Thursday, July 29, 2010

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ப்ரிட்ஜ்ஜில் வைக்கலாமா?நாம் அன்றாட குளிர்பானங்கள் மற்றும்
பிரபல நிறுவனங்களின் தண்ணீரினை
பாட்டில்களில் வாங்கி குடித்து விட்டு ,
அவற்றை ப்ரிட்ஜ்ஜில் தண்ணீரை குளிர்ச்சிபடுத்த
அந்த பாட்டில்களில் நிரப்பி வைத்து குடித்து வருகிறோம்.
இது எல்லாரும் செய்வது தான்.

இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில்
பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொன்றும் தரம் பிரிக்கப்படுவதாகவும்
அவற்றின் தரம் பிளாஸ்டிக் பாட்டில்களின்அடிப்பகுதியில்
ஒரு முக்கோணத்தில் 1,2,3,4,5,6 என ஏதாவது ஒரு எண்
குறிப்பிடப்பட்டு இருக்கும். பொதுவாக எல்லா நிறுவன தண்ணீர்
பாட்டிகளிலும் 1 ம் எண் போடப்பட்டிருக்கும்

இந்த பாட்டில்களை ஒரு தடவைக்கு மேல் உபயோகிக்க கூடாது.
இதில் தண்ணீர் நிரப்பி குளிர்சாதன பெட்டியில் வைத்து குடிப்பது
உடல் நலத்துக்கு கெடு விளைவிக்கும் .
அடிப்பாகத்தில் 5 அல்லது 5 க்கு மேற்பட்ட எண்ணிடப்பட்ட பிளாஸ்டிக்
பாட்டில்களை தண்ணீர் நிரப்பி குடிக்க பயன்படுத்தலாம் .
5 அல்லது 5 க்கு மேற்பட்ட எண்ணிடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை
குழந்தைகளுக்கு பள்ளிக்கு தண்ணீர் கொடுத்து அனுப்பும் பாட்டிலாக பயன்படுத்த வேண்டும்.5 ஆம் எண்ணுக்கு குறைவான எண்ணுள்ள பாட்டில்களகுழந்தைகளுக்கான ஏன் நாமும் குடிநீர் பாட்டிலாக பயன்படுத்த கூடாது.கண்ணாடி பாட்டில்கள் அல்லது எவர்சிலவர் பாட்டில்களை குடிநீர் பாட்டிலாக பயன்படுத்துவது சால சிறந்தது.
தற்போது பிடிங் பாட்டில்கள் கூட மட்டமான பிளாஸ்டிக் பாட்டிலாக
வருகின்றன. குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நமது
மனநிலையினை என்ன சொல்ல.
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இது பற்றி தெரிவித்து விழிப்புணர்வு
எற்படுத்துவது நமது கடமையாகும்.
               
                       தகவல் . இந்த வார குமுதம்

Monday, July 26, 2010

காத்திருத்தல் பரிசுஎனக்காய் காத்திரு என 
 சொல்லி பிரிந்த உனக்காய் 
 நிமிஷங்கள் வருஷமாய் 
கழிந்திடினும் ........
மாறா உன் நினைவுகளுடன் 
காத்திருப்பின் வலியோடு 
வழி வாசலோரம் 
காத்திருந்த எனக்கோ  
உன் பரிசாகிப்போனது 
என் வாசல் வந்தடைந்த 
மாற்றானுடன் நீ வாழப்போகும் 
வாழ்க்கைக்கான..
அனுமதி பத்திரம் ( திருமண அழைப்பிதழ்
                                                                By Dileep 

Friday, July 23, 2010

வீணை
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ சொல்லடி
சிவ ஷக்தி எனை சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்.................

தந்தி மீட்ட தெரியா கைகளில்
தந்தி அறுக்கப்பட்டு
நாராசமாய் ஒலிப்பதைவிட
நஷ்டமில்லை வீணைக்கு
நலங்கெட்டுப்
புழுதிப்புனலில் புதைந்திருப்பது

எப்பொழுதாவது வீணையை
வீணைக்காய் நெருங்கியிருக்கிறாயா???

