எண்ணங்களே எழுத்துக்களாய்
எழுத்துக்களே வடிவங்களாய்
என் இதயத்தில் கால் பதித்த
இனியவனே !
உன் நெஞ்சம் என்னை மறந்த போதிலும்
நான் இறந்து மண்ணோடு மக்கி
புழுவாய் போனாலும்
உன்னை நினைத்து என் மயானம் கண்ணீர்
வடித்து கவிதை எழுதும் !
அக்கொடியில் நீ தமிழ் மலராய்
நான் இக்கொடியில் பாலைவன ரோஜாவாய்
இருந்தும் என் புண்ணியவானே
உன் புன்னகையால் தான்
இப்புவியில் நடை பிணமாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இயங்குவதால்
உயிர் இருப்பதாக - எனை
இன்னும் குழியில் இடவில்லை
அங்கே நீ கண் இமைத்து மூடும்
ஒவ்வொரு நொடியும் தான்
இங்கே என் இதயம் துடிக்கிறது
என் நீலாம்பரி ராகமே
நீவிடும் முச்சு காற்றைத்தான்
நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
கண்களில் தொடங்கி
கண்காளால் பேசி
இதயத்தில் முடியும் காதல் வேறு
இதயத்தில் தொடங்கி
கண்களில் முடியும் காதல் வேறு - ஆனால்
உன் இதயத்தில் ஆரம்பித்து
என் உயிரில் முடிந்த காதல் நம்முடையது
6 comments:
//அக்கொடியில் நீ தமிழ் மலராய்
நான் இக்கொடியில் பாலைவன ரோஜாவாய்
இருந்தும் என் புண்ணியவானே
உன் புன்னகையால் தான்
இப்புவியில் நடை பிணமாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்//
நல்லா தான் கவித இருக்குன்கோ
நல்ல வரிகளை அழகாய் மாலையாய் கோர்த்து இருக்கிறீர்கள்...கடைசி இரு வரிகள் மிக ரசித்தேன்...
அனுபவமா? எப்படிதான் யோசிக்கிறீங்களோ..கலக்குறீங்க..
அப்படியாங்கோ டிலீப்.
நன்றிங்கோ :)
மிக்க நன்றி Kousalya :)
நன்றி நன்றி ஹரிஸ்
ஆமாம் அனுபவம் என்றே வைத்துக்கொள்ளுங்களே :)
Post a Comment