Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, February 2, 2012

கிறுக்கல்கள்...




 தேவதைகள் வாழ பிறப்பதில்லை
வாழ்த்த பிறந்தவர்கள் 

உன் தேவதையும் நீ வாழ வாழ்த்தும் 
காதல் தேவதையானால் உயிரோடு




நீ எனக்கு அளித்துசென்ற 

 நினைவுச்சின்னமாய் 

உனக்குள் உதிர்ந்து விட்ட 
என் எண்ணங்களை போல் 

உதிர்ந்து கிடக்கின்ற 

ரோஜா இதழ்களாய் நான்




 பிரியங்களின் தோழி நான் 

என் பிரியமே எனை விட்டு சென்ற பின் 
பிரிவின் பிரியமானேன் ..........
 





Friday, November 18, 2011

Why This கொலவெறி ????






மாமா மாமான்னு
ஏங்க வச்ச
ஏன்டா என்ன தவிக்கவிட்ட
அம்மு அம்முன்னு
பேசி பேசியே
எந்தன் நெஞ்ச நீ கவுத்த


வச்ச பாசமெல்லாம்
வேசமாச்சே மாமா
உன் பைங்கிளி
இங்க ஏங்குதே மாமா


ஒத்தையில தவிக்கும்
என் மனுசு புரியலையா
எங்கோ நீ நினைக்க
பாவி மக உறுகுரனே

ஒருமுறை வருவியா
இல்ல கானலாய்தான்
போவியா????
நிஜத்துலதான் நீ போய்ட்ட
கனவுல ஏனோ படுத்துற
ஏன் இந்த
கொலவெறி மாமு

Wednesday, September 21, 2011

கனவே கலையாதே ...!!!!!!!!!!!




விழி மூடா இரவுகளில்
 நிலவோடு நீண்ட பயணமாய்
என் துணைவரும் உன்
எண்ண சிதறல்கள்

விடியலை நோக்கிய
நிஜமான கற்பனைகளில்
நிழலாய் பதிந்திருக்கும்
உன் நினைவு சுவடுகள்


விடியும் வரை
நடக்கும் நினைவு போராட்டத்தில்
கொஞ்சம் நானாய்
நிறைய நீயாய் -எனை
ஆக்கிரமிகிறாய்

இதனை ரசிக்கவே
விழிக்காதிருக்கிறேன்   
கனவிலாவது நீ அருகிருப்பதால்
இப்போதாவது கலையட்டும்
உன் மௌனம்


Thursday, August 4, 2011

மாற்றம்




நீ நீயாக
நான் நானாக
புரியாமல் நகரும் காலங்கள்
விடை சொல்லாமல் நீயும்
விடை தெரியாமல் நானும்

என்னுள் நான்
ஆறுதல் தேடுகையில்
நினைவெல்லாம் நீயாய்
என் கவிகளுக்கெல்லாம்
பொருளாகிறாய்........

கவி தலைப்பும்
என் வாழ்வின் விளக்கமும்
நீயென தெரிந்தும்
வாசித்து விட்டு வெறும்
தலைப்பாய் மட்டும்
போய்விடுகிறாயே...........
என் வாழ்வின் அர்த்தம்
சொல்லாமல் ......

தினம் சிரித்து
ஆனந்த பறவையாய்
ஓடித்திரிந்த பழைய
நிம்மதி , ஆறுதல்
காதல் , நட்பு
மொத்தத்தில் பழைய
துஷி வேண்டும்
தருவாயா ?



Wednesday, August 3, 2011

துடுப்பற்ற ஓடம்...



                                                    
                          
என் அனைத்துச் சுமைகளையும்
சுமந்து எனக்காக தேயும் தாய் சிலந்தி நீ...
உன் சிந்தனைகளில் நான் ஓர்
உயிருள்ள சிற்பம்..
உனை மறக்க நீ எனை நினைப்பவள்...
என் பாசத்தை யாசிக்கும் உன்னை
ஏமாற்றி நான் போடும் வேஷங்கள்
என்னை தலைகுணிய வைக்கிறது
நீ உண்மையில் வைரம்தான்..
அதனால்தான்.. நீ கொண்ட அன்பு
கொஞ்சமும் மாறாமல் உள்ளது..
ஆனால் நானோ உலர்மர பட்டையானேன்..
பச்சையம் இருக்கும் வரை
உன்னோடு ஒட்டியிருந்தேன்..
நான் உதிர்வது என்னையும் உட
உனக்குத்தான் கவலை என்பதை
என்னையும் விட என் ஆன்மாவுக்கு தெரியும்..
நேற்றுக் கண்ட இன்பத்திற்காய்
எனை இன்றுவரை இனிமையூட்டும்
உனை மறந்து போனேன்..
என் கால்கள் கானலை கண்டு
தடம்புறழ்கின்றன..
அன்பே! அலைமோதும்
என் சிந்தனைகளை
சாந்தப்படுத்த எனக்கு முடியவில்லை..
உன் அன்பையும் மீறி
அந்த புயல் என்னை தாக்குவதை
என்னால் தடுக்க முடியவில்லை..
நான் அன்புக்கும் காதலுக்கும் மத்தியில்
தத்தளிக்கும் துடுப்பற்ற ஓடம்..
என் முடிவை நான் அறியேன்..
                                               

