Sunday, January 2, 2011

ஹரிணியின் புத்தாண்டு சபதங்கள்

                                           
                                                                    

          வருடம் வருடம் புது ஆண்டு பிறக்கின்றது. நாங்களும் கொண்டாடுகின்றோம் ,அந்த கொண்டாட்டத்துடன் எல்லோரும் போல் நான் ஒவ்வரு வருடமும் சபதம் என்று எடுப்பதில்லை.என நண்பர்கள் ஒவ்வொரு    வருடமும் தங்கள் புத்தாண்டு சபதங்கள் பற்றி என்னோடு பகிர்ந்து கொள்வார்கள்.பிறகு அதை கடைபிடிக்கிறார்களா?என்று பார்த்தால் அவர்களே அதை மறந்து விட்டிருப்பார்கள் அல்லது கடை பிடித்திருக்க மாட்டார்கள் 
        சரி மற்றவர்கள் சொந்த கதை சோக கதை எதற்கு ?? நம்ம கதைக்கு வருவோம்.நான் இன்று வலைப்பூ    பதிவுகளுக்கு சென்ற போது  நிறைய பேர் தங்களது புத்தாண்டு சபதம் பற்றி போட்டிருந்தார்கள் 
அதில்நம்ம Philosophy  பிரபாகரனும் ஒருவர்.

சரி அப்போ இந்த வருடமாவது நம்ம சில சபதங்கள் எடுத்துதான் (கண்டிப்பாக 
நிறைவேற்றும் முயற்சியில் ) பார்ப்போமே என 5 சபதங்கள் எடுத்துள்ளேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்லாம் என நினைத்தேன் வாங்க பழகலாம் sorry வாங்க பாக்கலாம்


சபதம் 1கோபத்த குறைச்சி அமைதியானவளா மாறனும்
                                                                         
                                                
       ஏனோ ரொம்ப அமைதியா இருந்த நான் ஒரு வருடமா கொஞ்சம் வாய் ,நிறைய கோபம் என மாறிவிட்டேன். வீட்ல அம்மாட்டயும் இதனால் ஏச்சி வாங்கிறதும் கூடி போச்சி. அதோட சில நேரம் நண்பர்கள் மேல எதுக்கெடுத்தாலும் கோபப்படுவது ஒன்னும் இல்லாதவிஷயத்திற்கும்  சண்டை  பிடிப்பது என எல்லாமே அதிகமாய் போச்சி அதனால் 2011 ல் கோபத்த குறைச்சி அமைதியானவளா மாறனும் என்பது முதல் சபதம் 

சபதம் 2 :  Facebook  வாரத   குறைக்கணும் 

                                                                 
                      Facebook  காலங்கலானாலும் நான் கணக்கு தொடங்கியது 2009      ஜூன் தான்ஆனாலும் என்னுடைய மற்ற நண்பிகளை விட இதில் என வளர்ச்சி அபரிமிதமானது. ஒருநாள் கூட ஏன் ஒரு மணித்தியாலம் கூட நான் போகாமல் இருந்ததில்ல அப்படி ஒன்றி விட்டது. இப்படி இருப்பதனால் என் தொலைபேசி கட்டணம் எகிறியது மட்டும் இல்லாமல் நிறைய பேர் எனக்கு அறிவுரை கூட சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். என் நண்பிகள் உன் புருஷன் தானே Facebook   என்று கூட கிண்டல் பண்ணுவார்கள்.கடந்த வருடத்தில் என் வாழ்கையில் சில மாற்றங்கள் ஏற்பட கூட இது காரணம் :(
அதனால் இந்த வருடத்தில் இருந்து கொஞ்சம் அதையும் குறைச்சிக்கலாம் என்று இருக்கன். என்ன சொல்லுறீங்க ??   any objections and suggestions  ????   

சபதம் 3 :சேமிப்பு  பழக்கம்

                                                        
                   காசு சேமிப்புனா என்னனு கேகுறவள் நான். வர சம்பளத்துல சேமிக்கிதே இல்லன்னு எல்லாரும் என்ன சொல்லுவாங்க என்னுடைய நண்பன் ஒருவன் எப்போதுமே நீ ரொம்ப செலவழிக்காத காசு ரொம்ப முக்கியம் சேறு சேறு என்றே சொல்லிட்டு இருப்பான் அதனால் இந்த வருஷத்தில இருந்தாவது கொஞ்சம் காசு வங்கில போடலாம்னு நினைச்சிருக்கேன். நல்ல பழக்கம் தானே ???சொல்லுங்க 


சபதம் 4: வலைப்பூ பதிவுகள்

                                      
நான் வலைப்பூ ஆரம்பித்து 6 மாதங்கள் ஆனா போதும் அநேகமாக கவிதைகள் பதிவிட்டேனே தவிர தொடர்ந்து பதிவிடுவதில்லை. என் நண்பன் டிலீப் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பான் "பதிவு போடலையா நீ ? போடு போடு இல்லாட்டி பிளாக்கர் பூட்டிட்டு போக வேண்டியது தான் என திட்டிட்டே இருப்பான் அதனால் இந்த வருடமாவது ஒழுங்கா பதிவுகளை போடலாம் என இருக்கேன் மற்றும் கவிதையா போட்டு அறுக்காம புதிய விஷயங்களையும் தரலாம் என்று இருக்கேன் அதுக்கு உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது .சபதம் 5: iPhone வாங்குறது 
                                                        
