Friday, August 6, 2010

நீ நான் அவள்



தமிழில்
அன்பான சொல்
"அம்மா "
அழகான சொல்????
"காதல் "
அதன் பொருள்
எனக்கு "நீ"
உனக்கு ???
"அவள்"




????

அவனது கேள்விக்கும்


அவளது பதிலுக்கும்

கேள்விக்குறியாகிப்

போனதேன்(னோ)

நான் ?????



நிஜம் தேடல் மாற்றம்

நான் உன்னுள் தொலைந்து
என்னை தேட
  அவளோ உனக்குள் சிரித்தபடி





Thursday, August 5, 2010

மறக்கா கவிதை


நிசப்த இரவினில்
என் மௌனம் கூட
சில நிமிஷங்களே . அதை
உன் நினைவுகளே
கலைத்துவிட



நிழல் நம்பும்
என் தனிமை
உடல் நம்பிடும்
உன் பிரிவை .........ஏனோ
உயிர் மட்டும்
நம்ப மறுக்க



உணர்வுகளுக்கு
தடை விதித்து
அவற்றை எழுதிலிட
காகிதமெடுத்து
எழுத முற்படுமுன்
சொற்கள் மறக்க

இறுதியில் நீ
மறந்த என் பெயரும்
மறக்க முடியாத
உன் பெயரும்
கனவில் மட்டும்
இணைந்தன அன்பே
மறக்கா கவிதையாய்!



ஜீவமாண்யம்


உனக்குள் நான்
தொலைத்த காதல்
என்றென்றும்
உன் மொழியாய்
உன் பேச்சாய்
உன் வார்த்தையாய்
உன் சிரிப்பாய்
உந்தன் சந்தோஷமாய்
உன் கண்ணீராய்
உன் இதயத் துடிப்பாய்
நீ உள்ளெடுக்கும் மூச்சாய்
உன் மரணத்திலும்
என் இறுதி முச்சு
காற்றாய் உன் இதயம் புகுந்து
என் மரணத்தின் கல்லறையிலும்
உன் ஜீவனாய் வாழும்



எங்கே என் காதலன் ????


அந்திநேர ஜன்னலோரப்
பேருந்துப் பயணம்
எதிரிலே காதல் ஜோடி
கண்களாலேயே ஏதோ
பேசிக்கொள்ள,,,,,,,,,,,,,,,

நிலவவள் சந்திப்பில்
சிவந்த வானம்...........
சற்று மௌனம் எனை தழுவ

"எங்கே என்னவன்
என் அன்புக்காதலன்
ஏனோ இன்னும்
சந்திக்கவில்லையே?"

கொஞ்சம் திமிர்
கொஞ்சம் பிடிவாதம்
கொஞ்சம் வாலு
உண்டனே கோபம் கொள்ளும்
இவளை காண மனமில்லையோ ????

கொஞ்சம் கிறுக்கு தனமும்
ஏதோ கவிதை கிறுக்கும் கற்பனையும்
சகிக்க ஒருவன் பிறக்கவில்லையா ?இல்லை
என் லொள்ளு எவனுக்கும் ஏற்றதில்லையா?

துரத்தி துரத்தி
காதலிக்க வேண்டும்
தினமும் என்னை ரசிக்க வேண்டும்
நித்தம் ஒரு முறை விசாரிக்க வேண்டும்
தோழனாய் அவன் தோல் சாய
குழந்தையாய் அவன் மடியில்
நான் உறங்க வேண்டும்

கண்ணம்மா என செல்லமாய்
எனை அழைத்து பாரதியாரின்
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன் எனக் கொண்ட பொழுதிலே – என்றன்"
என காதிலே முனங்க வேண்டும்.

இன்னும் எத்தனயோ
இருக்கிறது ரகசியமாய்
அவன் கேட்க என்
புலம்பல்கள்

இப்படி ஒருவனை கண்டால்
சொல்லுங்கள் என்னை பற்றி
என்னை காதலிப்பதை விட
நூறு மடங்கு காதலிப்பேன்
நான் அவனை

அப்படியொருவனை
இன்றல்லா விட்டாலும்
சீக்கிரம் என்
கண்ணில் காட்டுவது
யார் பொறுப்பு ??????



பி. கு: என்ன லொள்ளு இவளுக்கு ஹி ஹி ஹி

பின்னிரவில் வீடு திரும்பும் பெண்




பிரிபிரியாய் இழைந்துபோகும்
காற்றில் முகம் கொடுத்து
ஹெட்போனில் காது பொருத்தி
தாழ்தளப் பேருந்தின் தூரத்து மூலையில்
இருள்குடை விரித்த சாலையைப்
பார்த்துவரும் பெண்ணை
நீங்கள் அறிந்திருக்கலாம்.

குழந்தைகள் தூங்காமல் காத்திருக்கலாம்.
மாலை பெய்த சிறுமழையில்
உலர் துணிகள் நனைந்து போயிருக்கலாம்
வாங்கப்படாத ரெஜிஸ்டர் தபால்கள்,
கதவோரம் கேஸ் சிலிண்டர்கள்,
விடாது அழைத்திருக்கக்கூடிய
நீண்டகால தோழி,
பிதுங்கி வழியும் பழைய பேப்பர்,
எல்லாம் அவளுக்காகக் காத்திருக்கலாம்.

பாதியில் நிற்கும் கணினி நிரல்கள்
செய்ய காத்திருக்கும் உதவிகள்
அழைப்புக்கு ஏங்கியிருக்கும் அம்மா
எடுத்துச் செல்லவேண்டிய காகிதங்கள்
எல்லாமும் ஞாபகம் வரலாம்.

