Monday, November 29, 2010

எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது



இன்றைய பதிவு ஒரு சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு வருகிறது.
"வெற்றிகரமான எந்த ஒரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்" என
 நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா, அது எந்தளவுக்கு உண்மை என்பதை உண்மையில் ஆண்கள் தான் கூற வேண்டும். 
சரி சரி அதை விடுவோம் கதைக்கு வருவோம்.
                       ஒருநாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவும் அவரது மனைவியும் தங்கள்  இரவு உணவு வேளையை வித்தியாசமாய் களிப்பதற்கு வெளியிலே செல்ல நினைத்து புறப்பட்டார்கள். வெளியே சென்ற அவர்கள் தங்கள் உணவிற்காய் ஒரு சாதரணமான விடுதிக்குள் நுழைந்தார்கள். 
அங்கு இருவரும் மனம் விட்டு கதைத்துக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த அவ்விடுதியின் உரிமையாளர் ஒபாமாவிடம் சென்று " சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் உணவின் பின் உங்கள் மனைவியுடன் கொஞ்சம் நான் தனியாக கதைக்கலாமா என் கேட்டார் ???
"என்னடா இவன் ஒரு நாட்டின்  ஜனாதிபதி நான் இருக்க நாட்டின் முதல் பெண்மணியுடன் என்ன கதைக்க போகிறான் என யோசித்துவிட்டு    
"சரி உன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது நீ என் மனைவியுடன் கதைக்கலாம் என் அனுமதி அளித்தார் 
                                                       சிறிது நேரத்தின்  பின் வந்து அமர்ந்த தன் மனைவியை பார்த்து ""என்ன இந்த விடுதி உரிமையாளன் உன்னோடு தனியாய் கதைக்க அப்படி ஒரு ஆர்வமாய் இருந்தான் ? " என ஒபாமா கேட்க , "ஓ அதுவா அவன் என் இளைமைக்காலத்திலே பைத்தியமாய் என் பின்னால் சுத்தியவன் என கூறினாள். ஓ அப்படியா அப்படி என்றால் நீ அவனை திருமணம் செய்திருந்தால் இந்த அழகிய விடுதியின் உரிமையாளியாய் இருந்திருப்பாய் என கூறி முடிக்கும் முன் அவள் "இல்லை இல்லை அவனை நான் திருமணம் செய்திருந்தால் இப்போது அவன் இந்நாட்டு ஜனாதிபதியாய் இருந்திருப்பான்" என்றால் புன்னகையுடன் :)
                 ஹி ஹி என்னங்க சொல்லுறீங்க இப்போ ? அதுதான் எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது :)

18 comments:

சிரிக்கவும் சிந்திக்கவும்
அருமையை ஹரிணி

நன்றி நன்றி டிலீப் :)

ஹி ஹி என்னங்க சொல்லுறீங்க இப்போ ? அதுதான் எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது :)//

ஹி,,ஹி.. ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல...

ஹி,,ஹி.. appo ok Haris :)

ஒபாமாவின் மனைவி அவரை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் தனக்கு இந்த வாழ்க்கை அமைந்திருக்காது என்று கூறாமல் தன்னை திருமணம் செய்தவர் ஜனாதிபதி ஆவார் என்று கூறியது அருமை. ரசிக்க வைக்கும் பதிவு !!

விடுங்க மேடம்... அந்த ஹோட்டல் அதிபராவது நிம்மதியாக இருக்கட்டும்...

சூப்பர் ஹரிணி :)

//philosophy prabhakaran said...
விடுங்க மேடம்... அந்த ஹோட்டல் அதிபராவது நிம்மதியாக இருக்கட்டும்..//

prabhakaran ஆஹா ஆஹா ஏன் நீங்க இப்படி?? :)

நன்றி Balaji saravana :)

Harini Nathan
//எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது//
ஆமாம் எந்த பெண்ணையும் தரக்குறைவாய் எண்ண கூடாது இதில் எனக்கு முழு உடன்பாடு

ஹோடல் உரிமையாளராய் வாழப்போகிறவரை விட ஜனாதிபதியாய் சாகப்போகிறவரை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சாமர்த்தியம் பெண்களுக்கு இருக்கிறதோ...!!



அடிக்கடி எழுதுங்க. வாழ்த்துக்கள்.

நன்றி ஹைதர் அலி
உங்கள் தொடர் வருகையும் பின்னூட்டலும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் :)

ஹ ஹா ஏன் இந்த கொலை வெறி Cool Boy கிருத்திகன். உங்களுக்கு ????
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள்
உங்கள் தொடர் வருகையும் பின்னூட்டலும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் :)

சூப்பர்...சிந்திக்க வைக்கும் பதிவு.....

உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றிகள் ஜனகன் :)

Post a Comment