Thursday, November 25, 2010

மெல்ல தமிழ் இனி சாகும்



கல் தோன்றி மண் தோன்றா 
கால முதுமை  மொழி  என 
நாம் பெருமைப்படும்
செம்மொழியாம் தமிழ்
மெல்ல தமிழ் இனி சாகும்

மூத்தோர் கொண்டாடிய 
கொஞ்சு தமிழ் -இன்று 
கொஞ்சும் தமிழாய் மாறி 
"என்கி டமில் கொன்சம் கொன்சம்
தெர்யும் ( நமிதா ஸ்டைல்) என
பேசும் போதும்
மெல்ல தமிழ் இனி சாகும்

ஆத்திச் சூடியின் இனிமை தெரியா
இளசுகள்
"ஆத்திசூ ஆத்திசூ" என
ரீமிக்ஸில் இனிமை காண்கையில்
 மெல்ல தமிழ் இனி சாகும்

தொலைக்காட்சி, வானொலி
நிகழ்ச்சிகள் எல்லாமே
ஆங்கில கலப்பில் தருகையில் 
அதையே பேசுவதை   பெருமையாய் கொள்கையில் 
மெல்ல தமிழ் இனி சாகும்

தமிழ் எழுத்துக்கள் 247 ல்
காணா வித்தை
26  ல் தேடி பெருமையடைகையில் 
பிள்ளைகளின்     ஆங்கில மொழி மூல
கற்கையில்  பெற்றோர் பெருமை பேசுகையில்
மெல்ல தமிழ் இனி சாகும்

கம்பன் வடித்த தமிழ்
வள்ளுவன் வாழ்ந்த தமிழ்
பாரதி பாடிய தமிழ் 
மூவேந்தர் போற்றிய தமிழ்
சங்கம் வைத்து வளர்த்த தமிழ்
கொள்ளை இன்பம் தரும் தமிழை
தங்லிஷாய்  பேசுகின்ற போது
மெல்ல தமிழ் இனி சாகும் 

19 comments:

//மூத்தோர் கொண்டாடிய
கொஞ்சு தமிழ் -இன்று
கொஞ்சும் தமிழாய் மாறி
"என்கி டமில் கொன்சம் கொன்சம்
தெர்யும் ( நமிதா ஸ்டைல்)//

அருமை ஹரினி

வாங்க டிலீப் நலம் தானே ?
நன்றி நன்றி :)

அருமையாக சொல்லியிருக்கீங்க..! வாழ்த்துகள் இதுபோன்று நிறைய பதிவுகள் படைத்திட...!!

நன்றி நன்றி பிரவின்குமார் :)

அருமை ஹரினி...


//"என்கி டமில் கொன்சம் கொன்சம்
தெர்யும் ( நமிதா ஸ்டைல்)//
:)..தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் பீட்டர் விட்டுகொண்டு இருக்கும் போது பிறமொழி பேசுபவர் தமிழை கற்றுக்கொண்டு இந்த அளவாவது பேசுகிறாரே, பாராட்ட வேண்டும்..

நன்றி ஹரிஸ் :)

உண்மைதான், ஆனால் நான் இங்கு நமிதாவின் ஸ்டைலில் கதைக்கும் தமிழர்களையே
எண்ணி எழுதினேன் நமிதாவை அல்ல :)
இம் நீங்க நமீதா ரசிகரோ

இம் நீங்க நமீதா ரசிகரோ//

இந்த ஆட்டத்துக்கு நான் வரல..

நம்ம இருக்கவரைக்கும் தமிழ் சாகாது..மொக்க போட்டாவது தமிழை வளர்ப்போம்...

தமிழை வளர்க்க தான் நீங்க இருக்கீங்களே !! கவலை எதற்கு ??

வித்தியாசமான நல்ல பதிவு

//மொக்க போட்டாவது தமிழை வளர்ப்போம் // வளத்துவோம் ...சகா

ஃஃஃதமிழ் எழுத்துக்கள் 247 ல்
காணா வித்தை
24 ல் தேடி பெருமையடைகையில்
பிள்ளைகளின் ஆங்கில மொழி மூல
கற்கையில் பெற்றோர் பெருமை பேசுகையில்
மெல்ல தமிழ் இனி சாகும்ஃஃஃஃ
நிச்சயம் கண்டிக்க வேண்டிய விடயம் இது...

ஃஃஃஆத்திச் சூடியின் இனிமை தெரியா
இளசுகள்
"ஆத்திசூ ஆத்திசூ" என
ரீமிக்ஸில் இனிமை காண்கையில்
மெல்ல தமிழ் இனி சாகும்ஃஃஃ
நல்ல வேளை பாடல் வருகையில் ஔவை இல்லை....


அழகிய தமிழ் பற்று கவிதை....

நல்ல தமிழ் வாழவேண்டுகிரீர் .
பாராட்டுகள் நல்ல தமிழ்
வளர இளைஞ்சர் கல்தான்
நல்ல வழிசமைக்க வேண்டும்
போளூர் தயாநிதி

Arun said...
தமிழை வளர்க்க தான் நீங்க இருக்கீங்களே !! கவலை எதற்கு ??

வித்தியாசமான நல்ல பதிவு
அப்படியா
நன்றி Arun

//ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ஃஃஃதமிழ் எழுத்துக்கள் 247 ல்
காணா வித்தை
24 ல் தேடி பெருமையடைகையில்
பிள்ளைகளின் ஆங்கில மொழி மூல
கற்கையில் பெற்றோர் பெருமை பேசுகையில்
மெல்ல தமிழ் இனி சாகும்ஃஃஃஃ
நிச்சயம் கண்டிக்க வேண்டிய விடயம் இது...

ஃஃஃஆத்திச் சூடியின் இனிமை தெரியா
இளசுகள்
"ஆத்திசூ ஆத்திசூ" என
ரீமிக்ஸில் இனிமை காண்கையில்
மெல்ல தமிழ் இனி சாகும்ஃஃஃ
நல்ல வேளை பாடல் வருகையில் ஔவை இல்லை....

அழகிய தமிழ் பற்று கவிதை...//

உண்மைதான்.நன்றி ஜனகன் :)

//polurdhayanithi said...
நல்ல தமிழ் வாழவேண்டுகிரீர் .
பாராட்டுகள் நல்ல தமிழ்
வளர இளைஞ்சர் கல்தான்
நல்ல வழிசமைக்க வேண்டும்
போளூர் தயாநிதி//

ஆமாம் ஆமாம்
நன்றி போளூர் தயாநிதி

தமிழ் மெல்லவும் சாகாது, மெல்லாமலும் சாகாது ! இப்படி கேனத்தனமாய் கவிதை என்கிற பேரில் உளராமல் இருந்தால் .......அது நம்மைப் போல் நன்றாய் வாழும் !

இந்த கவிதையில் எந்த வித கேனத்தனும், உளறலும் இருப்பதாக தெரியவில்லை
நடைமுறையில் நடப்பதை தான் தான் சொல்லி இருக்கிறேன் தமிழ் சாகக்கூடாது என்பதி வழியுருத்தவே எழுதினேனே தவற வேறொன்றும் இல்லை
கவிதை சொல்லப்படிடுக்கும் நடைமுறை சம்பவங்கள் எல்லாம் உண்மையே அதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது
இல்லதாதொன்றை சொல்லவும் இல்லை
சரவதேச பாடசாலை செல்லும் எத்தனை தமிழ் சிறுவர்களுக்கு தமிழ் தெரியும் சொல்லுங்கள் பலரால் எழுத முடிவதில்லை.
மிக நன்றி velumani1 உங்கள் வருகைக்கு

Post a Comment