Tuesday, June 28, 2011

என் அப்பாவுக்கு,




தத்தி தத்தி நடந்தவள்
சின்ன  இதழ் முத்தமிட்டவள்
வைத்து வைத்து அழகு பார்த்தவள்
சொந்த காலில் நின்று விட்டாள்
என்று பெருமைப்படுகிறாய்


என் தன்னபிக்கையின் பிறப்பிடம்
உற்சாகத்தின் ஊற்றிடம்
சாதனையின் சாய்விடம்
ஆறுதலின் அமைவிடம்
எல்லாம் நீங்கள் தானே


 இன்னும் சிறு பிள்ளையாய்
உன்மடி ஏறி நான் உட்கார
மகிழ்ந்து போகிறாய்
செல்லமாய் கொஞ்சுகிறாய் .........

என் வருங்காலம்
நீ வளர்த்த கனவுகள்
என்னவன் எப்படி வருவானோ?
என் உயிரை நன்றாய் பார்த்து கொள்வானோ ?-உன்
இரவு புலம்பல்கள் என் தாயிடம் .......


குடும்பத்தின் ஆல மரமாய்
அன்போடும் அரவணைப்போடும்
எமை காத்து வருகிறாய்
உனை தந்தையாய் நாம் அடைய
எத்தனை தவம் செய்து விட்டோம்


வாழ்த்துகிறேன் உன் மகள்
வாழ்க நீ பல்லாண்டு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா



Monday, May 2, 2011

புரியாமல் புரிந்த புரியாத புதிர்




நினைவது நீயாக
புலம்புவது நானாக

உணர்வது நீயாக
வெளிப்படுவது நானாக

கண்களது நீயாக
பார்வையது நானாக

சுவையனைத்தும் நீயாக
ருசிப்பது நானாக

உலகனைத்தும் நீயாக
வாழ்கிறவள் நானாக

புரியவில்லை கணக்கு
உனக்கு எல்லாம் அவளாக

கடவுள் வகுத்த கணக்கினில்
கன்னி இவள் தொலைவாக.

Wednesday, April 6, 2011

கிறுக்கல்.......

   



  தமிழ்

அழகான சொல்லெடுத்து
அர்த்தமான பொருள்தனை
இன்பமாய் உணரும் படி
ஆழமாய் கோர்க்கிறேன்
என் கவிகளை
அத்தனையும் ஒன்று சேர்ந்து
ஒற்றை வார்த்தையில்
பிரசவிக்கின்றது
அம்சமான
உன் பெயரை





ஏக்கம்
எட்டாக் கனி நீ
அத்திக்காய் என தெரிந்தும்
எட்டி எட்டிப் பார்கிறேன்
தவறியாவது
என் கையில் விழமாட்டாயா என





காதல்
இரு மனதில்
அரும்பாய் துளிர்த்து
எனக்குள் தளிர்த்து
பாதியிலே
உனக்குள் உதிர்ந்து போன
இலை துளிர் கால உதிர்வு




Wednesday, March 16, 2011

தேற்றிக்கொள் நெஞ்சே



தேற்றிக்கொள் நெஞ்சே
விதியின் பாதையில்
உன்னோடு பயணிப்பவன்
அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
வாழ்க்கை பயணத்தில்
உன் சக பயணி
அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
உன் சந்தோஷம் , துக்கம்
கஷ்டம் பாரம் அனைத்தினதும்
பங்காளன் அவனில்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
நீ வரைந்த ஓவியத்தின்
அசல் அவன் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
உன் பெயரருகில் எழுதப்பட்டது
அவன் பெயர் இல்லை என்று

தேற்றிக்கொள் நெஞ்சே
காதல் சேர்த்த நம் உயிர்
வாழ்கையில் சேர
வரம் இல்லை என்றே
தேற்றிக்கொள் என் நெஞ்சே
தேற்றிக்கொள்

Monday, March 14, 2011

அநாதை காதலி





அன்று ஓயாமல் பேசியவள்
இன்று ஊமையாய் கவி பேசுகிறாள்
காதோரம் பேசிச்சென்ற வாரத்தைகளை
கவியாய் கோர்கிறாள் .....

