தோழனே
எங்கோ பிறந்த நாம்
எப்படியோ சந்தித்து
நண்பர்களாகி
நட்பெனும் கொடியில் பூக்களானோம்
என் வாழ்வில்
இனிய உறவாய்
அன்பு தோழனாய்
ஒரு ஆலோசகனாய்
நுழைந்தாய் .....
தினம் தினம்
மறக்காத
சுக விசாரிப்பு
sms கள்,
சில சண்டைகள்
சமாதானங்கள்.
fb comments
வலைப்பூ பகிரல்கள் என் தொடர்ந்த
நம் இணைப்பு
இனியும் தொடரும் எனும் நம்பிக்கையில்
உன் நண்பி
நீ இவள் உறவில் பங்கெடுத்த போது
அன்பினால் கலங்கிய விழிகள்
இன்று நீ கொஞ்சம் தூரம் போகிறாய் என்றதும்
ஈரமாகிறது .
என்ற போதும்
நீ சாதிக்க வேண்டியவை,
அடைய வேண்டியவை
வெல்ல வேண்டியவை பல
அதற்காய் உன் மேல படிப்பு
என் நண்பன் வென்று வர
இவள் என்றும் துணை இருப்பாள்
உன் பயணம் சிறக்க
நீ வாழ்வில் மேலும் வளர
உன் மேல் படிப்பு வெற்றி பெற
வாழ்த்துகள் டிலீப்
"தோழா வானம் தூரம் இல்லை "