்கீகரிக்கின்றோம் ??? சமுகத்தில் அவர்களின் எதிர்காலம் என்ன ???
நான் பகிர்ந்திருக்கும்  இந்த வீடியோவை பாருங்கள் 







சுனிதா கிருஷ்ணன் ,

இந்தியாவில் சிறுவர் துஷ்பிரயோகம்  பாலியல் துன்புறுத்தல் , பாலியல் பலாத்காரம் மற்றும் அதில் பாதிக்கபட்டவர்களுக்க தம் வாழ் நாளை அர்ப்பணித்து சேவை ஆற்றி வருபவர் .
அவர்கள் பாதிக்கபட்டவர்களாக அன்றி சமுகத்தில் அவர்களுக்கு ஒரு அங்கிகாரத்தை கொடுக்க போராடும் ஒரு பெண் 
இந்த வீடியோதான் என்னை எந்த பதிவை எழுத தூண்டியது.
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை சவால்கள் ?இது உலகமா இல்லை நரகமா என்ற கேள்வி என்னுள் :(
குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்ப சூழ்நிலை இந்த பிஞ்சு குழந்தைகளையும் ,பெண்களையும் சாகடித்து விட்டதே :"(
கருகி போன மொட்டுக்கள் குப்பையில் தூக்கி   எரிந்து விட்டு சமுகம் ,தனி மனித சமத்துவம் ,மனிதாபிமானம், உரிமைகள்  பற்றி சமுகத்தில் நாம் பேசுகிறோம் 
வெட்கம் :(,
சமுகம் என்பது யார் ,நான் நீங்கள் எம் குடும்பம் என் சேர்ந்து வரும் தனி மனித சேர்வை  தானே .அப்படி இருக்கும் போது இவ்வாறான துஷ்பிரயோகங்கள் எம் மத்தியில் நடக்கும் போது நமக்கு தெரிந்தவர்களாய்  இருந்தால் வாய் முடி சமுகத்தின் பேரில் தப்பித்து கொள்கிறோம்  அல்லது மூடி மறைத்து விடுகிறோம் . இவ்வாறான தாக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க தவறுகிறோம். 
இவர்கள் உங்களிடம் உதவியை எதிர்பார்கவில்லை தங்களும் சமுகத்தில் தாமும் ஒருவராக அங்கிகரிக்கப்படுவதையும், அவ்வாறு   தாக்கப்பட தமக்காக குரல் குடுக்கவும் இன்னொருவர் அவ்வாறு நாசமாக்கப்படுவதை தடுப்பதையுமே   எதிர்பார்கிறார்கள்.
நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த வீடியோவை மீண்டும் ஒரு முறை பாருங்கள் கருகிய இவ் மொட்டுக்கள் மீண்டும் துளிக்ர்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள். இவ்வாறானவர்கள் உங்களிடத்தில் இருந்தால் அவர்கள் வாழ் வழி செய்து கொடுங்கள்.சிறு துளி பேரு வெள்ளம் இவ்வாறு ஒவ்வொரு தனி மனிதனும் நினைப்பான்  என்றால் அது சமுக நினைப்பாய் மாறிவிடும் அல்லவா.
இந்த வீடியோவை  பகிர்வதன் மூலம் யாரோ ஒருவர் திருந்துவார்   என்றால் அதுவே அவர்களுக்கு கிடைத்த அங்கிகாரம்   

               நன்றி 



Thursday, August 4, 2011

மாற்றம்




நீ நீயாக
நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்

என்னுள் நான்
ஆறுதல் தேடுகையில்
நினைவெல்லாம் நீயாய்
என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்........

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ......

தினம் சிரித்து
ஆனந்த பறவையாய்
ஓடித்திரிந்த பழைய
நிம்மதி , ஆறுதல்
காதல் , நட்பு
மொத்தத்தில் பழைய
துஷி வேண்டும்
தருவாயா ?



Wednesday, August 3, 2011

துடுப்பற்ற ஓடம்...



                                                    
                          
என் அனைத்துச் சுமைகளையும்
சுமந்து எனக்காக தேயும் தாய் சிலந்தி நீ...
உன் சிந்தனைகளில் நான் ஓர்
உயிருள்ள சிற்பம்..
உனை மறக்க நீ எனை நினைப்பவள்...
என் பாசத்தை யாசிக்கும் உன்னை
ஏமாற்றி நான் போடும் வேஷங்கள்
என்னை தலைகுணிய வைக்கிறது
நீ உண்மையில் வைரம்தான்..
அதனால்தான்.. நீ கொண்ட அன்பு
கொஞ்சமும் மாறாமல் உள்ளது..
ஆனால் நானோ உலர்மர பட்டையானேன்..
பச்சையம் இருக்கும் வரை
உன்னோடு ஒட்டியிருந்தேன்..
நான் உதிர்வது என்னையும் உட
உனக்குத்தான் கவலை என்பதை
என்னையும் விட என் ஆன்மாவுக்கு தெரியும்..
நேற்றுக் கண்ட இன்பத்திற்காய்
எனை இன்றுவரை இனிமையூட்டும்
உனை மறந்து போனேன்..
என் கால்கள் கானலை கண்டு
தடம்புறழ்கின்றன..
அன்பே! அலைமோதும்
என் சிந்தனைகளை
சாந்தப்படுத்த எனக்கு முடியவில்லை..
உன் அன்பையும் மீறி
அந்த புயல் என்னை தாக்குவதை
என்னால் தடுக்க முடியவில்லை..
நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்..