தேடல் எனக்கான நிஜமாய்
கண்களில் காதலுடனும்
உண்மையான உள்ளத்துடனும்
நுனிவிரல் தீண்டினாலும் போதும்
நூறு நூறு ஸ்வரப் பிரிகைகளுள்
மூழ்கடிப்பேன் உன்னை
முழுதாய் சுவர்க்கம் சேர்ப்பேன்

அதுவரை
கிடந்துவிட்டுப் போகட்டும் வீணை
கலைமகளின் கைகளிலும்
கவனிப்பாரற்ற மூலையிலும்
மட்டும்.

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ சொல்லடி
சிவ ஷக்தி எனை சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்.................

ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

யுகம் யுகமாய்
வெளியிருப்பவர்
உள்ள செல்லவும்
உள்ளிருப்பவர்
வெளி வரமுடியாமலும்
தொடரும் சங்கிலிப் போராட்டம்

கால மாற்றத்தின்
கோலமதில் பட்ட
ஏமாற்ற்றங்களின்
அழுத்தத்தால்
புழுங்கி புழுங்கி
ரத்த அழுத்தம் தீவிரமடைய

கோபப் புயலாய்
வீசிய பொருட்கள்
இடியாய் மனைவி
குழந்தை மேல் பட்டிடினும்
கண்ணீர் வெள்ளத்துக்கு
காரணமாயினும்
வலுவிழந்த அழுத்தத்தால்
பத்து ரூபாய் மல்லியிலும்
பொம்மையிலும்
வாழ்க்கையை
சகஜ நிலைக்குத் திருப்பும்
சாமானிய‌த் த‌க‌ப்பன்..

ஆயிரந்தான் இருந்தாலும்
அடிச்சாலும் உதைச்சாலும்
ஆசையா 'அதுக்கு
உன்னைத்தானடி தேடி வாரான்!
புரிஞ்சி நடந்துக்கடி என்று
த‌லைமுறை சொன்ன
சுக‌வாழ்வு சூத்திர‌த்தை
நினைவிறுத்தி
இன்னும் வ‌லித்த‌
இடுப்பைத் த‌ட‌விய‌ப‌டி
முக‌ம் க‌ழுவிப் பொட்டிட்டு
க‌ண் அவ‌னுக்காய்
காத்திருக்கும் தாய்..

அப்பாவின் முகத்தில்
புயல் எச்சரிக்கைக் கொடி
பார்த்த மாத்திரத்தில்
அம்மாவின்
க‌ண்ணீர் மழைக்கஞ்சி
அடுத்த‌ வீட்டில்
அடைக்க‌ல‌ம் தேடி
பாச‌ப் பொட்ட‌ல‌த்துக்காய்க்
ஏங்கிக் காத்திருக்கும்
அடிதாங்கிக் குழ‌ந்தை..

அடிக்க‌டி நிக‌ழும்
அந‌ர்த்த‌ங்க‌ள் தாங்கி
முளைத்து, துளிர்த்து
த‌ழைத்து, அழிந்து
மீண்டும் முளைக்கும்
ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்!

கல்கி வதம்
அதர்மம் அழிக்க

யுகம் யுகமாய்
அவதரிப்பதாய் கண்ணன்
கீதை சொன்னான்

கண்டதில்லை
கண்ணனவனை
கண்கள் ஒருபோதும் -ஆயினும்
நரகாசுரனை வதம் செய்து
தீப ஒழி ஏற்றினான் அவன் .............
தெய்வம் மனுஷ ரூபேனாம்
என்கிறது சைவம் -அதை
கண்டது உன்னுருவில்
நம் இனம்

கண்ணனுக்கு பின்
அதர்மம் அழிக்க

புறப்பட்டவன் நீயல்லவா
நம் வீராவாய்.......

எடுத்த அவதாரமது
 பாதியிலே ராவணச்சதியால்
சிதைந்தாலும் கலங்கவில்லை
காயப்பட்ட மனது
மீண்டும் நீ வருவாய்
கல்கி அவதாரமெடுத்து
சக்கராயுதம் நீ கொண்டு
கல்கி வதம் நாம் காண

என்று தணியும் எங்கள்
சுதந்திர தாகம் ???????????????

