Monday, November 22, 2010

நவீன சுயம்வரம்


ஏதோ ஏதோ கலாச்சாரம் 
என்னெனவோ மாயம் 
எத்தனை எத்தனை மாற்றம் 
இக்காலத்தில் உருவாக்கம் 

மன்னர் கால பெண் பார்ப்பு
சுயம்வரம்
எட்டுத் திக்கு அரசர்கள்
அரண்மனை நிறைய
தோழிகள் புடை சூழ
பெண்ணவள் நாண......
இவளை அடைய நான் புண்ணியம் பெற்றவனோ
வீரமானவனோ???? என 
காட்டிய வித்தையில் அவள் மயங்கி
மன்னவன் கழுத்தில் மாலையிட
நடக்கும் சுயம்வரம்

காலம் செல்ல
ஆண்வீட்டார் குடும்பம்
அமர்திருக்க
பெண்ணவள் வெட்கத்துடன்
தேநீர் நீட்ட குடித்து விட்டு
பெண் பிடித்திருக்குது என
சீருடன் அனுப்புங்க
நடந்தது சுயம்வரம்

ஆனால் இன்று matrimony 
இமெயிலில் படம் பரிமாற
அல்லது தொலைகாட்சியில் பெண் ஜாதகம்
காண்பித்து படம் போடப்பட்டு அல்லது
உரிய பெண்ணுடனோ ஆணுடனோ
பெற்றோர் மேடையில் அமர்ந்திருக்க
கலியா மாலை நிகழ்ச்சியோடு
நடக்கும் நவீன சுயம்வரம் 

17 comments:

//ஆனால் இன்று matrimony
இமெயிலில் படம் பரிமாற
அல்லது தொலைகாட்சியில் பெண் ஜாதகம்
காண்பித்து படம் போடப்பட்டு அல்லது
உரிய பெண்ணுடனோ ஆணுடனோ
பெற்றோர் மேடையில் அமர்ந்திருக்க
கலியாண மாலை நிகழ்ச்சியோடு
நடக்கும் நவீன சுயம்வரம் //

டெக்னோலஜி மாறி போய்ட்டு ஹரணி

ஆமா ஆமா டிலீப்

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

நன்றி
ம.தி.சுதா

இதுவும் நல்லா இருக்கு..

நன்றி ஹரிஸ்:)

நல்லா இருக்கு... (ராக்கி சவந்தை சொல்லவில்லை...)

அது என்ன மழை சாரல் என்றில்லாமல் மலை சாரல்... பின் நவீனத்துவமா...

நன்றி philosophy prabhakaran :)
ஓ அதுவா, நான் மலையகத்தில் பிறந்தவள் என்பதால் அப்படி பெயர் வைத்தேன்
மலைக் காற்று என்பது அதன் அர்த்தம் ")

அருமையான பதிவு....
மலையக தென்றல் இதமாகவும் வெற்றியாகவும் வீச வாழ்த்துகள்.....

நன்றி நன்றி ஜனகன் :)

வர வர பொண்ணு கிடைக்கறது ரொம்ப கஷ்டமா போயிருச்சு .. கவிதைய படிச்சுட்டு ஒரே feelings

கவலை படாந்தீங்க Arun உங்க Phptoவையும் கல்யாண மாலைக்கு அனுப்பிரலாம் :)

ரொம்ப நன்றி ஹரிணி. அது அப்பா அம்மா department. அவுங்க பாத்துக்குவாங்க !! நேரம் இருந்தா என் blog பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க

http://arundiarypages.blogspot.com/

அருமை சகோதரி

வாழ்த்துக்கள்

ரொம்ப நன்றி மகாதேவன்-V.K :)

Post a Comment