Friday, November 26, 2010

சில நிமிடங்கள்




எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது
கனவில் மட்டும்  
நனவாகும் காட்சிகளை,
சிறுப்பிள்ளை தனமான  
குறும்புகளை 
இளமை கால சேட்டைகளை 
எல்லாம் செய்யும் 
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது

எனக்கே சொந்தமான
ஒரு உறவின் தோள் சாய்ந்து
கைகோர்த்து நடக்கும் 
முடிவிலியான பாதையில்
பூக்கள் தூவி வரவேற்பதாய்
துவானம், அதில் 
நம்மை மறக்கும் 
சில கணங்கள்        
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது

நட்பின் அரட்டையில் 
நண்பனின் மொக்கை  ஜோக்ஸும் 
நண்பிகளுடன் சினிமா, Shopping 
உணவுச்சாலை,Beach  என தொடரும் 
எனக்கே எனக்கான 
சில நிமிடங்கள் 
வாழப் பிடித்திருக்கிறது

18 comments:

//எனக்கே எனக்கான
சில நிமிடங்கள்
வாழப் பிடித்திருக்கிறது
கனவில் மட்டும்
நனவாகும் காட்சிகளை,
சிறுப்பிள்ளை தனமான
குறும்புகளை
இளமைகால சேட்டைகளை
எல்லாம் செய்யும்
எனக்கே எனக்கான
சில நிமிடங்கள்
வாழப் பிடித்திருக்கிறது//

கவிதையின் மூலம் நான் சிறுபிராயத்துக்கே சென்றுவிட்டேன்
வாழ்த்துக்கள் ஹரிணி

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

அப்படியா ? நன்றி டிலீப் :)

நன்றி ம.தி.சுதா :)

நல்லாருக்கு,,

எனக்கே எனக்கான
சில நிமிடங்கள்
வாழப் பிடித்திருக்கிறது//
ஓகே வாழுங்கள்...

//நண்பனின் மொக்கை ஜோக்ஸும் //
நீங்க என்ன சொல்லலைல...

@Ivo Serentha and Friends
Thanks for the information. i'l have a look :)

நன்றி ஹரிஸ்
இருக்கலாம் இருக்கலாம் :)

இருக்கலாம் இருக்கலாம் :)//

ரைட்டு..(ஹரிஸ் be careful)

//
எனக்கே எனக்கான
சில நிமிடங்கள்
வாழப் பிடித்திருக்கிறது//
அருமையான வரிகள். உங்கள் கவிதைக்கு உயிர் கொடுக்கும் வரிகள்.
//ஒரு உறவின் தோல் சாய்ந்து // - தோல் என்பதை தோள் என்று மாற்றினால் சரியாக வருமா? சிறு கேள்வி.

அருமையாக உள்ளது சகோதரி.....
ஃஃஃஃஎனக்கே எனக்கான
சில நிமிடங்கள்
வாழப் பிடித்திருக்கிறதுஃஃஃ
பிடிச்சிருக்கு....
அதிகமா நாங்க அடுத்தவர்களுக்காக தானே வாழுகிறோம்...எங்கே நமக்காக வாழ முடிகிறது...சிறந்த ஆதங்கம்......

ஆனால் கவிதை முற்றுபெறவில்லை(போல இருக்கிறது) என்பதே என் ஆதங்கம்....(தனிப்பட்ட கருத்து
-ஜனகன்

Arun said...//
எனக்கே எனக்கான
சில நிமிடங்கள்
வாழப் பிடித்திருக்கிறது//
அருமையான வரிகள். உங்கள் கவிதைக்கு உயிர் கொடுக்கும் வரிகள்.
//ஒரு உறவின் தோல் சாய்ந்து // - தோல் என்பதை தோள் என்று மாற்றினால் சரியாக வருமா? சிறு கேள்வி.

நன்றி அருண்
நீங்கள் சொன்னது சரி நன்றி :)

@ ஜனகன்
நன்றி, அப்படியா ??
நிறைய கனவுகள் இருப்பதால் "முற்றும்" வைக்க முடியவில்லை.....

நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் :)

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..

Post a Comment