பெண்!


தாய்க்கு மகளாய்
தந்தைக்கு புதல்வியாய்
உடன் பிறந்தோர்
உற்ற சகோதரியாய்
கொண்டவனின் மனைவியாய்
பிள்ளைகளின் அம்மாவாய்
அனைவருக்கும் தோழியாய்
அவள் காலம் கழிய
தனிமையில்
பேதை மனம் கேட்கிறது
அரைநொடியாவது
உனக்காய் நீ வாழ்ந்தாயா ?

♥ ♥ ♥ பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

♥ ♥ ♥ பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே...
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே..

நேற்று வரை நேரம் போகவில்லையே..
உனதருகே நேரம் போதவில்லையே....
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ...


இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே....♥ ♥ ♥


♥ ♥ ♥ வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை..
பாவை பார்வை மொழி பேசுமே....
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை...
இன்று இந்த நொடி போதுமே....


வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி...
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே....
வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி...
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே....

இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்....
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும்
எனக்கும் ... பூந்தளிரே.....♥ ♥ ♥

♥ ♥ ♥ ohh where would I be
without this joy inside of me
it makes me want, to come alive
it makes me want to fly
into the sky...
ohh where would I be
if I didn't have you next to me
ohh where would I be
ohh where...
ohh where... ♥ ♥ ♥
♥ ♥ ♥ எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே...
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே.....


யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே....
ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே....

பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே...
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே....


இது எதுவோ ....♥ ♥ ♥
♥ ♥ ♥ பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே... புலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்துபோவதில்லையே......


நேற்று வரை நேரம் போகவில்லையே...
உனதருகே நேரம் போதவில்லையே...
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே ....என்ன புதுமை....
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே...இது எதுவோ...♥ ♥ ♥
http://www.youtube.com/watch?v=baaUCiKwRZE

Music : G.V Prakash Kumar


Singers : Roopkumar Rathod , Harini ,Andrea Jeramiah

Thursday, July 22, 2010

வறுமை ஒழிப்பு …………


நாட்டிலும் வறுமை
வீட்டிலும் வறுமை
ஏன் இந்த கொடுமை
என்று ஒழியும்
இந்த வறுமை?????

வானமதை பிடித்திடும்
தொழில்நுட்பம் இருப்பினும்
இல்லை ஏழ்மைக்கு
என்றும் வாழ்வு


சட்டங்கள் உண்டு நாட்டினிலே
செயத்திட்டங்கள் நடக்குது ஊரினிலே
எங்கே ஒழியுது
வறுமை உலகிலே ???

அமெரிக்காவிலும் உண்டு வறுமை
ஆண்டிப்பட்டியிலும் என்ன கொடுமை
தீராத தாகம் ஏழ்மையின் ஏக்கம்
ஏன் இந்த கோலம் ????

ஏழ்மை மட்டும்
வறுமை இல்லைi
அன்புக்கு ஏங்கும்
தனிமை கொள்ளும்

மனிதரும் முதியோரும்
வறியவரே உலகிலே

ஒழிப்பு ஒழிப்பு
வறுமை ஒழிப்பு
நடக்குது எங்கே எங்கே ????

ஹோட்டல் ஒப்ரோயிலே
முதியோர் இல்லத்திலே

என்ன கொடுமையடா ?????

Monday, July 19, 2010

நிலவுப்பயணம்
 நேற்றுவரை வானம்
நிலவவளின்
சொந்தம் என
 மடந்தையிவள்
பூரித்து நிற்க


இன்றுமுதல் வானம்
மேகத்துக்கு
சொந்தமென்றால்
என்செய்வாள் இம் மதி?

எட்டிப் பிடித்த வானமதை?
நொந்துகொள்வதா? இல்லை
புரிந்து கொண்ட பேதை
இவளின் மடமை என்பதா?

துடித்து நிற்கின்றாள்
முழுமதியிவள்
மூன்றாம் பிறையாய்
வானத்தை எண்ணி


தொடர்கிறது
நிலவவள் பயணம்
பகல் நிலவாய்
தொலைந்து போன
கனவுக்குள்
மீண்டும் மீண்டும்
தொலைந்தவளாய்
Friday, July 16, 2010

அடுத்த பொறந்தநாள்எங்கேமா
போய்ட்ட நீ ?