நிழல்களோடு பேசிப்பேசியே
தீர்ந்துவிடுகின்றன கற்பனைகள்
விடிந்தது அணைந்துவிடும்
விளக்குகள் போல் .....

தொலைத்துவிட துடிக்கிறேன்
நிஜத்தோடு ஒன்றிவிட்ட
உன் நினைவுகளையும்
நீ விட்டுசென்ற
அநாதை காதலியாய்.......

Wednesday, January 26, 2011

காதல் பூ






காலமெல்லாம் உன் முற்றத்து
வாசனை ரோஜாவாய்
பூக்க ஆசை கொண்ட எண்ணமதை
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணக்க சொல்லி
கொன்றதென்ன நியாயம்


உன் நினைவது
உரமாய், தண்ணீராய் ,காற்றாய்
உட்புகுந்து வேருன்றிய பந்தமத்தை
மண்ணோடு புதைத்து விட்டு - வெறும்
கொடியாய் வலம் வரச் சொல்லவதென்ன நியாயம்

வசந்தங்களைதானே யாசித்தேன்
நோயாய் நுழைந்து
மருந்தை தர மறுத்து
உதிர்வை தந்து
மரண அவஸ்தை தந்து போகிறாய் அன்பே
தொலைந்த வாசத்துக்கு
செயற்கை மணம் (முகவரி) கொடுத்து

Sunday, January 16, 2011

நினைவுகள் ...


சில நினைவுகள் 
பல உறவுகளை 
நினைவுப்படுத்தும்...
எனக்கு உறவுகளே 
உன் நினைவுகள்தான் 
காதலியே....


Saturday, January 8, 2011

நீ தனியாக இல்லை ...........





நான்குச்  சுவர்களுக்குள்
சிறைப்படும்  உன் உணர்வுகளின் 
ஏக்கம் 
விழிகளுக்குள்ளே     எட்டிப்பார்த்து 
வெளிவருமுன் வற்றிப்போகும் 
உன் அழுகை 

தாய்மடி  தூக்கம் 
தந்தையின் தோழமை 
உடன்  பிறந்தவர் பாசம் 
ஒரு தொலைபேசி அழைப்பில் 
கேட்க    
கொஞ்சிப்பேசிய காதல்  
நினைவிருந்தும் 
கனவில் மட்டும் தரிசனம்  

Wednesday, January 5, 2011

நீ...



உன்னை முதன்முதலாய் பார்த்த போது 
என் கண்ணுக்குள் - நீ
உன்னை முதன்முதலாய் காதலிக்கும் போது 
என் நெஞ்சுக்குள் - நீ
என்னை விட்டு பிரியும் போது 
என் கண்ணீருக்குள் - நீ
என்னை விட்டு உயிர் பிரியும் போது 
என் உயிரே – நீ




                                                                                        
                                                                                               ♥♥♥ ப்ரியமுடன்  டிலீப் ♥♥♥
                                            

Monday, January 3, 2011

அந்த நிமிடம் ........




வாசல்தனை 
விழிகள்  மேயும் - உனை
காணாததால் உயிர் வற்றிப்போகும் 
கண்டவுடன் கண்கள் 
நாணம் கொள்ளும் 
வார்த்தை இருந்தும் 
மொழிவற்றிப் போகும் 
கணப்பொழுதில் 
இதயமது ஸ்தம்பித்துப்போம் 
அதில் தோன்றும் எண்ணமது 
"காதலாய் " உருமாறும்  
 
 

Friday, December 31, 2010

சென்று வா 2010 ம் ஆண்டே

.


காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் 
மேகங்கள் போலே உறவுகள் வரும் போகும் 
ஒரு வருடம் முடிய புதிய வருடம் பிறக்கும் 

என்  வாழ்வில்   2010 
இதமாய் ஆரம்பித்து 
உறவுகள் பல சந்தித்து 
உயிர் சுமக்கும்   காதலுடன் 
உயிர் பிழிந்த பிரிவையும்  கண்டு 
மனம் நொந்து 
ஊன் வெறுத்து 
என் உருமாற்றி செல்லும்
2010 ம் ஆண்டே 

face book என் வாழ்வின் பகுதியாய் 
ஆனதும்,
டிலீப்,.நிரோ , மேனகா என பல சொந்தங்கள் அறிமுகப்படுத்தி 
இன்பமான நிலை தந்து செல்லும்
இந்த 2010  ம் ஆண்டே

வலிகள் மறக்க 
என் உணர்வுகள் வெளிப்படுத்த 
என் மலைச்சாரலை ஆரம்பித்து 
பதிவுலக நண்பர்கள் பலரையும் 
கருத்துகள்  பரிமாற அறிமுகப்படுத்தி 
அமைதியாய் செல்லும் 
  2010 ம் ஆண்டே

