Thursday, July 29, 2010

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ப்ரிட்ஜ்ஜில் வைக்கலாமா?















நாம் அன்றாட குளிர்பானங்கள் மற்றும்
பிரபல நிறுவனங்களின் தண்ணீரினை
பாட்டில்களில் வாங்கி குடித்து விட்டு ,
அவற்றை ப்ரிட்ஜ்ஜில் தண்ணீரை குளிர்ச்சிபடுத்த
அந்த பாட்டில்களில் நிரப்பி வைத்து குடித்து வருகிறோம்.
இது எல்லாரும் செய்வது தான்.

இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில்
பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொன்றும் தரம் பிரிக்கப்படுவதாகவும்
அவற்றின் தரம் பிளாஸ்டிக் பாட்டில்களின்அடிப்பகுதியில்
ஒரு முக்கோணத்தில் 1,2,3,4,5,6 என ஏதாவது ஒரு எண்
குறிப்பிடப்பட்டு இருக்கும். பொதுவாக எல்லா நிறுவன தண்ணீர்
பாட்டிகளிலும் 1 ம் எண் போடப்பட்டிருக்கும்

இந்த பாட்டில்களை ஒரு தடவைக்கு மேல் உபயோகிக்க கூடாது.
இதில் தண்ணீர் நிரப்பி குளிர்சாதன பெட்டியில் வைத்து குடிப்பது
உடல் நலத்துக்கு கெடு விளைவிக்கும் .
அடிப்பாகத்தில் 5 அல்லது 5 க்கு மேற்பட்ட எண்ணிடப்பட்ட பிளாஸ்டிக்
பாட்டில்களை தண்ணீர் நிரப்பி குடிக்க பயன்படுத்தலாம் .
5 அல்லது 5 க்கு மேற்பட்ட எண்ணிடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை
குழந்தைகளுக்கு பள்ளிக்கு தண்ணீர் கொடுத்து அனுப்பும் பாட்டிலாக பயன்படுத்த வேண்டும்.5 ஆம் எண்ணுக்கு குறைவான எண்ணுள்ள பாட்டில்களகுழந்தைகளுக்கான ஏன் நாமும் குடிநீர் பாட்டிலாக பயன்படுத்த கூடாது.



கண்ணாடி பாட்டில்கள் அல்லது எவர்சிலவர் பாட்டில்களை குடிநீர் பாட்டிலாக பயன்படுத்துவது சால சிறந்தது.
தற்போது பிடிங் பாட்டில்கள் கூட மட்டமான பிளாஸ்டிக் பாட்டிலாக
வருகின்றன. குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நமது
மனநிலையினை என்ன சொல்ல.
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இது பற்றி தெரிவித்து விழிப்புணர்வு
எற்படுத்துவது நமது கடமையாகும்.
               
                       தகவல் . இந்த வார குமுதம்

0 comments:

Post a Comment