ஏ பேரு லட்சுமி
நெனவிருக்கா
ஒனக்கு ஓ மகள?
எப்படிம்மா
இருப்ப நீ?

ஓ மொகோ
கூட பாத்ததில்லையே


உன்மக
அப்பா சொல்லுவாரு
நீ கருப்பா லட்சணமா
இருப்பனு

அப்படியாம்மா?


நீ சாமிக்கிட
போய் எட்டுவருசமமே
இண்டயோட? ம்
இருக்கும் இண்டைக்கு
எனக்கும் எட்டுவயசம்மாஎன்னோட படிக்கிற
புள்ளங்க எல்லாம்
தங்க அம்மாவோட
பொறந்தநாள் கொண்டாடுறாங்க
ஏன் அம்மா
நீ மட்டும்
சாமிக்கிட போய்ட
என்ன விட்டுட்டு ?


என்னம்மா கோவம்
என்மேல ?

எப்பம்மா நா
அங்கவந்து உன்னோட
பொறந்த நாள் கொண்டாடுறது ?


அன்னம்மா பாட்டி
சாமிகிட வந்தப்ப

எங்கம்மாவகேட்டனு
சொல்லு பாட்டினு
சொல்லி அனுப்பினேனே
சொன்னுச்ச உன் கிட்ட?
சரியம்மா அப்பா
வந்துருச்சி அதுக்கு
தேத்தண்ணி போட்டு குடுக்கன
நா போறே ..................
அடுத்த பொறந்தநாள்
ஒன்னோடதா


Thursday, July 15, 2010

அகதிஅகம் இன்றி
கதிகலங்கி
திக்குதேடி


அம்மா என்றழைக்க
கடுமையாய்
திட்டினான் வேற்றினத்தான்


அந்தம் தேடி
கனடா சென்று
திக்கற்றவனாய்

அமைதியற்று
கண்டதெல்லாம்
திரைக்குப்பின்னால் (சொல்லமுடியாதவை)

அக்கா தங்கை
கணவன் இழந்து
திகைத்திருக்க


அகம்
கலங்கி
திக்குமுக்காடி


அழுத்தம் தாங்காது
கண்ணீருடன்
திலக் தீக்குளித்தான்

அமெரிக்கா
கவனிக்க தமிழில்
திரைப்படமானது

அகதி இவன்
கதை
தீவிரவாதி" என்ற பெயரில்


காதல் பரிசுதனியாய் கழியும்
இராப்பொழுது
இனிமையாய் கழித்த
இராகங்களின்
மீட்டல்களாய்

எப்பொதும்
ஒலி கேட்கும்
என் phone
மௌனமாய்
தனிமையில்

உனக்காய் புன்னைகைத்த
உதடுகள் பேச்சற்று
ஏங்கிய விழிகளோ
கண்ணீரில் மிதக்க

மந்திரமாய் நா
உச்சரித்த
உன் பெயரின்
எழுத்துக்களை
மறக்க முயல்கிறேன்
உன்னை மறக்க தெரியாமல்

 இவைகளின்
மொத்தமும்
காதலின் பரிசாய்
உன்னை தவிர

Tuesday, July 13, 2010

மேலதிக வருமானத்தை எப்படி சேமிக்கலாம்?-சொக்கலிங்கம் பழனியப்பன் , டைரக்டர் , ப்ரகலா வெல்த் மேனஜ்மென்ட்

இப்போதெல்லாம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய லட்சியமே கோடிகளில்தான் ஆரம்பிக்கிறது! அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை..
 பொருளாதாரம் முன்னேற முன்னேற, மக்களின் வருமானமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த முன்னேற்றத்தால், நடுத்தரவர்க்க மக்களிடம் சர்ப்ளஸ் (Surplus) என்று சொல்லப்படும் ‘தேவைக்கு அதிகமான தொகை’யும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இப்படி ‘எக்ஸ்ட்ரா’ வருமானம் வந்தாலும், அதை முறையாகச் சேமிக்காவிட்டால் அது வந்து என்ன லாபம்? பொதுவாக இப்படி பணம் வந்ததும் பலர் அந்தப் பணம் முழுவதையும் தங்களுக்குத் தெரிந்த தொழிலில் அல்லது முதலீட்டில் கொண்டு போய் போட்டுவிடுகிறார்கள்.