 இறுதியில் 
புது விடியலுக்கான எதிர்பார்ப்பு 
நம்பிக்கைக்கான அடித்தளம்
 விடியலுக்கான தேடல்
ஒரு புதிய உறவின் அறிமுகம் 
அனைத்தையும் விதைத்து விட்டு 
என் வாழ்வில்  மறக்கா
 என் எண்ணங்களில்
 உயிரில், ரத்தத்தில் ஞாபகங்களை 
விதைத்து விட்டு செல்லும்
  2010 ம் ஆண்டே
சென்று வா 

Saturday, December 25, 2010

என்னவனே




என் கவிதை  நீ
பொருளும் நீ
எனக்கு கிட்டும்
ஒவ்வொரு பாராட்டும் நீ
என்னை திட்டும்
ஒவ்வொரு   சொல்லும் நீ


உறவு நீ 
என் பிரிவு   நீ
இன்பம் நீ
என் கலக்கம் நீ

சிரிப்பு  நீ    
என் கண்ணீர் நீ
சிந்தும் வியர்வைத்துளி நீ
எண்ணும்    நீ
எழுதும் நீ
வார்த்தை நீ

ஸ்பரிசம் நீ
இம்சை நீ
தேடல் நீ
காற்று நீ

சோகம் நீ
சந்தோஷம் நீ
சுகமும் நீ
ரணமும் நீ
ப்ரியம்   நீ 
செல்லம் நீ

 கோவம் நீ
ஆறுதல் நீ
நோயும் நீ
மருந்தும் நீ
என் இதயத் துடிப்பு நீ
மொத்தத்தில்
சுவாசிக்கும் முச்சு நீ

இவை அனைத்தும் 
நீயாய் இருக்க 
நான் மட்டும் ஏன் ???????

ஏன்டா     என்ன விட்டு போன ????

Friday, December 10, 2010

தேடல்!!!!!!!!!!!!!!!!!!!!!


விழி  காணா ஓவியம்  நீ.
 காது  கேட்கா  குரல்  நீ 
பாதங்கள்  எட்டா  தூரம் நீ 
மனது  நிறைந்த  நினைவு  நீ 
தேடல்  தொடர்கின்ற  கனவு   நீ .
விளங்கா  கவிதை  நீ - இருந்தும் 
தொடரும் தேடல்கள் என்னுள்
எல்லைகள் தாண்டி

Wednesday, December 8, 2010

தவிர்க்கிறாய் எனை நீ







இரு மன பரிமாற்றம்தனில்
ஒரு மனம் பறிபோனதற்கு
தினம் தினம் வந்து போகும்
 நினைவின் சாட்சியாய் 
கண்ணீர் துளிகள்  

உன்னை எனக்கு தந்த
அந்த நிமிடங்கள்,
உலகையே நான் வென்று விட்டதை 
உணர்த்திய உன் அருகாமை, 
யாருமே திட்டாத அளவு உன்னை
திட்டித் தீர்த்த   நேரங்கள், 
உயிர்   பிழிந்த உன் பிரிவு,
அத்தனையும் மூச்சிருக்கும் 
வரை மறக்காதட. 

மறைத்த   உண்மைகளில்
மறித்த என்   நிஜங்கள்
உணரவில்லை இன்னும் நீ
புரியவில்லை  என் பந்தம்
மனம் விட்டு பேசிய காலங்கள் அன்று
மனதையே விட்டு விட்டு பேசும் தருணங்கள் இன்று
ரணமாய் கொள்ளும் வேதனையில் இன்று
துடிக்கிறேன்   உள்ளம் நொந்து 
தவிர்க்கிறாய் எனை நீ
தவிக்கிறேன் நான் ஏன் என்று ????? 
  

Tuesday, December 7, 2010

எனக்கு நீ யார் ???







தனிமை தொலைத்தவனே
இவள் தனிமையின்   காரணமே
இன்பத்தின் உச்சமதை  தந்து
இன்னலை என் வாழ்வாக்கிப்  போனவனே
பதில் சொல் என்னிடம்
எனக்கு நீ யார் ?????

அருகில் இருக்கையில் எண்ணற்ற ஆனந்தம் 
இன்று இருந்தும் தொலைவாகிப்போனாய் 
பிரிதலில்   காதலின் புரிதலை
எனக்கு மட்டும் பரிசாகிப் போனாய்
விடை  சொல் என் பிரியமே
எனக்கு நீ யார் ???

புரியாத புதிராய்
என் வாழ்க்கை
நொடிக்கொரு தரம் மறக்க முனைந்து
மீண்டும் மீண்டும் தோற்று  
 உன்னை சுற்றும் பினிக்ஸ் பறவையாய்...
என் வாழ்க்கை தேடல் தீர்ந்து விடும் முன்னே
சொல்லி விட்டு போ
எனக்கு நீ  யார் ???