காதுக்குள் முயங்கிய இசையும்,
உடல்சோர்வும் பிணைய
சட்டெனத் தன் இருப்பு மறந்து
கணநேரம் துயில் மறைக்க
தூரத்து நட்சத்திரங்களும் நானும்
அவள் கவலைகளை வாங்கிக் கொண்டோம்.

சரியான பேருந்து நிறுத்தத்தில் அவள் இறங்குவது
இனி எங்கள் பொறுப்பு.

Wednesday, August 4, 2010

இருவரி புலம்பல்



காதல்!
நிஜத்தில் தொலைத்ததை
நிழலில் தேடும் இவள் மனம்

மௌனம்
பெண்மை பேசும் காதல் மொழியா? இல்லை
காதலை மறைக்கும் பெண்ணின் மொழியா

மனப்பறவை
எங்கு பறந்தாலும் இறுதியில்
உன் மனமே இவள் சரணாலயம்
நாணல்
எத்திசை காற்றடித்திடினும்
உன் திசைச் சாயும் நாணல் இவள்

விழிகள்
என்னில் உன்னைக்காட்டும்
மாயக்கண்ணாடி

Tuesday, August 3, 2010

விண்ணை தாண்டி வருவாயா ?



சாகும் வரை
உன் மனைவியாய்
வாழ கனாக்களில்
கற்பனைவடித்தேன்
இன்று செத்துக்கொண்டே
வாழ்கிறேன் நீ மறந்துப்போன
காதலியாய்

ஜென்ம ஜென்ம
பந்தமதை
ஒரு நொடியில்
நொறுக்கிச்சென்ற
உன் நினைவுகள்
ரணமாய் கொல்ல
நிமிடங்களை யுகங்களாய்
கழித்து வாழ்கிறேனடா
உன் துஷியாய்
ஒருகணம் என் எதிரில்
தோன்றுவாய் என்றே .....................

ஒற்றை விடுதலை



ஆச்சாரியம் பேசும்
ஆச்சரிய உலகமடா
விதிகளை விரட்டிடும்
விந்தை மானிடமடா
எச்சில் கை
காக்கை விரட்டிடா
எச்சை பேய்களடா

தீட்டு பேசிடும்
தீயவர் சொந்தமடா இது
நாட்டமை சொல்லிடும்
நஞ்சு நரகமடா
எத்தனை பேசினும்
தொடரும் சாபமடா
 பெண்ணாய் பிறந்ததே
தீட்டாமடா

கடவுள் பெண்ணை
படைத்தானாம்
அவனில் சரிப்பாதி
கொடுத்தானாம்
எட்டவில்லை இந்த
மாக்களுக்கு இறைவன்
ஞானம்

பெண்ணவள் தீட்டென்றான்
கோயில் குளம் ஆகதென்றான்
மூன்றுநாள்  தள்ளிவைத்தான்
தொட்டதெல்லாம் தீதென்று
கழுவிவைத்தால்

பெண்ணவள் தீட்டு என்றால்
அர்த்தநாரீஸ்வரனும்
படைத்திட்ட பிரமமும்
காத்திடும் திருமாலும்
அழித்திடும் உருத்திரனும்
தீட்டான் தான் தம் பெண்ணாள்
பாகம்தனை சரிபாதி கொண்டவரை

 சமுதாயத்தை சீர்குலைக்கும்
மூடநம்பிக்கை
சரிபாதி பெண்ணை
அடிமையாய் ஆழும்
ஆணாதிக்கதன்மை
இந்த தீட்டுகளை
தீயிட்டு கொளுத்த வேண்டும்
கட்டவிழ்த்து விடப்பட்ட
காளையார்(காடையர்) நடுவே
கட்டுபாடுடன் காலம் நகர்த்தும்
பெண்மை
ஒற்றை விடுதலையைக் கட்டுடைத்து

Monday, August 2, 2010

விதியா? சதியா?





உயிராய் வந்தென்
உள்ளம் கலைத்தாய்
உறவாய் வந்தென்
நெஞ்சம் புகுந்தாய்

காற்றாய் நீயும்
என்வாசல் வர
மலராய் நானும்
உன் திசை தொடர ............

புயலாய் வந்தென்
கனவு கலைத்து
சூரியனாய் எனை
சுட்டெரித்ததென்ன நியாயம் ????
மெழுகான நானும் உருகேன்
என்று தானோ ????

மொழி ஒன்று சேர்த்த
எம்மை ...... நீயே
விதிவந்து பிரித்தது
என சொல்லுதல் முறையோ ????

ஏன் எனக்கு மட்டும் ???????


எது எந்தன் முதன்மை???
பல உயிர்கள் பிணமாகிய போதும்
நான் உயிர்வாழ்வதா?
எது என்னில் விஷேஷதுவம்???
பட்டினி,உணவுக்காக கையேந்தாது
உண்ண உணவும் உடுத்த உடையும்
நான் கொண்டிருப்பதா??
எது எந்தன் தரம் ???
ஒதுங்க உரையூள், அன்பான குடும்பத்துடன்
நான் வாழ்வதா?
எது என்னை வேறுப்படுத்துவது ?
கவனிப்பார் அற்றவர் மத்தியில்
என்னை கவனிப்பார் பலரிருப்பதா?
"ஏன் எனக்கும் மட்டும் "என்ற கேள்விக்கு
விடையாய் அமையும் இவைகளே.