அல்லது பக்கத்து வீட்டுக்காரர் செய்கிறார், சொந்தக்காரர் செய்கிறார் அதையே நாமும் செய்துவிடுவோம் என்று செய்துவிடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஸ்பெஷலானவர்கள். நம் ஒவ்வொருவருடைய தேவையும் மாறுபட்டது. அதற்கேற்றார் போலத்தான் நமது சேமிப்புகளும் முதலீடுகளும் அமைய வேண்டும்.


சிலர் இன்று பணம் போட்டால் நாளைக்கே இரட்டிப்பாகிவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பணத்தைப் பெருக்குவதற்கு மேஜிக் எதுவும் இல்லை. மாறாக நீண்ட கால நோக்கும், ஒழுக்கமும், பொறுமையும், தொடர்ந்த முதலீடும் தேவை. இவைகளுடன் நாம் கீழே காணப் போகும் அஸட் அலோகேஷனும் மிக முக்கியம்.


செல்வத்தை உண்டாக்குவது… (Wealth Creation)
செல்வத்தை உண்டாக்குவதற்கு பல வழிகள் உள்ளன. நன்றாகப் படித்து, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைகளில் சேர்வதன் மூலம், பார்க்கும் வேலையில் உயர்வதன் மூலம், புதிய தொழில்களை ஆரம்பிப்பதன் மூலம், இருக்கும் தொழிலை விஸ்தரிப்பு செய்வதன் மூலம் என சொல்லிக்கொண்டே போகலாம்.. இவை எல்லாவற்றையும் விட சில முதலீடுகளின் (பங்குகள், ரியல் எஸ்டேட் போன்றவற்றின்) நுணுக்கத்தை அறிந்து செயல்பட்டால், அதிக செல்வத்தை உண்டாக்கலாம்! இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால், தேடிச் செல்பவர்கள் நிச்சயம் செல்வத்தை உண்டாக்கலாம். அதற்காக நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டி இருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது!


செல்வத்தைப் பாதுகாப்பது… (Wealth Protection)
பாடுபட்டுத் தேடிய செல்வத்தைப் பாதுகாப்பதும் முக்கியமான விஷயம். சாதாரண மக்களுக்கு தங்களுடைய செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ள இன்ஷூரன்ஸைவிட சிறந்த வழி வேறு இல்லை. மாதா மாதம் மிகவும் டைட் பட்ஜெட்டில் சென்று கொண்டிருக்கும் ஒரு குடும்பத்துக்கு, திடீரென்று பெரிய மருத்துவச் செலவுகள் ஏற்பட்டால், அவர்களுடைய சேமிப்பை/ முதலீட்டை அது கரைத்து விடும். அதேபோல் பாடுபட்டு உழைத்து கட்டிய வீடு தீக்கிரையாகிவிட்டால்? உங்களுடைய பல வருட சம்பாத்தியம் வீணாகிவிடும். அதனால் ஆயுள் காப்பீடு, வீட்டு இன்ஷூரன்ஸ், கார் இன்ஷூரன்ஸ், விபத்து இன்ஷூரன்ஸ், தொழில் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய பணக்காரர்களுக்கு பணத்தைப் பாதுகாப்பதற்கு வேறு சில வழிமுறைகளும் உள்ளன.


