
அகம் இன்றி
கதிகலங்கி
திக்குதேடி
அம்மா என்றழைக்க
கடுமையாய்
திட்டினான் வேற்றினத்தான்
அந்தம் தேடி
கனடா சென்று
திக்கற்றவனாய்
அமைதியற்று
கண்டதெல்லாம்
திரைக்குப்பின்னால் (சொல்லமுடியாதவை)
அக்கா தங்கை
கணவன் இழந்து
திகைத்திருக்க
அகம்
கலங்கி
திக்குமுக்காடி
அழுத்தம் தாங்காது
கண்ணீருடன்
திலக் தீக்குளித்தான்
அமெரிக்கா
கவனிக்க தமிழில்
கவனிக்க தமிழில்
திரைப்படமானது
அகதி இவன்
கதை
தீவிரவாதி" என்ற பெயரில்
0 comments:
Post a Comment