Tuesday, November 16, 2010

அர்த்தநாரிஸ்வர அழகி"ஒரு புல்லாங்குழல்  ஊமையானது 
 ஒரு பூவின் மனம் காயமானது "


இறைவனின் படைப்பினிலே  எனக்கு சில வியப்பும் உண்டு கோவமும் உண்டு.
இன்று  என்ன  பதிவு  போடலாம்  என்ற  சிந்தனையுடன்  பேருந்தில்  பயணித்துக்கொண்டிருந்தபோது   என்  காதருகில்  ஒரு   குரல்  “ஐயோ  எனக்கு  வெட்கமாய்  இருக்குது  அதுவும்   முன்னுக்கே  உட்கார  முடியாதுடா  வேண்டாம்  நான்  நிக்கிறேன்  “என்று தான் நண்பனிடம் கூற
சற்றே  திரும்பி  பார்க்க,  என் அருகில்  ஒரு ஒரு பெண், நான் யோசிச்சேன் ஏன் அப்படி சொன்னாள்  என்று ?? அந்த சந்தேகத்துடன் இருக்க என் பக்கத்து  ஆசனம் காலி ஆக என் அருகில்உட்கார்ந்தாள்  அவள்.சிறிது நேரம் எல்லாரும் என்னையே பார்ப்பது போல் எனக்கொரு உணர்வு. பிறகு தான் புரிந்து கொண்டேன் என் பக்கத்தில் அமர்ந்திருப்பது ஆணும் இல்ல பெண்ணும் அல்ல இரண்டும் கலந்த ஒரு அரவாணி. 
                       உண்மையில் நான் அவர்களை கேள்விபட்டிருக்கிறேனே தவிர இவ்வாறு  அருகில் கண்டதில்லை. அப்போது எனக்குள் தோன்றியது அனுதாபம் அல்ல கோவம், இறைவன் மேலும் சுற்றி இருந்த மனிதர் மேலும்..
 எல்லோரும் ஏதோ பொருட்காட்சிக்கு வந்து புதினம் பார்ப்பது போல் ஒரு அதிசயமாயும்  கேலியாயும் பார்த்தார்கள்.சீ இவர்களும் மனிதர்களா ???
             நானே இப்படி சங்கடப்படும்  போது அவள் எப்படி இந்த உலகத்தில் வாழ்கிறாள் என்பதே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஒருவிதமான பேச்சும்,கூச்சமும் ,அவ்விடத்திலேயே செய்துகொண்ட முக அலங்காரமும் கடைசியில் என்னை பார்த்து செய்த புன்னகை எல்லாவற்றையும் ரசித்துகொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன் 

இறைவனின் படைப்பினிலே எல்லோரும் சமம். அவரவக்கு என சில இயல்புகளுடனும் குணங்களுடனும் தனித்துவம் மிக்கவர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இவ்வாறான  மனிதர்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டுமே தவிர ஏளனம் பண்ண கூடாது. அவ்வாறு பிறந்தது அவர்கள் குற்றமன்று,யாருமே உருவங்களையோ,மதங்களையோ பிறக்கும் முன் கேட்பதில்லை அல்லவா.
மனித நேயம் கொண்ட ஆறறிவு  ஜீவன்களே சற்று சிந்தித்து அவர்களுக்கான இந்த அர்த்தநாரிஸ்வர அழகிகளுக்கு அங்கிகாரத்தை கொடுங்கள் .

Reactions:

8 comments:

ஹரிணி கலக்கிடிங்க... தற்காலத்தில் அவசியமான பதிவு
அவர்களும் எங்களை போல் மனிதர்கள் என்பதை யாருமே புரிந்து கொள்ளவதில்லை
வாழ்த்துக்கள்

நன்றி டிலீப்
என் மனதை பாதித்த சம்பவம் இது.
நன்றி உங்கள் கருத்துக்கு

அவர்களும் நம்மை போன்ற உணர்ச்சிகள் உள்ள ஒரு மனிதர்களே என்று புரிந்துகொள்ளும் காலம் வரும்..நல்ல பதிவு..வாழ்த்துக்கள்...

நன்றி ஹரிஸ்
உங்கள் தொடர் வருகையும் கருத்தும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும்.

நன்றி

நானே இப்படி சங்கடப்படும் போது அவள் எப்படி இந்த உலகத்தில் வாழ்கிறாள் என்பதே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.
nalla pathivu akka valththukkal.

நன்றி Orin

உங்கள் தொடர் வருகையும் கருத்தும் என்னை மேலும் ஊக்கப்படுத்தும்.
நன்றி

"இறைவனின் படைப்பினிலே எல்லோரும் சமம்"

இதை எல்லோரும் உணரவேண்டும்

ஆம் மகாதேவன். அது தன உண்மை.
நன்றி.

Post a Comment