செல்வத்தை வளர்ப்பது (Growing Your Wealth)
சம்பாதிக்கும் பணத்தில் சர்ப்ளஸை, வேறு பல முதலீடுகளில் பரவலாக முதலீடு செய்வதுதான் சிறந்தது. அது அவர்களின் செல்வத்தை வளர்க்க உதவும்.
இன்றைய காலகட்டத்தில் நடுத்தரவர்க்கத்தினர் முதலீடு செய்யக்கூடிய சொத்து வகைகள் நான்கு:
1. பங்கு சார்ந்த முதலீடுகள்
2. கடன் சார்ந்த முதலீடுகள்
3. ரியல் எஸ்டேட்
4. தங்கம் / வெள்ளி
இவை தவிரவும் வேறு பல முதலீட்டு வகைகளும் உள்ளன. அவை பெரும்பாலும் மிக அதிகப் பணம் உடையவர்கள் மற்றும் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆனால் மேற்கண்ட நான்கு சொத்து வகைகளிலும் தினசரி வர்த்தகம் செய்வதாலோ அல்லது அடிக்கடி வாங்கி விற்பதாலோ செல்வத்தை வளர்க்க முடியாது! நீண்ட நாள் முதலீட்டினால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். மேலும் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். உங்களது முதல் வீட்டைத் தவிர! பங்கு சார்ந்த முதலீடுகளில் செல்லும்போது மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலமாகச் செல்வது நல்லது. விவரம் தெரிந்தவர்கள், நேரம் உள்ளவர்கள் மட்டும் நேரடிப் பங்குகளில் முதலீடு செய்யலாம். எஃப் அண்டு ஓ (F&O) மூலம் செல்வந்தர்கள் ஆனவர்கள் உலகளவில் எவரும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். இது கமாடிட்டியில் (Commodity) தினசரி வர்த்தகம் செய்பவர்களுக்கும் பொருந்தும். ஆகவே சாதாரண முதலீட்டாளர்கள் எஃப் அண்டு ஓ மற்றும் கமாடிட்டியில் சென்று தங்களது கைகளைச் சுட்டுக் கொள்ள வேண்டாம்
கடன் சார்ந்த முதலீடுகளில் பல வகை உள்ளன. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கார்ப்பரேட் டெபாசிட்டுகள் போன்றவற்றை சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் கருதலாம். உச்ச வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும், டீப் டிஸ்கவுன்ட் பாண்டுகளையும் முதலீட்டிற்குக் கருதலாம்.
                            
நீங்கள் செய்யும் ரியல் எஸ்டேட் முதலீடு முதலில் உங்கள் சொந்த வீடாக இருக்கட்டும். அதற்குமேல் முதலீடு செய்யும்போது வீட்டு மனைகள், வீடுகள்/ பிளாட்கள், தோட்டங்கள் போன்றவையாக இருக்கட்டும்.
தங்கம் மற்றும் வெள்ளி பலருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் வைபவங்களுக்காகத் தேவைப்படும். அவ்வாறு தேவைப்படுபவர்கள் நேரடியாக அந்த உலோகத்தை வாங்கிவிடலாம். அது அவர்களுக்கு இரண்டு வகையில் பயன்படும். ஒன்று பிற்காலத் தேவைக்கு. மற்றொன்று சொத்தை பரவலாக்குவதற்கு. தேவை இல்லாதவர்கள் பங்கு மற்றும் கமாடிட்டி சந்தை மூலமாக சிறிது சிறிதாக வாங்கி, தங்களது டீமேட் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.
சேமிப்பு/ முதலீடு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அஸட் அலோகேஷன் (Asset Allocation), அதாவது எந்த வகையான சொத்தில் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பதும்! முதலீடு செய்வதற்குமுன் மூன்றிலிருந்து ஆறுமாத தேவைகளுக்கான பணத்தை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்
             
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மற்றும் முன்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள படங்களில் முறையான ஒதுக்கீடு என்று நாம் கருதுவதைத் தந்துள்ளோம். இது ஒரு பொதுவான அலோகேஷன்தான். நாம் ஒவ்வொருவரும் ஸ்பெஷல்! ஆகவே அலோகேஷனும் நம் ஒவ்வொரு வருக்கும் சிறிது மாறுபடும். உங்கள் நிதி ஆலோசகருடன் ஆலோசித்து உங்களது ஒதுக்கீட்டை செய்யவும். மேலும் நமது வயது மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப இந்த ஒதுக்கீடும் மாறிக்கொண்டிருக்க வேண்டும்.


