Friday, November 12, 2010

போதை






"போதை என்பது 
ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து  குடிச்சா அது 
சோசலிசம் தான் " 

தத்துவங்கள் பிறப்பது 
தவறுகளில் 
இருந்தும் அது நம்மையே 
அழித்துவிடுமானால்
மதிகெட்ட  உலகமயமாக்களே    
மதிகெட்டு மங்கையர் 
சீரழிய விதயாகியதேன் ???
மேலை நாடு மோகம் 
மேன்மை கேட்டு நாம் திரிய 
இன்றைய  இளைய சமுதாயம் தறிக்கெட்டு 
நிற்கின்றது 


ஓபியம் , அபின், பிரவோன் சுகர் , 
அகீஷ் ,ஹெரோயின், மார்முவானா 
வகை வகை போதைகள்,
ஜின் ,ரம், வொட்கா, 
இன்னும் குடிவகைகள் 
பெண்களிடை பிரபலம் 
நைட் கிளப், டேட்டிங் 
வெள்ளிக்கிழமை 
களியாட்டம் , 
 முன்னர் விரதம் இன்றோ 
விநோதம் 

கல்லூரி பெண்கள் முதல் 
கண்டிப்பு கூடிய நிலை 
பெற்றோர் கவனியா 
தனிமையின் விரக்கதி 
ஒழுங்கற்ற நண்பர் அறிமுகம் 
வாழ்கையில் ஏமாற்றம்
போதையை பரீட்சிக்கும் ஆர்வம் 
இன்பம் தரும் நம்பிக்கை 
அதிக பணப்புழக்கம் 
அத்துமீறிய சுதந்திரம் 
அண்மையிலேயே போதை விற்பனை 
எல்லாமே இப்பெண்கள் 
திசை மாற துண்டில்கள் 

 எத்தனை துன்பம் 
எத்தனை சோதனை 
எவ்வளவு விரக்கதி 
இருப்பினும் 
இதுவல்லவே வழி 
சிந்தும் விஷதுளிகள் 
அணுவணுவாய் கொல்ல
உன் நிலை மாறாது

மாய  வலையில்  சிக்கி தவிக்கும் 
பெண்ணினமே மீண்டெழு 
 குடி மகளாய் இல்லாது 
குலம் விளங்க வழி  தேடு 

14 comments:

அற்புதமான, தேவையான கவிதை.

நன்றி நண்பரே
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

//முன்னர் விரதம் இன்றோ
விநோதம்//

முன்னர் வெள்ளிக்கிழமை என்றால் கோவில்
இப்போ வெள்ளிக்கிழமை என்றால் டிஸ்கொதிக்

இதை கவிதை என்று சொல்லுவதா இல்லை பெண்களுக்கான அறிவுரை என்று சொல்லுவதா??
சமகாலத்தில் தேவையான ஒன்று ஹரிணி
வாழ்த்துக்கள்

வாங்க டிலீப்
ஆமாம் பெண்களின் நிலை பார்த்து
அவர்களுக்கான அறிவுரை என்றே சொல்லலாம்

ஆஹா..ஆஹா என்ன எதிர்பார்த்து இருந்திக போல....

ம் இருக்கும் இருக்கும் :)

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

நன்றி ஹரிஸ்
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்

படத்திற்கு ஏற்ற அருமையான அறிவுரை கவிதை

நன்றி மகாதேவன்-V.K
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.
உங்கள் தொடர் கருத்தும் வருகையும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும்.

நன்றி

கவிதை நல்ல சவுக்கடி

அப்படியா?
நன்றி நன்றி அருண் :)

Post a Comment