.
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
மேகங்கள் போலே உறவுகள் வரும் போகும்
ஒரு வருடம் முடிய புதிய வருடம் பிறக்கும்
என் வாழ்வில் 2010
இதமாய் ஆரம்பித்து
உறவுகள் பல சந்தித்து
உயிர் சுமக்கும் காதலுடன்
உயிர் பிழிந்த பிரிவையும் கண்டு
மனம் நொந்து
ஊன் வெறுத்து
என் உருமாற்றி செல்லும்
2010 ம் ஆண்டே
face book என் வாழ்வின் பகுதியாய்
ஆனதும்,
டிலீப்,.நிரோ , மேனகா என பல சொந்தங்கள் அறிமுகப்படுத்தி
இன்பமான நிலை தந்து செல்லும்
இந்த 2010 ம் ஆண்டே
வலிகள் மறக்க
என் உணர்வுகள் வெளிப்படுத்த
என் மலைச்சாரலை ஆரம்பித்து
பதிவுலக நண்பர்கள் பலரையும்
கருத்துகள் பரிமாற அறிமுகப்படுத்தி
அமைதியாய் செல்லும்
2010 ம் ஆண்டே
இறுதியில்
புது விடியலுக்கான எதிர்பார்ப்பு
நம்பிக்கைக்கான அடித்தளம்
விடியலுக்கான தேடல்
ஒரு புதிய உறவின் அறிமுகம்
அனைத்தையும் விதைத்து விட்டு
என் வாழ்வில் மறக்கா
என் எண்ணங்களில்
உயிரில், ரத்தத்தில் ஞாபகங்களை
விதைத்து விட்டு செல்லும்
2010 ம் ஆண்டே
சென்று வா
12 comments:
என் வாழ்வில் மறக்கா
என் எண்ணங்களில்
உயிரில், ரத்தத்தில் ஞாபகங்களை
விதைத்து விட்டு செல்லும்
2010 ம் ஆண்டே
சென்று வா///
அட டா என்ன வரி....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி சௌந்தர்:)
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Kousalya :)
ஹா..ஹா... அருமை .
என்னமா கவுத எழுத்து புள்ள....
ஹரிணி கவிதை சூப்பர்
என் அன்பு காளிக்கு சாரி தோழிக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Grrrrrrrr :@
அப்படியா??, 2011 யாவது உன் வாலு தனம் குறையட்டும்
உனக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் harini
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரஷா
கவலைகள் அனைத்தும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சி குடிபெற என் வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ.ஜெ
அருமை....
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
மேகங்கள் போலே உறவுகள் வரும் போகும்
ஒரு வருடம் முடிய புதிய வருடம் பிறக்கும்
ம்ம்ம்ம்....super...இதுவே விதி...
மிக்க நன்றி ஜனகன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்:)
Post a Comment