செல்வத்தைப் பராமரிப்பது (Maintaining Your Wealth)செல்வத்தை உண்டாக்கி, பாதுகாத்து, வளர்ப்பது குறித்து பார்த்தோம்… அவ்வாறு வளர்த்த செல்வத்தை, பராமரிப்பது மிகவும் அவசியம். தங்களிடம் உள்ள சொத்து வகையைப் பொறுத்து, ஒவ்வொன்றையும் பராமரிப்பதற்கு ஒரு கால அளவை வரையறுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு சொத்து வரி செலுத்துதல் ஆண்டுக்கு ஒரு முறையாக இருக்கலாம். கட்டடங்களை ரிப்பேர் செய்து பெயின்ட் அடிப்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரலாம். அதே போல் டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகள் சரியாக உள்ளனவா, அவற்றிற்கு டிவிடெண்ட், போனஸ் போன்றவை ஒழுங்காக வருகிறதா, இருக்கும் பங்குகளை அவ்வாறே வைத்துக் கொள்ளலாமா அல்லது விற்க/ வாங்க வேண்டுமா என்பதையெல்லாம் மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கவனிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு நன்கு பெர்ஃபார்ம் செய்கிறதா அல்லது மாற்றங்கள் தேவையா என்பதை ஆண்டுக்கு ஒரு முறையாவது பார்க்க வேண்டும். மேலும் வங்கிக் கணக்குகள், டெபாசிட்கள், இன்ஷூரன்ஸ், மற்றும் செல்வம் சார்ந்த அனைத்தையும் முறையாகக் கவனித்து வருவதன் மூலம்தான் நாம் நமது செல்வத்தை நன்றாகப் பராமரிக்க முடியும்.


இப்படி நன்கு பராமரித்த செல்வத்தை, உங்களுக்குப் பிறகு, யாருக்குச் செல்ல வேண்டும் என்பதையும் நீங்களே உயில் எழுதி வைத்து விடுவது சிறந்தது.

மெழுகுவர்த்தி - வைரமுத்து

தனக்காக அல்ல...
தன் திரிக்கரு
சிதைவதை
எண்ணியே
அந்தத் தாய்
அழுகிறாள்


மேனியில் தீ விழுந்து
நரம்புதான் எரியும்...
இங்கோ
நரம்பிலே தீ விழுந்து
மேனி எரிகிறது


மரணத்தை
வரங்கேட்டா
அந்த
உச்சித்தவம் நடக்கிறது?


அந்த ஒற்றைப் பூக்கொண்டை
செடியையே தின்னுகிறதே
விரலை அழிக்கவா
அந்த நெருப்புநகம் முளைத்தது?


நெருப்புப் பாசனம்
அங்கு
நீர்ப்பயிர் வளர்க்கிறது
மெளனத்தை
திரவ வார்த்தைகளால்
அந்தத் தீ நாக்கு
எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது?


எந்த துயரத்தை எழுதியெழுதி
இப்படி மசிகசிகிறது இந்தப் பேனா?


கண்டு சொல்லுங்கள்
கண்ணெதிரே நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?


எப்பொழுதுமே இதற்குத் தேய்பிறையென்றால்
இது என்ன
சபிக்கப்பட்ட நிலவா?


இந்தத்
தீக்குளிப்பின் முடிவில்
மரணத்தின் கற்பு ருசுவாகிறது


இந்தச் சிதையைக் -
கலங்கரை விளக்காய்க் கருதி
விட்டில் கப்பல்கள்
முட்டி மூழ்கும்


அங்கே வடிவது
கண்ணீரென்றால்
கண்கள் எங்கே?


ஓ கண்களைத் தேடியே
அந்த அழுகையோ?


இந்தப் பிணத்திற்குக்
கொள்ளி வைத்த பிறகு தான்
உயிர் வருகிறது


மனிதனைப் போலவே
இந்த
அஃறிணையும் நான்
அதிகம் நேசிப்பேன்


எனக்குள் இது
சாவைச் சாகடிக்கும்
என் இரத்த நெய்யில்\
இது
நம்பிக்கைச் சுடரேற்றும்


வாருங்கள் மனிதர்களே
மரணத்திற்கும் சேர்த்து நாம்
மெளன அஞ்சலி செலுத்துவோம்


அதோ
உயிரின் இறுதி ஊர்வலம்
உடல்மேலேயே நடக்கிறது.

