Sunday, December 5, 2010

நெஞ்சே....!



இமைக்கும்   நொடிப்பொழுதில் 
என் அருகில் இல்லா
உன் உருவம், 
காற்றில் வரும் 
நின் கானம், 
எனை   விட்டு சென்ற 
உன் மனம் .........
தேடல் தொடரும்   
 எண்ண அலை மீறல் 

எட்டா வான் நீ 
தொடரும் மதி நான் 
பட்டமாய் பறக்கும் 
மன எண்ணல்கள்
அடம் பிடிக்கும் குழந்தையாய் 

என்னென்று புரியும்
நொடிக்கொரு முறை 
உன் பெயர் சொல்லும் 
என் மனம்
 நீ மேகத்தின் சொந்தமென 
எல்லாம் மாறிப்போன பின்னும் 
மாறத்தெரியா நிலவாய் நான் ................

11 comments:

ஃஃஃஃஃஃஎட்டா வான் நீ
தொடரும் மதி நான்ஃஃஃஃஃ

அருமையான வர்ணனை வாழ்த்துக்கள்.. சகோதரி..

அதெல்லாம் சரி.. மதி புவியை அல்லவா சுற்றுவதாக அறிந்திருந்தேன்.... சரி சரி அது மேலே போகும் போது தான் தேய்கிறதோ

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

//ம.தி.சுதா said...
அதெல்லாம் சரி.. மதி புவியை அல்லவா சுற்றுவதாக அறிந்திருந்தேன்.... சரி சரி அது மேலே போகும் போது தான் தேய்கிறதோ

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

மேலே இருப்பதால் தான் தேய்கிறது போல

நன்றி சுதா :)

//எட்டா வான் நீ
தொடரும் மதி நான் //

மதி யாரு ???
அழகாய் இருக்கிறது கவிதை

டிலீப் said...
//எட்டா வான் நீ
தொடரும் மதி நான் //

மதி யாரு ???
அழகாய் இருக்கிறது கவிதை//

வாங்க டிலீப்
அதிலேயே விடை இருக்கே

மதி நீங்கதான்னு தெரியுது... ஆனா கெரகம் புடிச்ச வான் தான் யாருன்னு தெரியல :)

மாறத்தெரியலயா?மாற முடியலயா?

மேகம் யாருன்னு சொல்லுங்க ,முடிச்சிருவோம்...

வாங்க philosophy prabhakaran
வேணாம் விட்டுடுவம் :))

வாங்க ஹரிஸ் :))
வேணாம் விட்டுடுவம் பாவம் ;)

எங்கங்கயோ சுத்தி கடைசியா பாதை மாறி உங்களின் வலைப்பூவிற்கு வரநேர்ந்தது தோழி...
வந்தது மகிழ்ச்சியே...
வேற எதாவது சங்கதின்னா அப்படியே அப்பீட் ஆகியிருப்பேன்...
கவிதைங்கறதால படிக்கலாம்னு தோனுச்சு....
நல்லா இருக்கு தோழி.... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்....

நன்றி ஜெயசீலன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

உங்கள் தொடர் வருகையும் கருத்துக்களும் என்னை மேலும் ஊக்குவிக்கும் :)

Post a Comment