                      கடைசி சபதம் எப்படியாவது இந்த வருஷம் நான் iPhone வாங்கியே தீரனும். budget போட்டு செலவழிச்சி வாங்கலாமுன்னு நினைச்சிருக்கேன்.                     அப்பாடியோ  ஒரு மாறி என் புத்தாண்டு சபதங்கள சொல்லிட்டேன் அதை நிறைவேற்றுனனா இல்லையா என்றத இந்த வருஷ கடைசில சொல்லுறேன்.எல்லாருக்கும் பிறந்த புத்தாண்டு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் 

"நல்லா இருப்போம் நல்லா இருப்போம்  எல்லோரும் நல்லா இருப்பம்"


Reactions:

22 comments:

புது வருட வாழ்த்துக்கள்... சகோதரி...

கடைசி சபதத்தை மட்டும் தியாகம் பண்ணிடுங்கஜி... அதுல என்ன சந்தோசம் இருக்குன்னு தெரியல... இல்ல நீங்க ரொம்ப ரிச் பேமிலின்னா தாராளமா வாங்குங்க...

its nice to see my name in your post... thanks...

இவ்வருடத்தில் வாழ்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

hehe delip maathiri yaaraalayum continious'a post podelaathu!!lol

ஹா..ஹா....
ஹரிணி கலக்கிடிங்கா...
இந்த வருடம் முதல் எனக்கு தொடர்ந்து பதிவு எழுத முடியாமல் போகும்
நீங்களாவது கன்டிநியுவ் பண்ணுங்க ஹரிணி

//mynthan siva said...
hehe delip maathiri yaaraalayum continious'a post podelaathu!!lol//

LoooooooooooooooooooooooooooL

கடைசி சபதம் எப்படியாவது இந்த வருஷம் நான் iPhone வாங்கியே தீரனும்.//

வித்தியாசமான சபதம்தான்
உங்களுக்கும் எனது தாமதமான புத்தாண்டு வாத்துக்கள்

//ம.தி.சுதா said...
புது வருட வாழ்த்துக்கள்... சகோதரி.//

நன்றி ம.தி.சுதா, உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

//Philosophy Prabhakaran said...
கடைசி சபதத்தை மட்டும் தியாகம் பண்ணிடுங்கஜி... அதுல என்ன சந்தோசம் இருக்குன்னு தெரியல... இல்ல நீங்க ரொம்ப ரிச் பேமிலின்னா தாராளமா வாங்குங்க..//

நன்றி பிரபாகர் உங்கள் அறிவுரைக்கு :)
அதுக்குன்னு நான் rich இல்லப்பா

//Philosophy Prabhakaran said...
its nice to see my name in your post... thanks...//
you are most welcome :)

//Balaji saravana said...
இவ்வருடத்தில் வாழ்வு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)//
நன்றி Balaji saravana , உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் :)

//mynthan siva said...
hehe delip maathiri yaaraalayum continious'a post podelaathu!!lol//

ஆமா ஆமா :)

//டிலீப் said...
ஹா..ஹா....
ஹரிணி கலக்கிடிங்கா...
இந்த வருடம் முதல் எனக்கு தொடர்ந்து பதிவு எழுத முடியாமல் போகும்
நீங்களாவது கன்டிநியுவ் பண்ணுங்க ஹரிணி//

அப்படியா?? எல்லாம் உங்க ஆசீர்வாதம் குருவே:p
அப்படியெல்லாம் இல்ல, எழுதலாம் எழுதலாம் :)

//மகாதேவன்-V.K said...
கடைசி சபதம் எப்படியாவது இந்த வருஷம் நான் iPhone வாங்கியே தீரனும்.//

வித்தியாசமான சபதம்தான்
உங்களுக்கும் எனது தாமதமான புத்தாண்டு வாத்துக்கள்//

நன்றி மகாதேவன், உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள்

பிந்திய புதுவருட வாழ்த்துகளுடன்....தங்கள் சபதங்கள் நிறைவேறவும் வாழ்த்துகள்...

ஃஃஃகோபத்த குறைச்சி அமைதியானவளா மாறனும்ஃஃஃ
முயற்சி பண்ணுங்க....!அதற்காக எப்போதும் அமைதி கூடாது...

ஃஃஃFacebook வாரத குறைக்கணும்ஃஃஃ
he he he...இது முடியாதே...ஆனால் முடியும்

ஏனையவை...சிறப்பு....

உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் ஜனகன் :)

//ஃஃஃFacebook வாரத குறைக்கணும்ஃஃஃ
he he he...இது முடியாதே...ஆனால் முடியும்//
முடியும் முடியும்:P

நன்றி ஜனகன் :)

நல்ல சபதம்தான். நல்ல பதிவா போடுங்க.அதுபோக இணைய கைபேசி அதெல்லாம் சின்ன விஷயம் தானே. உங்களது எல்லா சபதமும் நிறைவேற வாழ்த்துகள்.

நன்றி நன்றி இனியவன்

சபதங்கள் நிறைவேறட்டும் சீக்கிரமே :-))

நன்றி நன்றி அமைதிச்சாரல் :)

நல்ல சபதங்கள் !!

Post a Comment