Monday, July 12, 2010

கெரமல் கேக்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 170 கிராம்

வெண்ணெய் - 115 கிராம்

பொடித்த சர்க்கரை - 115 கிராம்

பெரிய முட்டை - 2

பேகிங் பவுடர் - 2 தேக்கரண்டி

ஜாம் - 30 கிராம்

பால் - ஒரு தேக்கரண்டி

கெரமல் செய்வதற்கு:

தண்ணீர் - 50 மில்லி

சர்க்கரை - 50 கிராம்

செய்முறை:


கெரமல் செய்முறை:

சர்க்கரை 50 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பி வைத்து சூடாக்கவும்.

சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.

கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.

கெரமல் கேக் செய்யும் முறை:

பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும்.

முட்டையின் வெள்ளை கருவையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கவும்

இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும். வெள்ளைக் கருவை நன்றாக அடிக்கவும்.

மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும்.

கெரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.

நன்றாக அடித்த முட்டை வெள்ளை கருவை போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும்.

7 அங்குல கேக் பேக் செய்யும் 2 தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.

கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 30 இருந்து 40 நிமிடம் வரை பேக் செய்யவும்.

இதோ கெரமல் கேக் தயார்

இன்றைய மங்கை
பெண்களே....................!


எங்கேயோ போய்கொண்டிருகுது
உலகமுங்க
அதில் தெரிந்து கொள்ள
பலதும் இருக்குதுங்க
அதை நான் சொல்லுறேன் கேட்டுக்குங்கஆணுக்கு நிகர் சம உரிமை கேக்குறீங்க
அவங்கள விட நீங்க உசத்தின்னு தெரிஞ்சுக்குங்க
ஆண்களே நீங்க கடுப்பாகாதீங்க
பெண்கள் உலகம் கெட்டு கிடக்குதுங்க
எப்படின்னு நீங்களும் தெரிஞ்சுக்குங்கஆணுக்கு நிகராய் அனைத்துத் துறைகளிலும்
பெண்களே நீங்க கலக்குறீங்க
அதுக்கு காரணமும்
பெண்கள் பலம் தாங்கதாய்மாரே நீங்க மகளை
கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறீங்க
சாதிக்க வேண்டி வெளிநாடு அனுப்புறீங்க
உங்களுக்கு கிடைக்காதத கொடுக்குறீங்கநல்ல கல்வி அறிவு,
கைநிறைய சம்பாதிக்கும் ஆற்றல்,
வேலை இடத்தில் பெரிய பொறுப்பு
எல்லாம் பெற்றிருந்தாலுங்க
வீட்டில் அவள் எத்தனை பொறுப்புகளை
நிர்வகிக்கும் திறமையை பெற்றிருக்காங்க ????படித்து பணிக்குச் சென்றாலும்
அவள் ஒரு இல்லத்தரசியாக
வாழ்ந்து ஆகணுங்க ...............எத்தனை வேலைகளை
பெண்கள் வீட்டில்
பழகி வச்சிருக்காங்க ??
எத்தனை பெண்களுக்கு
சமைக்கத் தெரியுதுங்கசமையல் கட்டு பக்கம் கூட
நான் போனதில்ல
என்று தற்போது பெருமை
அடித்துக் கொள்ளுறீங்க
இது சரியா?ஒரு வீ‌ட்டை ‌நி‌ர்வ‌கி‌க்க வேண்டிய
பெண்ணிற்கு அடிப்படை வேலைகளையும்,
அணுசரித்துப் போகும் பக்குவத்தையும்
அம்மா தானே சொல்லிக்கொடுக்கணும் ............


Friday, July 9, 2010

ஒற்றைகுயில்
  பாலைவனத்திலும்

பருவராகம் இசைக்கும்

அழத்தெரியா

இவ் ஒற்றைகுயில்

                                       
                                                            

உறக்கம்


நீண்ட கால பயணத்தின்
      ரணம் தெரியா நிம்மதியான
        உறக்கம்
என்னுள் ஒரு ஏக்கம்